81-மகா பெரியவா – அனுபவங்கள் ஆயிரம்


photo (20)

காஞ்சிபுரம் ச. வெங்கடேஸ்வரன் அவர்களின் அனுபவம்…

சிறுவயதில் இருந்தே மகா பெரியவரிடம் அளவற்ற அன்பும் பக்தியும் கொண்டவன் நான். எனது சட்டைப் பையில், எப்போதும் அவரது புகைப்படத்தை வைத்திருப்பேன்.

அவரது திருவுருவப் படங்கள் எங்கு கிடைத்தாலும், வாங்கி பத்திரப்படுத்துவது வழக்கம். இன்றும் அவரை அனுதினமும் வணங்கி, பிரார்த்தித்து வருகிறேன். அந்த கருணாமூர்த்தியின் அருட் கடாட்சத்தை மெய்ப்பிக்கும் ஒரு சம்பவம்:

நானும் என் மனைவியும் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்கள். எங்களுக்கு ஒரு மகன்; ஒரு மகள்.

என் மகன் ராமனாதன் பி.எஸ்ஸி. மற்றும் எம்.பி.ஏ. முடித்து விட்டு, கல்லூரி விரிவுரையாளருக்கான அகில இந்திய தேர்விலும் (நெட்) தேர்ச்சி பெற்றான். இதன் பிறகு தனியார் மற்றும் அரசு கலைக்கல்லூரிகளில் கௌரவ விரிவுரையாளராக குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வந்தான். ‘படித்த படிப்புக்குத் தக்க வேலை கிடைக்கவில்லையே’ எனும் வேதனையும் ஏக்கமும் எங்களை வாட்டின.

இந்த நிலையில், ‘காஞ்சிபுரம் ஸ்ரீசந்திரசேகரேந்திரர் நிகர்நிலைப் பல்கலைக் கழகத்தில் எம்.பி.ஏ. பிரிவில், காலமுறை ஊதியத்தில், விரிவுரையாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்’ என்று நாளிதழில் விளம்பரம் ஒன்று வெளியாகி இருந்தது. எங்கள் மகனும் உடனடியாக இதற்கு விண்ணப்பித்தான். நேர்முகத் தேர்விலும் கலந்து கொண்டான். ஆனால், நீண்ட நாட்களாகியும் பதிலேதும் வரவில்லை. இதனால் மிகவும் வருந்திய என் மகனுக்குப் பல வகையிலும் ஆறுதல் கூறினோம்.

ஒரு நாள்… எப்போதும் போல, காலையில் எழுந்து காஞ்சிப் பெரியவரை வணங்கினேன். வேலை கிடைக்காமல் வருந்தும் என் மகனின் நிலை குறித்து, உணர்ச்சிபூர்வமாக மகா பெரியவரிடம் பிரார்த்தித்தேன். அப்போது தொலைபேசி ஒலித்தது.

இதைக் கேட்டதும் சிலிர்த்துப் போனேன். காஞ்சி மகா பெரியவரை உள்ளம் உருக பிரார்த்தித்த வேளையில்… அவரது பெயரால் நடத்தப்படும் கல்வி நிறுவனத்தில் மகனுக்கு வேலை கிடைத்ததை எண்ணி நெகிழ்ந்து போனோம்.காஞ்சி (ஏனாத்தூர்) ஸ்ரீசந்திரசேகரேந்திர பல்கலைக் கழகத்தில் இருந்து வந்த அழைப்பு தான் அது! எம்.பி.ஏ. துறையின் விரிவுரையாளராக மகன் தேர்வாகி விட்டதையும், அதற்கான உத்தரவு கூரியரில் அனுப்பப்பட்டுள்ளதையும் தொலைபேசியில் தெரிவித்தனர்.

அதுமட்டுமா? அந்த மகான் வாழ்ந்த பூமியில்…சங்கர மடத்துக்கு அருகிலேயே தற்போது வசித்து வருகிறோம். மகனது வேலை, சங்கர மடத்தில் வழிபாடு… என நிம்மதியாகக் செல்கிறது ஓய்வு காலம். காஞ்சிப் பெரியவரின் கருணையே கருணை!

மஹா பெரியவா அருள்வாக்கு : –

கருணை காட்டுகிறோம் என்ற எண்ணத்தோடு செய்யும் உபகாரம் அசுத்தமாகிவிடுகிறது. உபகாரம் செய்வதன் மூலம் நமக்கு எளிமை, அடக்கம், அஹங்கார நீக்கம் உண்டாக வேண்டும். நமக்கு வேண்டியவர்கள் என்று சிலரை நினைத்துக் கொண்டு அன்பு செலுத்துகிறோம். இந்த ‘வேண்டியவர்களை‘ நம் ஊரார், தேசத்தார், உலகத்தார் என்று மேலே மேலே விஸ்தரித்துக் கொண்டே போனால் அன்பிலிருந்து படிப்படியாக அருள் பிறக்கிறது. ‘நம் கடன் பணி செய்து கிடப்பதே‘ என்பதுதான் வாழ்க்கையின் குறிக்கோளாக இருக்கவேண்டும். கடனை, அதாவது கடமையை அன்போடு, ஆர்வத்தோடு, இதய பூர்வமாகச் செய்ய வேண்டும்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s