79-மகா பெரியவா – அனுபவங்கள் ஆயிரம்


திருவருட்செல்வர் ‘  படத்தில் அப்பராக வேடம் போடுவதற்கு தனக்கு இன்ஸ்பிரேஷன் (Inspiration ) காஞ்சி சங்கராச்சாரியாரானபரமாச்சாரியாள்‘  தான் என்று நடிகர் திலகம் சிவாஜி ஒரு முறை குறிப்பிட்டிருந்தார்.
அதுபற்றி அவர் தனது “எனது சுயசரிதை” புத்தகத்தில் மேலும் கூறுகிறார்….

‘எனக்கு ‘காஞ்சி பரமாச்சாரியாள்‘  மீது மதிப்பும்,  பக்தியும் உண்டு.   அதற்கு ஒரு காரணம் உண்டு.  அது ஒரு முக்கியமான சம்பவம்.  ஒரு நாள், காஞ்சி முனிவர் பரமாச்சாரியாள் அவர்கள் என்னைக் கூப்பிட்டு அனுப்பியதாக,  சங்கர மடத்திலிருந்து செய்தி வந்தது.  அவர் மயிலாப்பூரில் உள்ள ஒரு மடத்தில் தங்கியிருந்தார்.  அந்தமடம்,  கற்பகாம்பாள் கல்யாண மடத்திற்குப் பக்கத்தில்தான் இருக்கிறது என்று நினைக்கிறேன்.

https://i1.wp.com/www.indiadivine.org/content_images/1/7/paramacharya-01.jpg
நான், எனது தாயார்,  எனது தந்தையார்,  எனது மனைவி நான்கு பேரும் சென்றோம்.  சென்றவுடன் எங்களை உள்ளே ஒரு அறையில் உட்கார வைத்தார்கள்.  நாங்கள் ஒரு அரை மணி நேரம் உட்கார்ந்திருந்தோம்.  காஞ்சி முனிவர் அங்கே மக்களுக்கு உபன்யாசம் செய்து கொண்டிருந்தார்.  அப்போது திடீரென லைட்டெல்லாம்  அணைந்துவிட்டது.  அவர் கையில் ஒரு சிறிய குத்து விளக்கை எடுத்துக்கொண்டு,  மெதுவாகப் பார்த்துக் கொண்டே வந்தார்.  மெல்லக் கீழே உட்கார்ந்து,  கையைப் புருவத்தின் மேல் வைத்து எங்களைப் பார்த்தார்.  ‘நீதானே சிவாஜி கணேசன்?‘ என்றார்.  ‘ஆமாங்கய்யா!  நான்தான்‘, என்று காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினேன்.  என் மனைவியும், பெற்றோர்களும் அவரை வணங்கினார்கள்.

photo (18)

அப்போது அவர்,  “உங்களைப் பார்த்ததில் மிகவும் சந்தோஷம்.  திருப்பதி சென்றிருந்தேன்.  அங்கு ஒரு யானை எனக்கு மாலை போட்டது.  யானை நன்றாக இருக்கிறதே  யாருடையது?  என்றேன்.  ‘சிவாஜி கொடுத்தது‘  என்றார்கள்.  திருச்சி சென்றிருந்தேன்.  அங்கு திருவானைக்கா கோவிலுக்குப் போனேன்.  அங்கும் யானை மாலை போட்டது.  யானை அழகாக இருக்கிறது.  யானை யாருடையது?  என்றேன்.  ‘சிவாஜி கணேசன் கொடுத்தது‘ என்றார்கள்.  தஞ்சை புன்னை நல்லூர் மாரியம்மன் கோவில் சென்றிருந்தேன்.  அங்கேயும் யானையை விட்டு மாலை போட்டார்கள்.  ‘இது யாருடையது ?’  என்றேன்.    ‘சிவாஜி கணேசன்  கொடுத்தது‘ என்றார்கள்.  நாட்டில் பணக்காரர்கள் பல பேர் இருக்கிறார்கள்.  அவர்கள் பப்ளிசிடிக்காக  சில சமயம் கோயில்களுக்குப் பணம் தான் நன்கொடையாகக் கொடுப்பார்கள்”.

“ஆனால்,  யானை கொடுப்பதற்குப் பெரிய மனசு வேண்டும்.  அந்த மனசு உனக்கிருக்கிறது.  ஆகையால் உன்னைப் பெற்றவர்கள் பாக்கியசாலிகள்.  அவர்களுக்காக நான் பகவானைப் பிரார்த்தனை செய்கிறேன்”  என்று கூறி விட்டு எழுந்து சென்று விட்டார்.  அப்போது என் மனம் எப்படியிருந்திருக்கும் ?  எத்தனை அனுக்கிரஹம்!   எண்ணிப் பாருங்கள்.”

ஒரு வேளை,  இந்தச் சம்பவம் என் மனதில் ஆழமாகப் பதிந்திருக்கலாம்.  பரமாச்சாரியாளை நான் கூர்ந்து கவனித்திருக்கிறேன்.   எனவே, அது ‘அப்பராக’ பிரதிபலித்திருக்கலாம்.

மஹா பெரியவா அருள்வாக்கு : –

குரு‘ என்றால் கனமானது. பெரியது. அதாவது பெருமை உடையவர். மகிமை பொருந்தியவர் என்று பொருள். பெரியவர்களை, ‘மஹாகனம் பொருந்திய‘ என்று சொல்கிறோம். கனமென்றால் weight அதிகமென்றா அர்த்தம்? ஒருவர் உள்ளுக்குள்ளேயே அறிவாலோ, அனுபவத்தாலோ, அருளாலோ பெருமை பெற்றவர் என்று அர்த்தம். ஆசிரியர் என்பவர் வெளியிலே படிப்பிலே பெரியவர். வெளியிலே போதனை பண்ணுவதில் சதுரர். வெளியிலே நடத்தையால் வழிகாட்டுவதிலே சிறந்தவர். ‘குரு‘ என்றால் இருட்டைப் போக்குபவர் என்று சொல்கிறார்கள். குருவுக்கும் சீடனுக்கும் ‘லிங்கா‘க உபதேசம் இருக்கிறது. குருவிடமிருந்து புறப்பட்டுப் போய், சீடனுக்குள்ளே புகுந்து, அவனை ஒரு மார்க்கத்தில் தீவிரமாகத் தூண்டிச் செலுத்துவது ‘தீட்சை‘ என்று அறியப்படுகிறது.

Advertisements

5 thoughts on “79-மகா பெரியவா – அனுபவங்கள் ஆயிரம்

 1. D. Chandramouli September 8, 2014 at 4:09 AM Reply

  It is quite moving to read stories such as this. Years back, when I saw Sivaji Ganesan enacting Appar in the movie “Thiruvarutchelvar”, I was awestruck at his mannerisms that I felt that I was seeing Mahaperiava himself. Sivaji Ganesan is indeed a blessed soul.

  • BaalHanuman September 9, 2014 at 2:18 AM Reply

   You are absolutely right. Sivaji Ganesan is really blessed…

 2. Right Mantra Sundar September 8, 2014 at 5:21 AM Reply

  சிவாஜி அவர்கள் மனிதருள் புனிதர். மாசற்ற மாணிக்கம். பரமாச்சாரியார் வாக்கிலிருந்து இப்படி ஒரு வாழ்த்து கிடைப்பதற்கு சிவாஜி கணேசன் அவர்கள் எந்தளவு புண்ணியம் செய்திருக்கவேண்டும்? சிவாஜியை போல மனிதரை பார்ப்பது மிக பார்ப்பது மிக அரிது. நாம் சில ஆண்டுகளுக்கு முன்னர் திருவானைக்காவல் சென்றிருந்தபோது, சிவாஜி அவர்கள் வழங்கிய சாந்தி என்கிற யானையிடம் ஆசி பெற்றது மறக்க முடியாத ஒன்று. தொடரட்டும் உங்கள் பணி. மகா பெரியவா என்றும் உங்கள் துணையிருப்பாராக.

  • BaalHanuman September 9, 2014 at 4:57 AM Reply

   நன்றி சுந்தர் உங்கள் அன்பான வாழ்த்துக்களுக்கு…

 3. srisri4 September 8, 2014 at 7:01 AM Reply

  Sir,
  I am much pleased to go through this.
  All these days I was doubting whether actor Sri Sivaji GANESAN ever gad a Dharshan of SRI SRI SRI SRI MAHA PERIYAVAL.
  THANKS for sharing.
  With best wishes,
  tgranganathan

  Jaya Sri Ramana!
  044-49523264
  +919445554660

  >

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s