77-மகா பெரியவா – அனுபவங்கள் ஆயிரம்


unnamed (7)

நீலக்கல் ராமச்சந்திர சாஸ்திரிகள் தொடர்ந்தார்… ”இன்னொரு சம்பவமும் உண்டு. ஆந்திராவைச் சேர்ந்த ரெட்டியார் சமூகத்து அன்பர் ஒருத்தர், மகாபெரியவா மீது பக்தி மிகுந்தவர். அடிக்கடி ஸ்ரீமடத்துக்கு வருவார். அவரோட குழந்தைக்கும் பார்வை இல்லைன்னு குழந்தையைத் தூக்கிட்டு வந்தார். அன்னிக்கு லட்சார்ச்சனை நடந்தது. கற்பூர ஆரத்தி முடிஞ்சு, தோடகாஷ்டகம் எல்லாம் சொல்லி முடிச்சதும், மகாபெரியவாகிட்ட விஷயம் சொல்லப்பட்டது. பெரியவா எழுந்து வந்து குழந்தையை அப்படியே கொஞ்ச நேரம் உற்றுப் பார்த்தார். ”குழந்தையை எடுத்துண்டு போங்கோ..! எல்லாம் நல்லபடியா ஆயிடும்”னு கை உயர்த்தி ஆசீர்வாதம் பண்ணுவது போல் சொன்னார். வெகு சீக்கிரமே அந்தக் குழந்தைக்கும் பார்வை கிடைச்சுது. குழந்தை வளர்ந்து பெரியவளாகி, அவளுக்குக் கல்யாணமும் ஜாம்ஜாம்னு நடந்தது.

ரெட்டியார் மகாபெரியவாளின் அனுக்கிரகத்தால் தன் மகளுக்குப் பார்வை கிடைச்சதை அவரே வந்து சொன்ன பிறகுதான் எங்களுக்கும் தெரிய வந்தது. மகாபெரியவாளை நடமாடும் தெய்வம்னு பக்தர்கள் வெறுமே ஒரு போற்றுதலா மட்டும் சொல்லிடலை. அவர் அனுக்கிரகத்தை, அருட் கடாட்சத்தை அனுபவித்து உணர்ந்துதான் அப்படிச் சொல்லியிருக்காங்க. அவரோடு இருந்ததும், அவருக்குச் சேவை செய்ததும் எங்கள் பாக்கியம்!

மஹா பெரியவா அருள்வாக்கு : –

  • தவறான விஷயங்களில் ஈடுபடச் செய்வது பாவத்தின் சக்தி தான். அதிலிருந்து விழிப்புடன் காத்துக் கொள்ள முயல வேண்டும்.
  • நாம் மகிழ்ச்சியாக இருப்பதோடு மற்றவர்களும் மகிழ்ச்சியாக இருக்க நம்மால் ஆனதைச் செய்வது அவசியம்.
  • இசையுடன் மனம் ஒன்றி பாடுவதன் மூலம் இறையருளை எளிதாக அடைய முடியும்.
  • இஷ்ட தெய்வமே உயர்வானது மற்ற தெய்வம் எல்லாம் தாழ்வானது என்று எண்ணுவது பேதமை.
  • யாரையும் வெறுக்க வேண்டாம். தீயவர்களின் மனமும் நல்வழியில் திரும்பட்டும் என பிரார்த்திப்போம்.

 

 

Advertisements

One thought on “77-மகா பெரியவா – அனுபவங்கள் ஆயிரம்

  1. mahesh September 4, 2014 at 2:09 AM Reply

    Reblogged this on Sage of Kanchi.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s