75-மகா பெரியவா – அனுபவங்கள் ஆயிரம்


1931 -ம் ஆண்டின் இறுதிப் பகுதிகளில் ஆங்கில அரசின் அடக்குமுறை அதிகமாய் இருந்த சமயம்.  காங்கிரஸ்காரர்களுக்கு ஆதரவு அளித்தால் “வந்தது, ஆபத்து !”  என்று மக்களும் ஸ்தாபனங்களும் பயப்பட்ட சமயம் அது.

பெரியவாள் வட ஆற்காடு ஆரணியில் முகாமிட்டிருந்தார்.  அப்போது காங்கிரஸ் தொண்டர் படையொன்று அவரைச் சந்திக்க அனுமதி கோரிற்று.

விஷயத்தைப் பெரியவாளிடம் விண்ணப்பித்த ஸ்ரீமட நிர்வாகிகள்,  “சர்க்கார் கெடுபிடி மிகவும் அதிகம்.  பெரியவாள் காங்கிரஸ்காரர்களுக்குப் பேட்டி கொடுப்பதால் மடத்துக்குப் பல தொல்லைகள் ஏற்படலாம்” என்று தெரிவித்துக் கொண்டனர்.

அவர்கள் கூறியதைப் பெரியவாள் கூர்ந்து கேட்டுக் கொண்டார்.  “அத்தனை பேரையும் வரச் சொல்லுங்கள்,  மடத்திலேயே அவர்களுக்குப் போஜனமும் ஏற்பாடு பண்ணுங்கள்”  என்று பரம சாந்தமாக ஒரு வெடி குண்டைத் தூக்கிப் போட்டார்.

மடத்து நிர்வாகிகள்,  “என்ன ஆகப் போகிறதோ?”  என்ற பயத்துடனேயே இட்ட பணியைச் செய்தனர்.

ஆபத்து ஏதும் வரவில்லை.

மானேஜர் இதை மகிழ்ச்சியுடன் பெரியவாளிடம் கூற, அவர்,  “நம்மைப் பார்க்கணும்னு ஒருத்தர் சொல்றச்சே,  அவர் யாராயிருந்தாலும் அதனால் என்ன ஆகுமோ,  ஏதாகுமோன்னு பயந்துண்டு கதவைச் சாத்திக்கறதுன்னா ‘ஜகத்குரு‘  ன்னு பட்டம் போட்டுண்டு இந்தப் பீடத்தில் உட்கார்ந்திருக்கிறதுக்கு லாயக்கே இல்லைன்னு அர்த்தம்”  என்று ரத்தினச் சுருக்கமாக மறுமொழி தந்தார்.

மஹா பெரியவா அருள்வாக்கு : –

‘தெய்வம் சில இடங்களில் பிரத்யட்சமாகத் தெரிவதாக மக்கள் நினைக்கிறார்கள். அதேபோல், என்னிடமும் தெய்வம் பிரத்யட்சமாக இருப்பதாக நினைத்து, எனக்கு தியான மரியாதை கொடுத்து, என்னிடம் தங்கள் குறைகளைச் சொல்வது தெய்வத்திடம் சொல்வது போலாகும் என்ற எண்ணத்தில், தங்கள் குறைகளை என்னிடம் கூறுகிறார்கள். அதனாலேயே அவர்கள் ஆறுதலும் அடைகிறார்கள். அவர்களின் அந்த நம்பிக்கையையும், அதனால் அவர்கள் ஆறுதல் பெறுவதையும் நான் எப்படித் தடை செய்ய முடியும்? பகலோ இரவோ ஆனால்தான் என்ன… என்னிடம் வருபவர்களின் குறைகளைக் கேட்டு அவர்களுக்கு ஆறுதல் சொல்லவே இந்தச் சரீரம் ஏற்பட்டிருக்கிறது. பக்தர்களுக்கு தரிசனம் தருவதிலும், அவர்களுக்கு இதம் தரும் விதமாகப் பேசுவதிலும் சரீர பலம் குறைந்தாலும் பரவாயில்லை; என் உள்ளத்துக்கு இதுவே பலம்.

பக்தர்கள் என்னை தெய்வமாக எண்ணி வணங்குவதில் எனக்குக் கொஞ்சமும் உடன்பாடோ பெருமையோ இல்லை. ஆனால், தெய்வத்திடம் முறையிடுவதுபோல் ஒளிவு மறைவின்றி உள்ளதை உள்ளபடி முறையிடுவது சந்தோஷமாக இருக்கிறது. நான் தெய்வமாக இல்லாவிட்டாலும், என்னை முன்னிட்டு மக்கள் பெறும் தெய்வீ க உணர்ச்சி என்னைப் பரவசப்படுத்துகிறது. அந்த தெய்வீ க உணர்ச்சியுடன் அவர்கள் செய்யும் எந்தக் காரியமும் எனக்கு சந்தோஷம் தருவதாகவே இருக்கும்!

 

One thought on “75-மகா பெரியவா – அனுபவங்கள் ஆயிரம்

  1. Varadarajan Krishnan August 28, 2014 at 8:26 PM Reply

    பெரியவா அல்லாமா வேற யாருக்காவது அப்பிடி சொல்லத் தோணுமா ! அதுனால தான் அவா எப்பவுமே ஜகட்குருவா இருந்திருக்கா!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s