1- சுஜாதாவின் சிறுகதைகள் – ஜெயமோகனின் பார்வையில்…


சுஜாதாவின் நடை சிறுகதைக்கு உரியது. காரணம்:

 1. சுருக்கம்
 2. நேர்கோட்டில் வேகமாகத் தாவிச்செல்லும் இயல்பு

சிறுகதையின் செவ்வியல் [ஓ ஹென்றி பாணி] வடிவில் நம்பிக்கை கொண்டவர் சுஜாதா. இயல்புகள்:

 1. சம்பவங்களை நம்பியே கதையை அமைத்தல்
 2. குறைவான கதைமாந்தர்
 3. சிறிய கால அளவு
 4. மையமுடிச்சு இறுதித் திருப்பத்தால் அவிழ்க்கப்படுதல்

அவரது கதைகளின் பலம்:

 1. வலுவான வடிவ உணர்வு
 2. நேர்த்தியான மொழியுடன் அமைக்கப்பட்டவை.

சுஜாதாவின் கதைகளின் பலவீனம்:

 1. பெரும்பாலான கதைகளில் அவரது கதைமுடிவுகள் இதழியல் எழுத்துக்கு உரிய எளிய உத்திவிளையாட்டாக உள்ளன. உதாரணமாகoom_1
 • ஒரே ஒரு மாலை
 • ஒரே ஒரு மாலை‘ சுஜாதாவின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் முதல்  தொகுதியில் 2-ஆவது கதையாக இடம் பிடித்துள்ளது. (இத்தொகுப்பில் மொத்தம் 50 கதைகள்)
 • வழி தெரியவில்லை
 • வழி தெரியவில்லை‘ சுஜாதாவின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் முதல் தொகுதியில் 6-ஆவது கதையாக இடம் பிடித்துள்ளது. (இத்தொகுப்பில் மொத்தம் 50 கதைகள்)
 • சென்ற வாரம்
 • சென்ற வாரம்‘ சுஜாதாவின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் முதல்  தொகுதியில் 10-ஆவது கதையாக இடம் பிடித்துள்ளது. (இத்தொகுப்பில் மொத்தம் 50 கதைகள்)

சுஜாதா கூறுகிறார்… (விமர்சனங்கள் – என் அனுபவம்)

ரொம்ப நாள் முன்னால் என் சிறு கதையான ‘ஒரே ஒரு மாலை‘ ஆனந்த விகடனில் வெளி வந்த போது, மூத்த விமர்சகரான க.நா.சுப்ரமண்யம் அந்தக் கதையைக் குறிப்பிட்டு, ‘இந்தக் கதை என்னைப் பிரமிக்க வைத்தது. இந்த எழுத்தாளர் பிற்காலத்தில் பெரிய ஆளாக வருவார்’ என்று எழுதி விட்டார். அதற்கு பல பேர் அவரைக் கோபித்துக் கொண்டிருக்க வேண்டும் — ‘என்ன விமர்சகன் நீ! சுஜாதா கதையைப் போய் நன்றாக இருக்கிறது என்கிறாயா ? மஹா பாவம் அல்லவா ?’ என்று. அதன்பின் க.நா.சு. என்னைப் பற்றி எழுதுவதையே நிறுத்திவிட்டார். டில்லியில் எதாவது கூட்டத்தில் பார்த்தால், அவர் கறுப்புக் கண்ணாடியை அணிந்து கொண்டு வெளியே ஜன்னலைப் பார்த்துக் கொண்டிருப்பார்.

இன்றும் பல க.நா.சுக்கள் இருக்கிறார்கள்.

சுஜாதா கூறுகிறார்…. (கற்றதும் பெற்றதும்…)

oom_3

ஒரே ஒரே மாலை‘ கதையில் ஒரு புதிய உத்தியைக் கடைப்பிடித்தேன். கதையின் சோகமான முடிவை பாதியில் குறுக்கே புகுந்து சொல்லி விட்டு கதையைத் தொடர்ந்தேன். அதனால் அந்தக் கதையின் பிற்பகுதியின் உருக்கம் அதிகமாகியது. இருவரும் செத்துப் போகப் போகிறார்கள். ‘உனக்கு எத்தனை சம்பளம்…? என்ன கலர் பிடிக்கும்?’ என்றெல்லாம் அற்ப விஷயங்களைப் பேசிக் கொண்டிருக்கிறார்களே என்ற ‘ஐயோ பாவம்’ கிடைத்தது.
Ka.Naa.Su.
க.நா.சுப்பிரமணியம் அவர்கள் இந்தக் கதையைப் படித்துவிட்டு ஒரு விமரிசனக் கட்டுரையில் இதைக் குறிப்பிட்டு ‘இந்தப் பையன் பின்னால் பெரிசாக வருவான்‘ என்று எழுதியிருந்தார். அதன்பின் க.நா.சு. அவர்களைக் கவரும்படியான கதைகளை நான் எழுதவில்லை. நல்ல எழுத்தும் ஜனரஞ்சகமான எழுத்தும் விரோதிகள் என்ற பிடிவாதமான எண்ணம் கொண்டவர்களில் ஒருவர் அவர். மக்களுக்குப் பிடித்தால், அது நல்ல இலக்கியமல்ல என்று இன்றும் சிலர் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஓர் எழுத்தாளன் எப்போதும் நெற்றியைச் சுருக்கிக்கொண்டு நான்கு நாள் தாடியுடன் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். அது எனக்குச் சரிப்பட்டு வரவில்லை.

Advertisements

2 thoughts on “1- சுஜாதாவின் சிறுகதைகள் – ஜெயமோகனின் பார்வையில்…

 1. சுஜாதாவின் சிறப்பு அவரின் நாவல்கள், தொடர்கதைகளில் அல்ல. அவரின் முழுத்திறமையும் வெளிப்பட்டது சிறுகதைகளில்தான்.

  • BaalHanuman August 28, 2014 at 12:53 AM Reply

   சிறுகதை எழுத்தாளர், நாவலாசிரியர், நாடக ஆசிரியர், திரைத்துறை இதில் உங்களுக்கு பிடித்த சுஜாதா யார் ?

   இதைப் படிக்கும் நீங்களும் இந்தக் கேள்விக்கு சுஜாதா பாணியில் ஒரு வார்த்தையில் பதில் அளியுங்களேன்…..

   பதில்கள்: சக எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள்

   1. பினாத்தல் சுரேஷ்: கட்டுரை ஆசிரியர் சுஜாதாவை இருட்டடிப்பு செய்யும் நுண்ணரசியலை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

   2. ஜெயந்தி சங்கர்: சிறுகதை எழுத்தாளர்

   3. செல்வன்: நாவல் தான் இவை அனைத்துக்கும் அடிப்படை.ஆக நாவலாசிரியர்தான் எனக்கு பிடித்தமானவர்

   4. சொக்கன்: நீங்கள் கேட்டிருக்கும் அதே வரிசையில் எனக்கு அவரைப் பிடிக்கும்

   5. எம். கே குமார்: நண்பன் சுஜாதா

   6. அருணா ஸ்ரீனிவாசன்: முதலாவது – கட்டுரையாளரையும் சேர்க்கவும்.

   7. “வினையூக்கி” செல்வா: சிறுகதை எழுத்தாளர்

   8. “பொன்ஸ்’ பூர்ணா: சுஜாதா ஒரு நல்ல சிறுகதை எழுத்தாளர் மட்டுமே..

   9. ஐகாரஸ் பிரகாஷ்: சிறுகதை ஆசிரியர்

   10. காசி ஆறுமுகம்: நாவலாசிரியர்

   11. ராம்: சிறுகதை எழுத்தாளர்

   12. “தென்றல்” வசந்தம்: சிறுகதை எழுத்தாளர்

   13. ஆசிஃப் மீரான்: சந்தேகமில்லாமல் சிறுகதை எழுத்தாளர் சுஜாதா

   14. முத்து: சந்தேகமேயின்றி முதல்வர்தான்.

   15. ரவி சுப்பிரமணியம்: Novel Writer. Karaiyellam Shenbagapoo, Pirivom Sandhippom cannot be comprehended in any other forms.

   16. ரஜினி ராம்கி: சிறுகதை அல்ல தொடர்கதை எழுத்தாளர், சினிமா வசனகர்த்தா.

   17. “திண்ணை” துகாராம்: நாவலாசிரியர்

   18. “நிலாச்சாரல்” நிலா: நாவலாசிரியர்

   19. பத்மா அர்விந்த்: சிறுகதை எழுத்தாளர்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s