5-சுஜாதாவின் முத்தான பத்து கதைகள் – இரா.முருகன்


sujatha33Srirangthuk Kathaigal

உஞ்சவிருத்தி சுஜாதாவின் ஸ்ரீரங்கத்துக் கதைகள் தொகுப்பில் 27-வது கதையாக இடம் பெற்றுள்ளது. (இந்தத் தொகுப்பில் மொத்தம் 34 கதைகள்)

Desikan Narayanan

இக்கதைகள் ஒவ்வொன்றுக்கும்  சுஜாதா தேசிகன் வரைந்திருக்கும் அருமையான கோட்டுச் சித்திரங்களும் குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று. ஸ்ரீரங்கத்தின் சந்துபொந்துகளையெல்லாம் அறிந்தவர்களுக்கு இந்தக் கோட்டுச் சித்திரங்களுக்குள் சுஜாதா தேசிகன் ஒளித்து வைத்திருக்கும் பல நுட்பங்கள் கண்டிப்பாக வியப்பளிக்கும்.

photo (14)

ஸ்ரீரங்கம்’ என்று சுஜாதா கதை தொடங்கினால், கைவேலையைத் தொப்பென்று போட்டு விட்டு அக்கடா என்று உட்கார்ந்து விடலாம். ஒவ்வொரு ஸ்ரீரங்கம் கதையும் ஒரு ரகம். சிலவற்றில் தேவதைகள் வந்து போவார்கள். சிலவற்றில் மெய்மறக்க வைக்கிற, குறை இருந்தாலும் சிரிக்க வைக்கிற, அலட்டிக் கொண்டு அலைகிற, பரம சாதுவாக எல்லோருக்கும் தொண்டனாக ஓடி நடக்கிற எத்தனை எத்தனையோ பாத்திரங்கள். கி.ராஜநாராயணனின் ‘கோபல்ல கிராமம்’ நாவலில் ஒவ்வொரு நாயக்கராக சலிக்காமல் அறிமுகமாகிறார்கள் என்று எழுதியிருந்தார் சுஜாதா. அவருடைய ஸ்ரீரங்கத்துக் கதை மாந்தர் கோபல்ல கிராமத்து மகாஜனங்கள் போல் எல்லா விதத்திலும் சுவாரசியமானவர்கள். சுஜாதா இன்னும் இருக்க மட்டும் நமக்குக் கொடுத்து வைக்கவில்லை. அவர் அறிமுகப்படுத்த இன்னும் எத்தனை சீரங்கத்தார் பாக்கி இருக்கிறார்களோ!

லண்டனில், சார்லஸ் டிக்கன்ஸ் போன்ற பிரபல எழுத்தாளர்களும், (ஆர்தர் கானண்டயிலின்) ஷெர்லாக் ஹோம்ஸ் போன்ற சாசுவதமடைந்த கதாபாத்திரங்களும் சுவாசித்திருந்த லண்டன் தெருக்கள், சந்து பொந்துகளை எல்லாம் அந்த எழுத்தாளர்கள், கதாபாத்திரங்களில் நம்போல் ஊறிய வழிகாட்டிகள் சுட்டிக் காட்டி உள்ளே அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தி நம்மோடு நடந்து வரும் சிறப்பு நடை நிகழ்ச்சிகள் தினமும் உண்டு. பெரும்பாலும் தேம்ஸ் தீரத்தில், பிக்பென் கடியாரக் கூண்டுக்கு முன் நிரையில் இவை மதியச் சாப்பாட்டு நேரத்துக்குப் பிறகு தொடங்கும். சுஜாதாவின் ஸ்ரீரங்கக் கதைகளைப் பாராயணம் செய்த எழுத்து ரசிகர்கள் எத்தனையோ பேர் உண்டு. அவர்களுக்காக ஸ்ரீரங்கம் சுஜாதா நடையை இங்கேயும் அறிமுகப்படுத்தலாம். இந்த நடையும் அவருடைய உரைநடை போல் பலரையும் பாதித்தாலும் வியப்பில்லை.

சுஜாதாவின் ‘உஞ்சவிருத்தி’ கதை புறக்கணிக்கப்பட முடியாத இப்படியான இன்னொரு ஸ்ரீரங்கக் கதை. தொடக்கத்திலேயே தேஷ் ராக ஆலாபனை போல் ஒரு சின்ன வர்ணனை. வாங்கப்பா, கதை சொல்லப் போறேன் என்று கூப்பிடுகிறார் சுஜாதா. இதோ வந்தோம் -.

சில ஆண்டுகள் வடக்கே இருந்து விட்டு ஒரு முறை ஸ்ரீரங்கம் போன போது வழக்கம்போல் ரங்கு கடையில் போய் உட்கார்ந்தேன். ரங்கு ‘அன்று கண்ட மேனிக்கு அழிவில்லாமல்’ அப்படியே இருந்தான். புதுசாக கூலிங்கிளாஸ் போட்டிருந்தான். ஆண்டாளின் பையன் அமெரிக்காவில் இருக்கிறானே பாச்சாவோ, யாரோ… அவன் கொடுத்ததாம். வழக்கம்போல் தம்பு, சீது போன்றவர்கள் வந்து அரசியலையும் சினிமாவையும் அலசினார்கள். தம்பு தேவகாந்தாரிக்கும் ஆரபிக்கும் வித்தியாசம் என்னவென்று பாடிக் காட்டினான். சீது யாருக்கு மொட்டைக் கடுதாசி எழுதலாம் என்று யோசித்துக்கொண்டிருந்தான்.

அடுத்த பதினைந்து நிமிடம் நாம் சந்திக்கிற முதியவரை ஜன்மத்துக்கும் மறக்க முடியாமல் செய்து விடுகிறார் சுஜாதா. சொந்தப் பிள்ளை, மருமகள் மேல் வன்மத்தோடு வளைய வருகிறார் பெரியவர்.

அவருக்கு குடும்பத்தினர் மேல் ஆயிரம் குற்றம் குறை.

‘‘ஓய்! லைப்பாய், ரெக்சோனான்னு சோப்பு ஏதாவது போட்டுக் குளிக்கிறதுதானே? கிட்ட வந்தாலே கத்தாழை நாத்தம்!’’


‘‘மாட்டுப்பொண்ணு எங்கடா சோப்பு கொடுக்கறா? ஒரு அண்டா தண்ணிகூட வெக்கமாட்டேங்கறா ரங்கு.’’

குடும்பத்துக்கும் அவர் மேல் கோபம் உண்டு.

நாலும் பொண்ணு. நாலும் நன்னாப் படிக்கறதுகள். அதுகளைப் படிக்க விடாம சத்தமா பாராயணம் பண்ணிண்டு, எல்லாரையும் கண்டார… வல்லாரன்னு திட்டிண்டு, கோமணத்தோட புழக்கடைல அலைஞ்சுண்டு…’’

கண் நன்றாகத் தெரிந்தாலும் குச்சியைப் பிடித்துக் கொண்டு ஒரு வேத பாடசாலை பையன் வழி நடத்த, பெரியவர் திருநாடு ஏகியதும், அவனுக்குப் போகிறது வீடு. மீதிக் கதையைப் புத்தகத்தில் படித்துக் கொள்ளுங்கள்.

கண்டாங்கரஸ் என்று சொல்வார்கள். அதுக்கு அடுத்து ஓல்ட் என்ற அடுத்த அட்ஜெக்டிவ் தன்னிச்சையாக விழும். இந்தப் பெரியவரை கண்டாங்கரஸ் ஓல்ட் மேன் என்று திட்ட முடியாது. காரணம் அவரையும் ரத்தமும் சதையும். மில்க் சாக்லெட்டில் ஆசையுமாக (இந்தப் பையனுக்கும் ஒரு சாக்லெட் கொடு) ஆக்கி உலவ விட்டிருக்கிறார் சுஜாதா.

தொடரும்…

ஸ்ரீரங்கத்தை மையமாகக் கொண்டு சுஜாதா பல்வேறு காலகட்டங்களில் எழுதிய கதைகளின் தொகுப்பு. இளமைக்காலத்தின் அழிக்க முடியாத நினைவுகளை மீட்டெடுக்கும் நெகிழ்ச்சியூட்டும் சித்திரங்கள், ஒரு காலம் கடந்துபோனதன் இழப்புகள், மாறுதல்களை எதிர்கொள்ள இயலாதவர்களின் சீரழிவுகள் என்பன இக்கதைகளின் பின்புலமாக இருக்கின்றன. இரண்டு உலகங்களுக்கிடையே அலைக்கழியும் ஒரு வாழ்க்கை முறையினை விவரிக்கும் ஸ்ரீரங்கத்துக் கதைகள் சுஜாதாவின் துல்லியமான சித்தரிப்பு முறையினால் நிகழ்காலத்தையும் கடந்த காலத்தையும் உயிர்பெற்று எழச் செய்கின்றன.

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s