71-மகா பெரியவா – அனுபவங்கள் ஆயிரம்


நாட்டியக் கலைஞர் பத்மா சுப்ரமண்யம் அவர்களின் அனுபவம்…

https://i2.wp.com/www.kalkionline.com/kalki/2011/jan/09012011/p6.jpg

சில ஆண்டுகளுக்கு முன் சென்னை வந்த ரஷ்ய அமெரிக்க அறிஞர்கள் மகா ஸ்வாமிகளை தரிசித்தார்கள்.

பெரியவர்கள்: ரஷ்ய மொழியில் சம்ஸ்கிருதம் கலந்திருந்தாலும் அந்த நாட்டின் வடகோடிப் பகுதியில் பேசும் மொழியில் சம்ஸ்கிருதம் இருக்கிறதோ?”

ரிபகோவ் அசந்துவிட்டார், “வாஸ்தவந்தான்” என்றார்.

பெரியவர்கள்: உங்கள் நாட்டுக்கு ரிஷிவர்ஷம் என்று பெயர். காரணம் யாக்ஞவல்க்யர் போன்ற ரிஷிகள் அங்கே தான் வேதத்தைப் பற்றி ஆய்வுக்கூடம் ஒன்றை நிறுவினார்கள்.

மேலும் பல செய்திகளைக் கூறி மெய்சிலிர்க்கச் செய்தார்.

நாங்கள் உத்தரவு வாங்கிக்கொண்டு கிளம்பும்போது ரிபகோவ் பெரியவரிடம்: நான் இந்துவாக என்ன செய்ய வேண்டும்?” என்றார்.

“ஒண்ணும் செய்யாமலேயே நீர் இந்துதான்.

அவர் திருப்தியடையாமல், எனக்கு ஓர் இந்துப் பெயர் வேண்டுமே” என்றார். பெரியவர் எங்களைப் பார்த்து சிரித்துக்கொண்டே வெள்ளை தாடியோடு இவரைப் பார்த்தாலே ரிஷி போல இருக்கிறார் அல்லவா? ‘ரிஷி’ என்றே பெயர் வைத்துக் கொள்ளட்டும்” என்றார்கள். ரிபகோவுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. இப்போது ரிஷி (ரிபகோவ்) மாஸ்கோவில் ராமகிருஷ்ண மடம் கிளை தொடங்கியுள்ளார்.

மஹா பெரியவா அருள்வாக்கு : –

மனஸை அடக்கினவன்தான் முனி. ‘முனிவனின் குணம் எதுவோ அதுதான் மௌனம்’ என்பதே அந்த வார்த்தைக்கு அர்த்தம். முனிவனின் குணத்தில் பேசாமலிருப்பதுதான் தலை சிறந்தது என்று பொதுக் கருத்து இருந்திருப்பதால்தான் ‘மௌனம்’ என்றால் ‘பேசாமலிருக்கிறது’ என்று ஆகிவிட்டிருக்கிறது. மனஸை அடக்கினவனின் தன்மை என்றாலும், அதுவே நம் மாதிரி மனஸ் அடங்காதவர்கள் அந்த நிலையை அடைவதற்கு உதவுவதாகவுமிருக்கிறது.

பிரம்மஞானியான முனிவன் மௌனம், மௌனமாயில்லாமலிருப்பது என்ற இரண்டையும் விட்டு விடுகிறான் என்று உபநிஷத் சொல்கிறது. முதலில் படித்துப் பண்டிதனாகி, ரொம்பவும் வாதங்கள் சர்ச்சைகள் பண்ணி ஸத்ய தத்வத்தைத் தெரிந்து கொள்கிறான். அப்புறம் பாண்டித்யம், பேச்சு எல்லாவற்றையும் விட்டு விட்டு ஒரே நிஷ்டையில் போய் விடுகிறான். அப்புறம் பிரம்ம ஞானியாகிறபோது மௌனத்தையும் விட்டு விடுகிறான், மௌனமில்லாமையையும் விட்டுவிடுகிறான் என்று உபநிஷத் சொல்கிறது. இப்படிச் சொன்னால் அது எப்படி ஸாத்யம்? ஒன்று பேச்சை விட்டு மௌனமாக வேண்டும்; அல்லது மௌனத்தை விட்டுப் பேச வேண்டும். இரண்டையுமே விடுவது என்றால் எப்படி முடியும்? அந்த ஞானியின் நிலைக்குப் போனால்தான் இது புரியும்.

அவனுக்குப் பேச வேண்டும் என்றோ, பேச வேண்டாமென்றோ எந்த சொந்த அபிப்ராயமும் ஆசையும் இருக்காது. லோகாநுக்ரஹத்துக்காக அவன் மூலம் உபதேசமாகப் பேச்சு வந்தாலும் அவன் தான் பேசுவதாக நினைக்க மாட்டான். அதைவிடப் பெரிய மௌன உபதேசத்தில் தக்ஷிணாமூர்த்தி மாதிரி அவனைப் பராசக்தி உட்கார்த்தி வைத்திருந்தாலும் ‘நாம் மௌன விரதம் என்று ஒன்று அனுஷ்டிக்கிறோம்’ என்று அவன் நினைக்க மாட்டான். இதைத்தான் மௌனம், அமௌனம் இரண்டையும் விட்ட நிலை என்பது.

Advertisements

One thought on “71-மகா பெரியவா – அனுபவங்கள் ஆயிரம்

  1. Krishnamurthy R August 17, 2014 at 3:49 PM Reply

    Thank you for the inspiring info

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s