த ஃபைனல் டயக்னாசிஸ் – ஆர்தர் ஹெய்லி – வல்லபா ஸ்ரீனிவாசன்


ஆர்தர் ஹெய்லியின் ‘த ஃபைனல் டயக்னாசிஸ்‘. மற்றுமொரு அற்புதமான கதை. அதில் எனக்குப் பிடித்த வரிகள் இங்கே உங்கள் பார்வைக்கு…

டாக்டர் பியர்சன் தான் அப்சாலசன்ட் ஆனதை வருத்தத்துடன் சொல்லும் வரிகள். இதோ…


“You’re young,” Pearson said. “You’re full of spice and vinegar – that’s good. You know your stuff too. You’re up to date – you know things that I never did, never will now. Take my advice and try to keep it that way. It’ll be tough to do; make no mistake about it.” He waved toward the desk he had just vacated. “You’ll sit ha that chair and the phone will ring, and it’ll be the administrator – talking about budgets. Next minute one of the lab staff will want to quit; and you’ll have to smooth that out. And the doctors will come in, and they’ll want this bit of information and that.” The old man smiled thinly. “Then you’ll get the salesman – the man with the unbreakable test tube and the burner that never goes out. And when you’re through seeing him there’ll be another and another and another. Until at the end of a day you’ll wonder what happened to it and what you’ve accomplished, what you’ve achieved.”

Pearson stopped and Coleman waited. He sensed that in his words the old pathologist was reliving a part of his own past. He went on, “That’s the way the next day can go, and the next, and the one after that. Until you find a year has slipped by, and another, and another. And while you’re doing all this you’ll send other people on courses to hear about the new things in medicine – because you can’t take time out to go yourself. And you’ll quit investigation and research; and because you work so hard, you’ll be tired at night, and you won’t feel like reading textbooks. And then suddenly, one day, you’ll find everything you knew is out of date. That’s when it’s too late to change.”

Emotion-charged, the voice faltered. Pearson put a hand on Coleman’s arm. He said imploringly, “Listen to an old man who’s been through it all, who made the mistake of falling behind. Don’t let it happen to you! Lock yourself in a closet if you have to! Get away from the phone and the files and paper, and read and learn and listen and keep up to date! Then they can never touch you, never say, ‘He’s finished, all washed up; he belongs to yesterday.’ Because you’ll know as much as they do – and more. Because you’ll have experience to go with it . . .”

The voice trailed off and Pearson turned away.

மனதைத் தொடும் வரிகள்!

இந்த வரிகள் நடுவயதினர்க்கு எந்தத்துறையில் இருப்பவருக்கும் பொருந்தும். ஹெய்லியின் அளவு என் எழுத்து உங்கள் மனதைத் தொடுகிறதா என்பது தெரியாது. ஆனால் மிகவும் உபயோகமான விஷயம் என்பதால் தமிழில் பகிர்கிறேன். படிக்குமுன் ஒரு சிறிய முன்னூட்டம்.

ஃபைனல் டயாக்னாசிஸ் பெத்தாலஜி யில் இருக்கும் ஒரு டாக்டரைப் பற்றியது. அடாப்சி செய்யும் டாக்டர்கள் உயிர்களைக் காப்பதில்லாவிட்டாலும் மருத்துவத்தில் அவர்கள் பங்கு பெரிது. ஒருவர் பெத்தாலஜிஸ்ட் ஆக நல்ல படிப்பும் அனுபவமும் வேண்டும். ஆனாலும் உயிர்களைக் காப்பாற்றும் எமோஷனல் தன்னிறைவு அவர்களுக்குக் கிடைப்பதில்லை. இருந்தாலும் அவர்கள் கடமையை மிகத்துல்லியமாக செய்தாக வேண்டிய பொறுப்பும், தினமும் பிணங்களை அறுத்துப் பார்க்கும் சிரமமும், அதில் அவர்கள் எதிர்கொள்ளும் கஷ்டங்களும் கணக்கற்றவை. இந்தப் புத்தகம் இவற்றை அருமையாக எடுத்துக் காட்டும். இதில் மூத்த டாக்டரான ஜோ பியர்சன் புதிதாகப் பொறுப்பேற்கும் கோல்மேனிடம் கடைசியில் பேசுவதுதான் இந்த வரிகள்.

“நீ இளமையாக இருக்கிறாய். புத்துணர்ச்சியுடன் இருக்கிறாய். நல்லது. உனக்கு விவரங்கள் தெரிந்திருக்கிறது. உன் துறையில் அப் டு டேட்டாக இருக்கிறாய். எனக்குத் தெரியாத இனிமேலும் தெரிய வாய்ப்பில்லாத பல விஷயங்களை அறிந்திருக்கிறாய். என் அறிவுரையைக் கேட்டுக் கொள். கஷ்டமாக இருந்தாலும் தவறிவிடாதே!” அவர் காலி செய்த நாற்காலியைச் சுட்டிக் காட்டுகிறார்.


“இதோ இந்த நாற்காலியில் நீ அமர்ந்ததும் ஃபோன் அடிக்கும். அட்மினிஸ்ட்ரேட்டர் பட்ஜெட் பற்றிப் பேசுவார். பேசி முடித்ததும் அடுத்தது லாப் அசிஸ்டென்ட் வேலையை விடப் போகிறேன் என்பான். அவனைச் சமாதானப் படுத்தி முடித்ததும் டாக்டர்கள் வருவார்கள். விஷயங்கள் கேட்பார்கள். அவர்கள் போனதும் எங்கள் கம்பெனி டெஸ்ட் ட்யூப் உடையவே உடையாது என்றபடிக்கு ஒரு சேல்ஸ்மேன் வருவான். அவனைப் பாரத்து முடித்ததும் இன்னொருவன். மற்றும் ஒருவன். எல்லாம் முடித்து அன்றைய தினம் முடிகையில் இன்று என்ன செய்தோம் என்று ஆச்சர்யப் படுவோம். என்ன சாதித்தோம் என்று பெருமூச்சு விடுவோம்.

பியர்சன் கொஞ்சம் நிறுத்துகிறார். அவர் கடந்த காலத்தை அசை போடுவதை கோல்மேன் உணர்கிறான். “இது மாதிரியே மறுநாளும் போகும். அதற்கு மறுநாளும். அதற்கு அடுத்த நாளும். இப்படியே ஒரு வருடம். மற்றோரு வருடம். இன்னுமொரு வருடம். இப்படியே நீ செய்து கொண்டிருக்கையில் மற்றவர்களை புது விஷயங்களைக் கற்க ட்ரெயினிங் அனுப்புவாய். உனக்கு கற்க நேரமே வாய்க்காது. மெதுவாக ரிசர்ச் புது விஷயங்களைக் கற்பதை விட்டுவிடுவாய். கடுமையாக உழைப்பதால் இரவிலும் அயர்ந்து தூங்கி விடுவாய். புத்தகங்கள் படிப்பதை விட்டுவிடுவாய். திடீரென்று ஒரு நாள் உன் துறையில் நீ பின்தங்கி இருப்பதை உணர்வாய். அது பெரும்பாலும் காலம் தாண்டியே வரும் ஞானமாக இருக்கும்.”

பியர்சனின் குரல் கம்முகிறது. “இதை எல்லாம் கடந்து வந்த, பின்தங்கிய நிலமைக்கு ஆளான இந்தக் கிழவன் சொல்வதைக் கேள்! நீ இந்தத் தவறுகளை செய்து விடாதே! தேவைப் பட்டால் உன்னை உள்ளே வைத்து கதவை அடைத்துக் கொள். ஃபோன், ஃபைல்ஸ், பேப்பர் இவற்றிலிருந்து விலகி இரு. நிறைய படி. கேள். அறிந்து கொள். உன் துறையில் அப் டு டேட்டாக இரு. உன்னை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது. அந்தக் கிழவன் அவ்வளவுதான். அவனிடம் இனி தெம்பில்லை. அவன் பழையவன் என்று யாராலும் உன்னைச் சொல்ல முடியாது. ஏனென்றால் அவர்களுக்குத் தெரிந்தது உனக்கும் தெரிந்திருக்கும். இன்னும் கூட……ஏனென்றால் உன்னிடம்….அவர்களிடம் இல்லாத அனுபவமும் சேர்ந்திருக்கும்!

இப்படிச் சொல்லியவாறு பியர்சன் கிளம்புவார்.

நம் எல்லோருக்குமே இது பொருந்தும். அதுவும் டெக்னாலஜி படு வேகமாக வளரும் இந்தக் காலத்தில் நாம் கற்கத் தவறினால் பின் தங்கிவிடுவோம். பின் நாளில் அடுத்த தலைமுறையினருடன் பேசவும் பழகவுமே தடுமாறலாம். யாராக இருந்தாலும் எந்தத் துறையானாலும் படிப்பதை விடாமல் இருப்போமானால் என்றும் தலைநிமிர்ந்து நிற்கலாம். படியுங்கள். நீங்கள் படித்ததைப் பகிருங்கள். நாங்களும் கற்கிறோம்!

Advertisements

2 thoughts on “த ஃபைனல் டயக்னாசிஸ் – ஆர்தர் ஹெய்லி – வல்லபா ஸ்ரீனிவாசன்

  1. Ramjirtoram August 7, 2014 at 2:36 AM Reply

    Thank you for this write up I purchase books that have been reviewed in your blog

  2. Raju Iyer August 7, 2014 at 2:10 PM Reply

    Unmaiyena varthaigal….

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s