ராம நாமத்தின் பெருமை!


photo (8)

நாராயண எனும் நாமத்தைப் போலவே ராம நாமத்தின் பெருமையும் அலாதியானதுதான்.

கபீர்தாசரின் மீது அன்பும் பக்தியும் கொண்ட பத்மபாதர் என்பவர் கபீர்தாசரின் சீடராக இருந்தார். சகல சாஸ்திரங்களிலும் வல்லவர். ராமபிரான் மீது மிகுந்த பற்று கொண்டவர். ஒரு முறை தொழு நோயாளி ஒருவனை அவர் சந்தித்தார்.

உடல் முழுவதும் புண்ணாகி, அழுகி, ரத்தம் சொட்டச் சொட்ட நின்ற அந்தத் தொழுநோயாளியை அவனது உறவினர்கள் கங்கைக்கரைக்கு எடுத்து வந்தனர். எந்த மருத்துவத்தினாலும் அவன் நோய் குணமாகாத காரணத்தினால், வாழ்க்கையை வெறுத்த அந்த நோயாளி தன் உயிரை விடத் துணிந்தான்.

அவன் உடல் கங்கை நீரில் அமிழ்ந்து போகாமல் மிதக்கும் பொருட்டு அவன் கால்களிலும், கைகளிலும் குடங்களைக் கட்டும் பணியில் உறவினர்கள் ஈடுபட்டிருந்தனர். இந்த நேரத்தில் பத்மபாதர் அங்கே வந்தார். நடப்பதைக் கண்டு, என்ன விஷயம் என்று விசாரித்தார்.

சுற்றி நிற்பவர்கள் அவரிடம் தொழுநோயாளியைப் பற்றி எடுத்துரைத்தனர். அவன் ஒரு வியாபாரி என்பதை அறிந்த அவர் அவனைப் பார்த்து, “நோயாளியே, நீ வியாபாரியாக வாழ்ந்து உடலுக்குத் தேவையான அத்தனை சௌகரியங்களையும் குறைவில்லாமல் தேடிக் கொண்டாய். ஆனால் ஆத்மாவின் நலனுக்காக என்ன செய்தாய்?” என்று கேட்டார்.

அவன் மௌனமாகக் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தான். உடனே பத்மபாதர், “கவலைப்படாதே மனத்தூய்மையோடு, நீயும் உன் நலனில் அக்கறை வைத்திருப்பவர்களும் ஒரே சிந்தனையோடு ராம நாமத்தை மூன்று முறை தொடர்ந்து உச்சரியுங்கள். உன்னைப் பிடித்திருக்கும் தொழு நோய் ஓடிப் போய்விடும்” என்று உபதேசித்தார்.

அவர் பேச்சில் நம்பிக்கை வைத்த தொழுநோயாளியும், அவனது உறவினர்களும் மூன்று முறை மனத்தூய்மையோடு ராம நாமத்தை உச்சரித்தனர். ஆச்சரியப்படும் விதமாக இதுநாள் வரையில் வியாபாரியைப் பிடித்திருந்த நோய் அப்போதே மறைந்தது. அவன் உடல் தங்கம்போல ஜொலித்தது. இந்த அதிசயத்தை நிகழ்த்திய பத்மபாதரை அந்த வியாபாரி பல முறை தொழுது கண்ணீர் அஞ்சலி செய்து தன் நன்றிக்கடனைச் செலுத்தினான். சுற்றியிருந்த மக்கள் கூட்டமும் அவரைத் தொழுதது.

இந்த நிகழ்ச்சியைக் கேள்விப்பட்டார் கபீர்தாசர். தனது சீடர் பத்மபாதரை அழைத்தார். குருவின் அழைப்பைக் கேட்டு, பத்மபாதர் விரைந்து சென்று கபீர்தாசரை சந்தித்து வணங்கினார்.

“ஒரு தொழுநோயாளியின் நோயை ராம நாமத்தை உச்சரிப்பதன் மூலம் நீ போக்கியதை அறிந்தேன். அவனை எத்தனை முறை ராம நாமத்தை உச்சரிக்கச் சொன்னாய் ?” என்று கேட்டார் கபீர்தாசர்.

“மூன்று முறை குருவே” என்றார் பத்மபாதர் பணிவோடு.

“இத்தனை சிறிய பலனுக்காக ராமநாமத்தை மூன்று முறை உச்சரிக்க வேண்டுமா? நகத்தினால் கிள்ளி எறியக் கூடிய இலையை கோடாரியால் வெட்டலாமா? மனம், மெய், வாக்கு மூன்றினாலும் சுத்தமாக இருந்து ராம என்ற மந்திரத்தை ஒரே ஒரு முறை சொன்னாலே நாம் பல ஜென்மங்களில் செய்த பாவம் அத்தனையும் அந்த நிமிடத்திலேயே எரிந்து சாம்பலாகி விடுமே! வேத புருஷனாலும் அளவிட்டுச் சொல்ல முடியாத பெருமை உடைய ராம நாமத்தை அல்ப விஷயத்தின் பொருட்டாக மூன்று முறை உச்சரிக்கச் செய்தது தவறாயிற்றே” என்று கடிந்து கொண்டாராம். திருமந்திரத்தின் பெருமையை கபீர் தாசரைப் போல இதை விட அருமையாக விளக்க முடியாது.

photo (9)

“ராம” நாமம் ஒருமருந்து
“ராம” நாமம் அரு மருந்து
ஒரே ஒரு மருந்து ஒரு மருந்து
உலகத்தை உய்விக்க வந்த மருந்து

ராம ராம ராம ராம ராம ராம ராம்
ராம ராம ராம சீதா ராம ராம ராம்

“சொல்லின் செல்வன்” ஆஞ்சநேயன் தின்னும் மருந்து
சொல்லச் சொல்ல தித்திக்கும் அந்த மருந்து
அஞ்சனா பாக்கியம் என்னும் மருந்து
ஆர்வத்துடன் அசை போட்டு தின்னும் மருந்து

ராம ராம ராம ராம ராம ராம ராம்
ராம ராம ராம சீதா ராம ராம ராம்

“தாரக” மந்த்ரம் அந்த மருந்து
தாபம் மூன்றும் போக்கடிக்கும் அந்த மருந்து
தின்னத் தின்னத் திகட்டாது அந்த மருந்து
தேவர்களுக்கும் கிட்டாது அந்த மருந்து

ராம ராம ராம ராம ராம ராம ராம்
ராம ராம ராம சீதா ராம ராம ராம்

ஜானகிக்கு ஜீவன் தந்தது அந்த மருந்து
ஜாதி மத பேதமின்றி சொல்லும் மருந்து
மாருதிக்கு பெருமை தந்தது அந்த மருந்து
மாதேவன் பாராட்டிப் பேசும் மருந்து

ராம ராம ராம ராம ராம ராம ராம்
ராம ராம ராம சீதா ராம ராம ராம்

மங்காத செல்வம் தரும் அந்த மருந்து
மாயப் பிறப்பறுக்கும் அந்த மருந்து
பாமரர்க்கும் பண்டிதர்க்கும் ஒரே மருந்து
பாரபட்சமின்றி பலன் தரும் அந்த மருந்து

ராம ராம ராம ராம ராம ராம ராம்
ராம ராம ராம சீதா ராம ராம ராம்

துறவிகளும் யோகிகளும் தின்னும் மருந்து
துளசிதாசன் தேடித் தேடிக் கண்ட மருந்து
ஐந்தும் எட்டும் கூட்டிச் சேர்த்தது அந்த மருந்து
ஐந்து வித பாவங்களை போக்கும் அந்த மருந்து

ராம ராம ராம ராம ராம ராம ராம்
ராம ராம ராம சீதா ராம ராம ராம்

வைதேஹிக்கு வாழ்வளித்தது அந்த மருந்து
வையகத்தை வாழவைக்க வந்த மருந்து
இல்லறத்தில் வாழ்வு தரும் அந்த மருந்து
இறுதியிலே வீடு தரும் அந்த மருந்து

ராம ராம ராம ராம ராம ராம ராம்
ராம ராம ராம சீதா ராம ராம ராம்

பலவித நன்மைகளைத் தந்த மருந்து
பக்தர்களை பாடி ஆட வைத்த மருந்து
பலவித பயங்களைப் போக்கும் மருந்து
கேட்கக் கேட்கத் தெவிட்டாத “ராம” நாம மருந்து

ராம ராம ராம ராம ராம ராம ராம்
ராம ராம ராம சீதா ராம ராம ராம்

 

Advertisements

2 thoughts on “ராம நாமத்தின் பெருமை!

 1. rjagan49 July 31, 2014 at 8:09 AM Reply

  பாடல் தாங்கள் எழுதியதா? படித்துப் புண்ணியம் பெற்றோம் நாங்கள்.

  ஐந்தும் எட்டும் – நமசிவாய, ஓம்நமோநாராயணாய!

  நன்றி!

  -ஜெ.

  • BaalHanuman July 31, 2014 at 2:14 PM Reply

   அன்புள்ள R.J,

   நன்றி. அந்தப் பாடலைப் பற்றி…

   சிறிது வருடங்களுக்கு முன் இங்கு அமெரிக்காவிற்கு விஜயம் செய்திருந்த என்னுடைய மாமா ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாம பாராயண சபா (தெற்கு சித்திரை வீதி, ஸ்ரீரங்கம்) வெளியிட்டுள்ள ஒரு சிறு புத்தகத்தை என்னுடன் பகிர்ந்து கொண்டார்.

   அந்தப் புத்தகத்தில் கண்ணில் பட்டது இந்த ‘ஸ்ரீ ராம நாம மகிமை’ என்ற இந்தப் பாடல்.

   மிக மிக எளிமையாகவும், அதே சமயம் இனிமையாகவும் இருந்த அந்தப் பாடலை இங்கே பகிரத் தோன்றியது. That’s all 🙂

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s