67-மகா பெரியவா – அனுபவங்கள் ஆயிரம்


காஞ்சி முனிவரின் ஜெயந்தி விழா நடந்து கொண்டிருந்தது அயோத்யா மண்டபத்தில். ரொம்பப் பிரமாதமாகவும் உருக்கமாகவும் பேசினார் அந்தப் பிரமுகர்.  கேட்டுக் கொண்டிருந்த அத்தனை பேருக்கும் வியப்பு. பரமாச்சார்யார் மேல் இவருக்கு இத்தனை மதிப்பா ?!

அவருக்குப் பொன்னாடை போர்த்த வந்தபோது, “இந்தப் பொன்னாடையால் என்ன பயன் ?  பெரியவரின் ‘தெய்வத்தின் குரல்‘ நூலை அன்பளிப்பாக அளித்தால் எவ்வளவோ உபயோகம் அல்லவா ?”  என்று கூறினார்.
இதைக் கேட்ட இன்னொரு வி.ஐ.பி. நெகிழ்ந்து போய், தனிப்பட்ட முறையில் ‘தெய்வத்தின் குரல்‘  ஏழு பாகங்களையும் வாங்கி அவருக்கு அனுப்பி வைத்தார்!
http://www.kalkionline.com/kalki/2011/jan/09012011/p6.jpg
அனுப்பியவர் பத்மா சுப்பிரமணியம்.  யாருக்குத் தெரியுமா ?  அப்துஸ் சமது!
மஹா பெரியவா அருள்வாக்கு : –

தான் எத்தனை கஷ்டப்பட்டாலும் அதைப் பொருட்படுத்தாமல் அதற்கு மேம்பட்டு வெளியிலே வருவதுதான் தனக்கு மிஞ்சுவது. இப்படி வந்து லோகத்துக்கு உபகரிப்பதுதான் ‘தனக்கு மிஞ்சி தர்மம்’ என்று வைத்துக் கொள்ள வேண்டும்.

இது ரொம்ப ஹை லெவலில் (உயர் மட்டத்தில்) லோயர் லெவலில் (அதற்கு கீழ்ப்பட்ட நிலையில்) பிறருக்கு திரவிய ஸஹாயம் செய்வதற்காகவே தான் மிச்சம் பிடிக்கும் விதத்தில் வரவுக்குள் செலவை அடக்கி, கடன் கஸ்தி இல்லாமல் சிக்கனமாக வாழ வேண்டும்.

சோற்றுச் செலவை விட ஜாஸ்தியாகும் காபியை நிறுத்துவது; பட்டுத் துணி வேண்டாம் என்று விடுவது; ஸ்வயம்பாக நியமத்தால் (தன் சாப்பாட்டைத் தன் கையாலேயே சமைத்துச் சாப்பிடுவது என்ற நெறியால்) ஹோட்டல் செலவை அடியோடு குறைப்பது; ஸினிமாவுக்குப் போவதை நிறுத்துவது என்ற இந்த நாலை மட்டும் செய்து விட்டால் போதும். எவனும் கடன் கஸ்திப்படாமலிருப்பதோடு, பிறத்தியாருக்கும் திரவிய ரூபத்தில் ஏதோ கொஞ்சமாவது உபகரிக்க முடியும். வரதக்ஷிணை இல்லை, கல்யாணத்துக்காக ஆயிரம் பதினாயிரம் என்று செலவழிப்பதில்லை என்றால் எந்தக் குடும்பத்திலும் பணமுடை, கடன் உபத்ரவம் ஏற்படவே ஏற்படாது. பொதுப் பணிகளுக்கு உதவ ஸம்ருத்தியாகக் கிடைக்கும்.

எது இன்றியமையாதது, எதெது இல்லாவிட்டாலும் வாழ்க்கை நடத்த முடியும்; எதெதுகள் இல்லாமலும் நம் அப்பன் பாட்டனெல்லாரும் ஸந்தோஷமாகவே வாழ்ந்தார்கள் என்று ஆலோசித்துப் பார்த்துத் தேவைகளைக் குறைத்துக் கொண்டு வாழவேண்டும். முதலில் சிரமமாக இருக்கும். சபலங்கள் இழுத்துக்கொண்டுதான் இருக்கும். இருந்தாலும் தாயான அம்பாளை வேண்டிக் கொண்டு, அநுக்ரஹ பலத்தில் தேறித் தெளிந்து ஜயிக்க வேண்டும். அப்புறம் தெரியும், அந்த எளிய வாழ்க்கையில்தான் எத்தனை நிம்மதி இருக்கிறதென்று! அநாவசியங்களை எல்லாம் கழித்துக் கட்டிவிட்டால் நமக்கும் நிம்மதியாக, பிறருக்கும் உதவியாக ஜன்மாவை உயர்த்திக் கொள்ளலாம். அம்பாள் தாயாக, அந்த ஒரே தாயாருக்கு நாம் அத்தனை பேரும் குழந்தைகளாக, ஒரு குடும்பத்தில் பத்துக் குழந்தைகள் இருந்தால் அவை ஒட்டிக் கொண்டு இருக்கிறாற்போல், ஒருத்தருக்கொருத்தர் உபகாரம் பண்ணிக்கொண்டு வாழலாம். இந்த உபகாரம்தான் என்று generalise பண்ண வேண்டியதில்லை; அவாவாள் ஸ்திதியில் எது ஸாத்யமோ அந்த உபகாரத்தைச் செய்து கொண்டு ஆனந்தமாக வாழலாம்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s