புத்தக அறிமுகம்: சாதனை நினைவுகள்! – V.கிருஷ்ணமூர்த்தி


திருச்சி பெல் (BHEL) நிறுவனம் தொடங்கிய மூன்றாண்டுகளிலேயே, அதாவது, 1967 – 68ல் அந் நிறுவனம் ரூ. 42 லட்சம் லாபம் ஈட்டியது. தொழிலாளர்கள் போனஸ் கேட்கத் தொடங்கினார்கள். உடனடியாக போனஸ் கொடுக்க முடியாது. மத்திய அரசைக் கேட்டுத்தான் கொடுக்க முடியும். ஆனால், அவர்கள் போனஸ் கேட்பதில் உள்ள நியாயத்தை உணர்ந்துகொண்டார் கிருஷ்ணமூர்த்தி. போனஸ் பிரச்னையினால் உற்பத்தி பாதித்துவிடக் கூடாது என்ற கவனமும் கூடவே இருந்தது.

மத்திய அரசைக் கேட்காமல் துணிந்து அனைத்துத் தொழிலாளர்களுக்கும் போனஸை அறிவிக்கிறார் கிருஷ்ணமூர்த்தி. விவரம் தெரிந்தவுடன், மத்திய அரசு அதிகாரி ஒப்புக்கொள்ள மறுக்கிறார். தில்லியில் பெல் நிறுவனத்தின் மீட்டிங். அதில் நிலைமையை விவரிக்க, அவர்கள் போனஸுக்கு ஒப்புக்கொள்ளவில்லை. ஆனால், மொத்தத் தொகை ஒன்றைக் கொடுக்க ஒப்புக்கொள்கிறது.

குறைந்தபட்ச போனஸான எட்டு சதவிகிதத் தொகையை வழங்கக்கூட, ஒதுக்கப்பட்ட அந்தத் தொகை போதாது. திருச்சி திரும்பிய கிருஷ்ணமூர்த்தி, 330 மேலாளர்களையும் நிர்வாகிகளையும் அழைத்து ஒரு காரியம் செய்கிறார். ‘உங்களுடைய பங்கு போனஸ் தொகையை விட்டுக் கொடுங்கள். அத்தொகை அனைத்தும் தொழிலாளர்களுக்குக் கொடுக்கத் தேவைப்படுகிறது. இதன் மூலம் தொழிலாளர்களின் நலன் பாதுகாக்கப்படும்’ என்று பேசி ஒப்புதல் பெறுகிறார். போனஸ் தொகை அனைத்துத் தொழிலாளர்களின் முகங்களிலும் மகிழ்ச்சியைக் கொண்டு வருகிறது.

இதுதான், நிர்வாகவியல் சூட்சுமம். தொழிலாளர்களையும் மேலாளர்களையும் முறையாக நடத்தி, அவரவர்களின் தேவைகளைச் சரியாக நிறைவேற்றும்போது, நிறுவனங்கள் வெற்றி பெறுகின்றன.

வி. கிருஷ்ணமூர்த்திக்கு இந்த லாகவம் நன்கு தெரிந்திருந்தது. அதனால்தான், அவரால் பெல், மாருதி, செல் என்று இந்தியாவின் மிக முக்கியமான பொதுத்துறை நிறுவனங்களின் தலைமைப் பதவிகளில் வெற்றிகரமாக இயங்க முடிந்தது. ஒவ்வொரு நிறுவனத்தையும் சர்வதேசத் தரத்துக்கு உயர்த்தவும் முடிந்தது.

பொதுத்துறை நிறுவனங்களை உருவாக்கி, மேம்படுத்திய தமது அனுபவங்களை மிகச் சுவாரசியமாக இந்த நூலில் வழங்கியுள்ளார் கிருஷ்ணமூர்த்தி. சுதந்திர இந்தியாவில் நாம் கண்ட தொழில் கனவுகள் ஒவ்வொன்றும் நிறைவேறுவதை அருகில் இருந்து பார்த்தவர்; அதற்குக் காரணகர்த்தாவாகவும் இருந்தவர் இவர்.

அதுவும் மாருதி நிறுவனத்தின் சின்ன மாடல் கார் உற்பத்தி என்ற சஞ்ச காந்தியின், இந்திரா காந்தியின் கனவை நிறைவேற்றும் பெரும் பொறுப்பை ஏற்றவர் இவர். ஒவ்வொரு கட்டத்திலும் அந்தக் கனவு எதிர்கொண்ட தடைகள், மோதல்கள் கணக்கில் அடங்காதவை.

அத்தனைப் போராட்டங்களுக்குப் பிறகு மாருதி 800 கார் உற்பத்தி தொடங்கி, முதல் காரின் சாவியை உரியவரிடம் கொடுத்தபோது, இந்திராகாந்தி உணர்ச்சிவசப் பட்டதை படிக்கும்போது, நமக்கும் அந்த உணர்வு தொற்றிக் கொள்கிறது.

கிருஷ்ணமூர்த்தி ஓரிடத்தில் குறிப்பிடுகிறார்: ‘நம்மிடம் நவீன தொழில்நுட்பங்கள் இல்லாமல் இருக்கலாம், மூலதனம் இல்லாமல் இருக்கலாம். ஆனால், இவையெல்லாம் இருந்த நிறுவனங்களை விட, நாம் சாதித்தது அதிகம். அதற்கு முக்கிய காரணம் ஊக்கமும் உற்சாகமும்தான். அதேபோல் அரசு நிறுவனங்களாலும் போட்டிகளை எதிர்கொள்ள முடியும், வாடிக்கையாளர்களைத் திருப்திப்படுத்த முடியும் என்பதை நிரூபித்தேன்.’

உண்மை. இந்நூல், இந்திய சாதனை முயற்சிகளின் அட்டவணை. இதை விரைவில் தமிழில் கொண்டுவருவது மிகவும் பயனுடையதாக இருக்கும்.

–நன்றி கல்கி

At The Helm, A Memoir, V. Krishnamurthy, Collins Business, A-75, Sector 57, Noida 201301. Price Rs. 599/-.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s