3-இனி மைசூர்பாகு அல்ல… கோவைபாகு! – தொழில் ரகசியம்


இதன் முந்தைய பகுதி…

photo (7)

“மைசூர் பாகு தயாரிப்பில் அந்தப் பக்குவத்தை எப்படிப் பிடிச்சீங்க? அந்த ரகசியத்தை எங்களுக்கும் சொல்லுங்களேன்?” என்றதும்,

“இதில் ரகசியமெல்லாம் ஏதுமில்லை. மைசூர்பாகு தயாரிப்பில் எல்லோரும் கையாளும் அதே முறையைத்தான் நாங்களும் கையாளுகிறோம். மற்றபடி, பக்குவம் மற்றும் தரத்தில் மிகவும் கவனம் செலுத்துகிறோம்” என்று சொல்லிப் புன்னகைத்த கிருஷ்ணன் தொடர்ந்து பேசினார்…

“எந்த ஒரு தொழிலிலும் ரகசியம் காக்கப்படவில்லை  என்றால், தொழிலாளர்கள் மாற்றம், தொழிலில் கட்டாயம் பாதிப்பை ஏற்படுத்தும். ஆரம்பத்தில் எங்களுக்கும் சில பிரச்னைகள் இது போன்று ஏற்பட்டன. உடனே, அதில் கவனம் செலுத்தினோம். தயாரிப்புக்கான உட்பொருட்கள் இடுவது, அதன் செய்முறை மற்றும் பக்குவமாகச் சமைப்பது என மூன்று பிரிவுகளையும் வெவ்வேறு ஷிஃப்ட்களாக மாற்றினோம். உட்பொருட்களுக்கான உள்வீட்டு வரைமுறை பதிவு செய்யப்பட்டு மொத்தமும் சிஸ்டம் கன்ட்ரோலில் கொண்டுவரப்பட்டது. இரண்டு ஆண்டுகளாக எல்லாவற்றையும் கவனித்து, உட்பொருட்கள் கலவையில் அதிக கவனம் செலுத்தி, இந்த முறையைச் செயல்படுத்தினோம்.

உட்பொருட்களை இடுபவர்களுக்கு அதை எந்த ஸ்வீட்டுக்குப் போடுகிறார்கள் என்பது தெரியாது.  சமையல்காரருக்குக் கலவை தெரியாது. இதனால் சமையல்காரருக்கு உட்பொருட்கள் குறித்த அறிவு தேவையில்லை. இதனால் மிக்ஸிங்கில் பிரச்னை வரவே வராது. எனவே அந்தப் பக்குவம் ரகசியம்” என்றார்.

photo 3 (1)

“உங்க கடையில் மைசூர் பாகு மட்டும் தயாரிப்பது இல்லையே… நிறைய ஸ்வீட்ஸும் விக்கறீங்களே?” என்று கேட்டால், அதற்கும் வருகிறது அசத்தல் பதில்.

“எங்க கடைக்கு வர மக்களில் 90 சதவிகிதம் பேர் மைசூர்பாகுக்காகத் தான் வர்றாங்க. மற்ற ஸ்வீட் வகைகளையெல்லாம் ஒரு எக்ஸ்பீரியன்ஸுக்காக வெச்சிருக்கோம். நாம வாங்கப் போறது ஒரே ஒரு புடவைதான்னாலும், பத்து புடவைகள் இருக்கிற கடையில் போய் புடவை எடுக்கிறதை விட, 100 புடவைகள் இருக்கிற கடையில் போய் புடவை எடுக்கறதைதான் எல்லோரும் விரும்பறோம். 99 புடவையை ரிஜெக்ட் பண்ணி, ஒரு புடவை எடுக்கிறதில் கிடைக்கிற மனத் திருப்தி அலாதி! அதனாலதான் நிறைய பொருட்களைத் தயாரிக்கிறோம். ஆனா, எல்லாப் பொருட்களுமே 100 சதவிகிதம் தரத்துடன் இருக்கும் என்பது மட்டும் நிச்சயம்!” என்கிறார் கிருஷ்ணன்.

கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர்பா, கோவையில் தொடங்கி இப்போது வெளிநாடுகளுக்கும் பயணித்து வருகிறது. யார் கண்டார்கள்… கிருஷ்ணா ஸ்வீட்ஸாரின் புண்ணியத்தில், வருங்காலத்தில் மைசூர் பாகு என்பதற்குப் பதில் கோவைபாகு என்று கூட அதன் பெயர் மாறக் கூடும்.

–நிறைவடைந்தது.

(விகடன் தீபாவளி மலர் – 2013)

 

 

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s