2-இனி மைசூர்பாகு அல்ல… கோவைபாகு! – தொழில் ரகசியம்


இதன் முந்தைய பகுதி…

photo (7)

கிருஷ்ணா ஸ்வீட்சின் 66 ஆண்டு கால சாதனைப் பயணம் குறித்து கிருஷ்ணனிடம் பேசினோம்.

1948-ல் கோயம்புத்தூர் கடை வீதியில் ‘ஸ்ரீ கிருஷ்ண பவன்‘ எனும் சிறிய ஹோட்டலைத் தொடங்கினார் அப்பா. ஹோட்டலின் ஒரு பகுதியில் சிறிய அளவில் ஸ்வீட் ஸ்டால் இருந்துச்சு. அங்கே எல்லா வகையான இனிப்புகளையும் தயார் செஞ்சு வித்தோம். ஆனா, அதுல மைசூர்பாகோட விற்பனை மட்டும் அதிக அளவில் இருந்தது. மக்கள்கிட்ட கிடைச்ச ஆதரவால தனியா ஸ்வீட்ஸ் ஸ்டாலும் தொடங்கினார் அப்பா.

photo 1

அந்தக் காலத்துல ஹோட்டல், ஸ்வீட்ஸ் கடைகள்ள எல்லாம், ‘எங்கள் கடையில் தயாரிக்கப்படும் தின்பண்டங்கள் நெய்யினால் தயாரிக்கப்பட்டவை அல்ல’ அப்படீன்னு எழுதிப் போட்டிருப்பாங்க. ஏன்னா, இனிப்புகள் எண்ணெயால் தயாரிக்கப்பட்டதா, நெய்யினால் தயரிக்கப்பட்டதாங்கிற அறிவிப்பா எழுதி வைக்கணும்கிறது முனிசிபல் ரூல்! ஆனா, நாங்க சுத்தமான நெய்யினால எல்லா ஸ்வீட்சும் தயாரிச்சதால ‘எங்கள் கடையில் தயாரிக்கப்படும் தின்பண்டங்கள் நெய்யினால் தயாரிக்கப்படுபவை’னு அறிவிப்பு போட்டே விற்கத் தொடங்கினோம்.

photo 2

அப்புறம், ஸ்வீட்ஸ் கடையின் வடிவமைப்பை மாத்தினோம். நாங்க பிறந்தது, வளர்ந்தது எல்லாம் கடைவீதி பகுதியில்தான். ஸ்கூலுக்குப் போறப்ப வர்றப்ப எல்லாம் நகைக்கடை, துணிக்கடைகளைப் பார்த்துட்டே போவோம்; வருவோம். அப்ப எல்லாம் ஸ்வீட்ஸ் ஸ்டால்கள் ரோட்டுல வெளிப்படையாகத்தான் இருக்கும். நகைக்கடைகள் மாதிரி உள் அலங்காரம் செஞ்ச கடையில கண்ணாடி கூண்டுக்குள்ள வெச்சு ஸ்வீட்ஸ் விக்கலாமேனு தோணுச்சு. உடனே அதைச் செயல்படுத்தினோம். மைசூர் பாகு என்பதை மைசூர் பா என மாத்தினோம். பொருட்கள் தயாரிப்பிலேயும் கவனம் செலுத்தினோம். இந்த வித்தியாசமான முயற்சிகள் எல்லாம் ரொம்பவே கைகொடுத்துது. மக்களை திரும்பிப் பார்க்க வெச்சுது. மைசூர் பாவின் விற்பனை உச்சத்தை எட்டியது. கோவையின் அடையாளமாக எங்களின் மைசூர் பா மாறியது. உண்மையில் எங்களின் வளர்ச்சி எங்களுக்கே தெரியாமல் நடந்தது என்றுதான் சொல்லவேண்டும்.

உண்மையான ஈடுபாட்டுடன் கூடிய நேர்மறையான முயற்சிகள், நேர்த்தி, ஒழுக்கம் மற்றும் சுத்தமான தயாரிப்பு ஆகியவற்றுக்கு மக்களிடம் எப்போதுமே நல்ல வரவேற்பு உண்டு. எனவே எங்களின் இனிப்புகளைக் கடைப்பொருளாகப் பார்க்காமல், தங்கள் வீட்டிலேயே தயாரித்த பொருளாகப் பார்க்கத் தொடங்கினார்கள் மக்கள். இதுதான் எங்கள் வெற்றி! என்றார் கிருஷ்ணன்  அழுத்தம்திருத்தமாக.

 

இதன் இறுதிப் பகுதி விரைவில்…  (விகடன் தீபாவளி மலர் – 2013)

 

Advertisements

One thought on “2-இனி மைசூர்பாகு அல்ல… கோவைபாகு! – தொழில் ரகசியம்

  1. Umesh Srinivasan July 27, 2014 at 8:02 AM Reply

    உழைப்பு உயர்வு தரும் என்பதற்கு நல்ல உதாரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s