4-ஆரோக்கிய வாழ்வுக்கு ஆதார டிப்ஸ்! – நடிகர் சிவகுமார்


வீட்டில் மனைவியைத்தவிர யாரும் காபி, டீ அருந்துவதில்லையாம்.

காலை பல்லை விளக்கியதும் இரண்டு தம்ளர் தண்ணி குடிப்பேன். இதனால வயிறு சுத்தமாகும். மலச்சிக்கல், வாய் நாற்றம் வயிற்றுக் கோளாறு எதுவும் வராது. ரத்தத்தில சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தறதால சர்க்கரை வியாதியும் வராது.”

தண்ணீர் தேவையான அளவு குடிக்கலேன்னா, ஐம்புலன் சம்பந்தப்பட்ட நோய்களும் வரும். சிறுநீரகம், கல்லீரல் இவற்றில் கற்கள் உருவாகும். இப்ப பசங்க, தண்ணீர் குடிச்சா சிறுநீர் வரும், ஸ்கூல்ல டாய்லெட் வசதி சரியா இல்லன்னு புகார் பண்ணுறாங்க. ஸ்கூல்ஸ் உடனே கவனிக்க வேண்டிய விஷயம் இது.” என கவலைப்படுகிறார் சிவகுமார்.

குடிநீர்னு சொல்றப்ப ஒரு முக்கியமான விஷயம். ஏரேட்டட் குளிர்பானங்கள் பற்றி நான் சொல்லவே தேவையில்லை. எத்தனையோ எச்சரிக்கைக் கட்டுரைகள் வந்தாச்சு. இன்னமும் குழந்தைகள் கேட்டா உடனே வாங்கித் தருகிற பெற்றோர் மேலதான் தப்பு. சின்ன வயசிலேயே பல் ஆடிப் போகுது பல் டாக்டர்கிட்ட போனா அவர் கேக்கிற முதல் கேள்வியே குளிர் பானங்கள் அதிகமாய் சாப்பிடுவீங்களான்னு தான்.”

ஃபோன் ஒலிக்கிறது யாருடனோ மெல்லிய குரலில் சில நொடிகள் பேசிவிட்டு வருகிறார்.

எங்கேயோ தூரத்துல அடிக்கிற கோவில் மணி ஓசையைக் கூட கேட்கிற மென்மையான நம் காதுகளை என்ன பாடுபடுத்தறாங்க இந்தக் காலத்துப் பசங்க” சிவாவின் குரலில் சின்ன வேதனை.

மணிக்கணக்கா காதுல செல்ஃபோன்.அல்லது பாட்டு கேட்க இயர்ஃபோன். ஏதோ ஒண்ணு. கதிர் வீச்சினால் நிச்சயம் கான்சர் வரும்னு அவங்களுக்குத் தெரியாதா என்ன? ஏன் ஸ்பீக்கர் போட்டு தள்ளிவச்சு கேக்கலாமே” என்றவர், “அப்படிக் கேட்டா வீட்டில பெரியவங்களும் கேட்டுருவாங்களேன்னு பயம்” இலேசான எரிச்சல் அவரது குரலில்.

கண் பாதுகாப்புக்கு?

தொடர்ந்து பல மணி நேரம் படிப்பது (அல்லது கம்ப்யூட்டர் பார்ப்பது) என கண்களுக்கு வேலை கொடுக்கும் போது, களைப்படையும். நீர்ப்பசை வற்றி விடும். நல்ல காற்றோட்டமான இடத்தில் நின்று கொண்டு கண்களை மூடிக் கொண்டு இடது வலது புறமாக 70 முறை,மேலும் கீழுமா 40 முறை, இடமிருந்து வலம், வலமிருந்து இடம் என சுழற்றுதல் 20 முறை செய்தால் கண்களுக்குப் புத்துணர்ச்சி கிடைக்கும். பின் குளிர்ந்த நீரில் கண்களைக் கழுவி ஆக்சிஜன் படும்படி ஒரு 5 நிமிடம் நடந்தால் எந்த கண் நோயும் அண்டாது.”

இதை சொல்லியிருப்பவர் சர் விஸ்வேஸ்வரயா, உலகமே போற்றிய நம் நாட்டு விஞ்ஞானி. 60 வருடங்களுக்கு முன் அவர் சொன்னதை நான் இன்றும் செய்து வருகிறேன். என் பிள்ளைகளையும் செய்யச் சொல்கிறேன்.” கண்கள் ஜொலிக்கப் பேசுகிறார் சிவகுமார்.

கோடிக்கணக்கான மைல்களுக்கு அப்பால் இருக்கும் நட்சத்திரங்களையும், சூரியனையும் காணும் தீட்சண்யமான கண்களைக் காக்க வேண்டாமா?’ என்கிறார்.

நிமிர்ந்து உட்கார்ந்து மூச்சை உள்இழுத்து வெளியே விடும் மூச்சுப் பயிற்சியான, பிரணாயாமத்தை ரெகுலராகச் செய்வது நுரையீரல் பலத்துக்கும், ஆஸ்துமா, ஈசனோஃபிலியா போன்ற நோய்கள் வராமல் தடுப்பதற்கும் அவசியம்.”

தொடரும்…

–நன்றி மங்கையர் மலர்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s