62-மகா பெரியவா – அனுபவங்கள் ஆயிரம்


67575-mahaperiyava

டாக்டர்.  எம். கே. வெங்கட்ராமன் அவர்கள் பகிர்ந்து கொண்ட அனுபவம்….

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீ ஜகத்குரு பரமாச்சார்யாள்,  முடிகொண்டான் என்ற இடத்தில் முகாமிட்டிருந்த சமயம்.

ஒரு நாள் மாலை பூஜைக்கு முன்பு, ஸ்ரீ பரமாச்சார்யாள் அவர்களுக்கு கடுமையான ஜுரம்.  இந்த விஷயம் அங்கிருந்த பக்தர்களுக்குத் தெரியாது.  ஸ்ரீ ஆசார்யாள் எல்லோரையும் விஷ்ணு ஸஹஸ்ரநாமம் பாராயணம் செய்யச் சொன்னார்.  பாராயணம் முடிந்தவுடன் ஸ்ரீ பெரியவாள், சுருக்கமாக எல்லோரையும் பார்த்து,  “நீங்கள் எல்லோரும் தவறாமல் விஷ்ணு ஸஹஸ்ரநாமம் பாராயணம் செய்ய வேண்டும்.  அரை மணிக்கு முன்பு எனக்கு கடுமையான ஜுரம்.  இப்போது நிவர்த்தியாகி விட்டது.  இப்போது ஸ்நானம் செய்து விட்டு பூஜைக்கு உட்காரப் போகிறேன்”  என்றார்கள்.

இதே போல, இரண்டாம் உலகப் போர் மிகக் கடுமையாக இருந்த நேரம், நாஸி ஜெர்மானியக் குண்டு சென்னையில் விழப் போகிறது என்ற நிலையில் சென்னையிலிருந்து பலர், தென் ஜில்லாக்களுக்குத் தங்கள் குடும்பத்தை அனுப்பி விட்டனர்.    சென்னை மாகாணம் முழுவதும் பீதியடைந்த தருணத்தில் ஸ்ரீ ஆச்சாரிய  சுவாமிகள்,  “எல்லோரும் விஷ்ணு ஸஹஸ்ரநாமம் பாராயணம் செய்யுங்கள்.  ஒரு ஆபத்தும் நேராது” என்று கூறினார்கள்.  அதன்படி, சென்னையில் பல இடங்களில், அன்பர்கள் பாராயணத்தில் ஈடுபட்டார்கள்.  யுத்தத்தினால், சென்னைக்கும் நம் தேசத்திற்கும் யாதொரு அபாயமும் ஏற்படவில்லை.

மஹா பெரியவா அருள்வாக்கு : –

நம் பிறப்புக்குக் காரணம் காமம். அதாவது ஆசை. நம் இறப்புக்குக் காரணம் காலம். காலம் ஆகிவிட்டால் உலகத்தில் உள்ள உயிர்களெல்லாம் அழிந்து விடுகின்றன. ‘காலமாகி விட்டார்’ என்று சொல்லுவதன் அர்த்தம் இதுதான். ஈஸ்வரனோ காமத்தையும் காலத்தையும் வென்றவர். ‘காமனைக் கண்ணால் எரித்தவன்’ ‘காலனைக் காலால் உதைத்தவன்’ அல்லவா அவர்? ஆகையால் பிறப்பும் இறப்பும் இல்லாத ஈஸ்வரனை உபாசனை செய்வதன் மூலம் நாம் பிறப்பு இறப்பு என்ற பிணிகளிலிருந்து தப்பலாம்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s