நூல் விமர்சனம்: தியாக சீலர் கக்கன் – முனைவர் இளசை சுந்தரம்


1920 வாக்கில் மதுரை ஏ.வைத்தியநாதயருக்கு அறிமுகமானார் கக்கன். ஐயரைப் பெரிதும் கவர்ந்த கக்கன் அந்த வீட்டிலேயே தங்கிக் கொள்ளவும் அனுமதிக்கப்பட்டார். அவரைத் தம் மக்களில் ஒருவராகவே கருதி அன்பு செலுத்தினார் ஐயர். அவர் இரவு எத்தனை மணிக்கு வீடு திரும்பினாலும் ‘கக்கன் வீட்டுக்கு வந்தாகி விட்டதா? சாப்பிட்டு விட்டானா?’ என்று கேட்பாராம் ஐயர். கக்கனுடன் அவர் நெருங்கிப் பழகியபோது அவருடைய பல உள்ளுணர்வுகளையும் அவரால் புரிந்துகொள்ள முடிந்திருக்கிறது. அதனால் 1939 ஆலயப் பிரவேச நிகழ்வுகளின்போது அதற்கான குழுவில் கக்கனையும் இணைத்துக் கொண்டார் வைத்தியநாத ஐயர்.

1955-ல் ஐயர் காலமான செய்தி கேட்டு மதுரை விரைந்தார் கக்கன். அப்போது நாடாளுமன்ற உறுப்பினராகவும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராகவும் இருந்தார் அவர். இறுதிச்சடங்கின் போது ஐயரின் பிள்ளைகளைப் போலவே தாமும் தலையை மொட்டையடித்துக் கொண்டு பங்குகொண்டார். ‘தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த ஒருவரை இதற்கு அனுமதிப்பதா?’ என்று உறவினர்களும் சமுதாயமும் எதிர்த்தன.

நாங்கள் பிறப்பால் மகன்களானோம். ஆனால் கக்கன் வளர்ப்பால் மகனாவார். எங்களுக்கு என்ன உரிமை இருக்கிறதோ, அதே உரிமை கக்கனுக்கும் இருக்கிறது” என்று ஐயரின் பிள்ளைகளும் மனைவியும் சொல்லி அவர்களின் வாயை அடைத்தார்களாம்.

தம்முடைய மகள் கஸ்தூரியின் திருமணம் நடைபெற்றபோது உள்துறை அமைச்சராக இருந்த கக்கன் ‘பரிசுகளைத் தவிர்க்கவும்’ என்று அழைப்பிதழில் வேண்டுகோள் விடுத்திருந்தார். அதனால் பலர் நூல்களாகவே வழங்கினார்கள். அப்படியிருந்தும் பரிசுப் பொருள்களோடு ஒரு சிறிய அட்டைப் பெட்டியில் இரண்டு பொன் வளையல்களும் வந்திருப்பது தெரியவந்ததாம். காவல்துறை அதிகாரிகள் விசாரித்து யார் அதைத் தந்தது என்று கண்டறிந்து சொல்லிவிட்டார்கள். உடனே அவருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தம்மைக் காலையில் சந்திக்குமாறு சொன்னார் கக்கன்.

அவர் வந்ததும் மகளையும் மருமகனையும் அழைத்து அவருடைய கால்களில் விழுந்து வணங்கச் சொன்னார். மணமக்களை மனமார, வாயார வாழ்த்துங்கள். அதுபோதும்” என்று சொல்லி அன்பளிப்பாகத் தரப்பட்ட அந்தப் பொன் வளையல்களை அவரிடமே திருப்பிக் கொடுத்தார் கக்கன்.

அந்த மருமகனுக்கு மத்திய அரசில் ஒரு வேலை கிடைத்து அந்தமானுக்குப் பயணமாக இருந்தபோது கக்கன் மகளுக்குச் சொன்ன அறிவுரை: உன் கணவரின் அனுமதி இல்லாமல் எந்தப் பொருளையும் நீ அன்பளிப்பாக வாங்கவோ கொடுக்கவோ கூடாது. காய்கறி, பழம் உட்பட எந்தப் பொருளையும் இலவசமாக வாங்கவே கூடாது.”

இளசை சுந்தரம் எழுதியுள்ள 100 சிறு சிறு கட்டுரைகளின் தொகுப்பான இந்த நூலில் இப்படி நெஞ்சை நெகிழ்விக்கும் பல நம்பவே முடியாத நிகழ்வுகளைப் படித்து பிரமிக்க முடிகிறது. இந்த அரிய கருவூலமான நூலைப் பதிப்பித்து வெளியிட்டுள்ள கலைமாமணி வீ.கே.டி.பாலன் எழுதியுள்ள இரண்டே வரிப் பதிப்புரை – வாசிப்பவர்கள் மனத்தில் கொஞ்சம் ஈரம் கசிந்தாலே போதும்” அவ்வளவுதான்!

திருமணங்களுக்கு அன்பளிப்பாகத் தரக்கூடிய ஒரு நல்ல நூல்.

சுப்ர.பாலன்  (நன்றி கல்கி)

தியாக சீலர் கக்கன், முனைவர் இளசை சுந்தரம்,

மதுரா வெளியீடு. மதுரா டிராவல் சர்வீஸ் (பி) லிட்., சென்னை 600 008

ரூ. 100

தொ.பே .044 – 2819 2002

Advertisements

One thought on “நூல் விமர்சனம்: தியாக சீலர் கக்கன் – முனைவர் இளசை சுந்தரம்

  1. BaalHanuman July 25, 2014 at 5:51 AM Reply

    காமராஜரைப் பற்றி அருமையான நூல் எழுதிய பெரும் பேச்சாளர் இளசை சுந்தரம், கக்கன்ஜி பற்றி எழுதியுள்ள அபூர்வ நூல் இது. யார் யாருக்கோ நூல்கள் உள்ள இந்த நாட்டில் தன்னலமற்ற தேசத் தொண்டர் கக்கனுக்கு அதிக நூல்கள் இல்லையே என்பது என் ஆதங்கம் என்ற முன்னுரையுடன் துவங்கியுள்ள நூலாசிரியர், நூறு கட்டுரைகளாக தந்துள்ளார்.

    கக்கன் பற்றி அவ்வளவாக பதிவுகள் இல்லாத நிலையிலும், நூலாசிரியரின் அயராத தேடல், புதிய தகவல்களை நமக்குத் தருகிறது. எளிமையே எனது வாழ்க்கை என்று வாழ்ந்த காந்தியையும், கக்கனையும் பல இடங்களில் ஆசிரியர் உதாரணங்களோடு ஒப்பிட்டுள்ளார். இன்றைய அரசியல்வாதிகள் கவனித்து படிக்கவேண்டிய புத்தகம்.

    ஆன்லைனில் வாங்க: http://www.nhm.in/shop/100-00-0002-232-1.html
    ஃபோன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 94459 01234

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s