3-ஆரோக்கிய வாழ்வுக்கு ஆதார டிப்ஸ்! – நடிகர் சிவகுமார்


காலை உணவு ஏழிலேர்ந்து எட்டு அல்லது எட்டரை, அதே மாதிரி மதியம் மீல்ஸ், இரவு சாப்பாடு என்று உங்க வேலையைப் பொறுத்து ஏதோ ஒரு டயத்துக்குள்ள கரெக்டா சாப்பிடற மாதிரி வயிற்றைப் பழக்கி வைக்கணும். அந்த நேரம் வந்தா சரியா ஜீரணத்துக்குத் தேவையான என்சைம்ஸ் சுரந்து ‘பையோ க்ளாக்’ கூப்பிடும். பெட்ரோல் போடாம வண்டியை எடுப்பீங்களா? அதேபோலதானே வயிறும்! சூர்யா, கார்த்தியைக் கூட நேரத்துக்கு சாப்பிடாம வெளியே கிளம்பாதீங்கன்னு கண்டிப்பேன்.”

அதே போல டாய்லெட்டும் தினம் இரண்டு முறை போவதுன்னு பழகிக்கணும். வயிறு ஒழுங்கா இருந்தாத் தானே மத்த உறுப்புக்களும் சரியாயிருக்கும்?

தலைமைச் செயலகமான மூளைக்கு சுத்த ரத்தம் போனாதான் உயிர் வாழ முடியும்னு உங்க எல்லாருக்கும் தெரியும். பரிணாம வளர்ச்சியினால மனிதக் குலம் நிமிர்ந்து நின்னப்ப, மூளை மேல போக, பம்ப்பிங் ஸ்டேஷனான இதயம் கீழே வந்தாச்சு. புவி ஈர்ப்பு விசைக்கு எதிரா ரத்தம் போகணும்.

இதை 5000 வருஷத்துக்கு முன்னாலேயே சரியா புரிஞ்சுக்கிட்ட நம் முன்னோர்கள் சிரசாசனம் கண்டுபிடிச்சாங்க. மூன்று நாலு நிமிஷம் சிரசானம் செய்கிற போது மூளைக்குப் போகிற ரத்த ஓட்டம் சீராகும்.

கண்கள் பிரகாசமாகும். குறிப்பா ஞாபக சக்தி அதிகரிக்கும். 40 வருஷமாய் நான் சிரசாசனம் செய்கிறேன்.”

(இப்போது புரிகிறது. தொடர்ந்து 2 மணி நேரம் கம்பன் உரை, இலக்கிய உரைகள் நிகழ்த்தும் போது தடையின்றி அருவியாக வந்து விழுகின்ற பாடல்கள், கருத்துக்களை சிவகுமார் எப்படி நினைவில் வைத்திருக்கிறார் என்று.)

சிவகுமார் ஒரு யோகா பயனாளி. கணுக்கால், முட்டி வலி வராமலிருக்க உதவும் வஜ்ராசனம், வயிறு, குடல், கல்லீரல் எல்லா உறுப்புக்களுக்கும் ஏற்ற, பல வித ஆசனங்களையும் சிவகுமார் தவறாமல் செய்கிறார்.

எல்லா ஆசனங்களும் எந்த வயதில் வேண்டுமானாலும் செய்யலாமா?

ஒரு நல்ல யோகா ஆசிரியர், அவரவர் உடலுக்கும் வயதுக்கும் ஏற்ற மாதிரிதான் சொல்லித் தருவார். அதை செய்தாலே போதும். முகம் மேலே பார்த்திருக்க, கழுத்து, தலை, தோள் தரையில் கிடத்தி செய்யும் சர்வாங்க ஆசனத்தை யார் வேணுமானாலும் செய்யலாம் வாரியார் சுவாமிகள் 80 வயது வரையிலும் செய்து வந்தார். இது சிரசானத்தில் 80 சதவீத பலன் தரும். உடம்பின் வளைந்து கொடுக்கும் திறன் (ஃப்ளெக்சிபிலிடி)அதிகரிக்கும்.”

நீங்க யார்கிட்ட யோகாசனம் கத்துக்கிட்டீங்க?

சிரித்தபடி.”புத்தகங்களில்” என்றார்.

1958-ல் சென்னைக்கு வந்தபோது இவரது சின்னத் தொப்பையைப் பார்த்த நண்பர் ஒருவர் யோகாசனம் செய்யச் சொன்னாராம். கன்னிமாரா நூலகத்தில் அப்போது சந்தா மூன்று ரூபாய். அதைக் கட்டி விட்டு, வி.என்.சுந்தரம். வி.என். குமாரசாமி எழுதிய யோகா புத்தகங்கள் எடுத்து வந்து அதைப் பார்த்து தான் கற்றுக் கொண்டாராம்.

தினமும் அதிகாலை நாலரை மணி முதல் ஒரு மணி நேரம் நடப்பேன். அப்புறம் எட்டு வித யோகாசனம் செய்வேன். உடற்பயிற்சி மனசு சம்பந்தப்பட்டது.”என்கிறார். எப்படி?

அது ஆசனமோ, உடற்பயிற்சியோ, தியானமோ நான் நிச்சயம் இதை ரெகுலராக செய்வேன் என மனசு தீர்மானித்துக் கொண்டால், உடல் கேட்கும்., எந்த உடற்பயிற்சியும் வயசுக்கு ஏத்தா மாதிரி செய்யணும் ஆனா பாருங்க… யாரு வேணா செய்யக் கூடிய எளிய பயிற்சி எது தெரியுமா..?

நடை தான். வாக்கிங் எத்தனை வயசு வரை வேணா போகலாம் ஏ.சி ரூமுக்குள்ள அடைஞ்சுக்கிட்டு ட்ரெட் மில்ல நடக்கிறதெல்லாம் தாற்காலிகமானது. அதிகாலை நேரத்துல பரந்த வானம், பசுமை மரங்கள் இதெல்லாம் மனசுக்கு மலர்ச்சி தர வாக் போய்ப் பாருங்க. உடம்பு மனசு ரெண்டுக்கும் மிக நலமே”.

தொடரும்…

–நன்றி மங்கையர் மலர்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s