61-மகா பெரியவா – அனுபவங்கள் ஆயிரம்


1888473_616442668409685_526532623_n

பெரியவருக்குக் கனகாபிஷேகம் நடந்த சமயத்தில், மொத்தம் முப்பது நாள் நான் போய் சமைத்தேன். எப்படி எல்லாருக்கும் சாப்பாடு பரிமாறுகிறார்கள் என்று பார்க்கப் புதுப் பெரியவர் ஜெயேந்திரரும், பால பெரியவரும் ஒருநாள் வந்திருந்தார்கள்.

காமாட்சி கல்யாண மண்டபத்தில் மாடியில் அரசியல் தலைவர்களுக்கு, அதே மாடியின் முன் ஹாலில் மற்ற பிரபலஸ்தர்களுக்கும், தரிசனத்துக்குக்காக மடத்துக்கு வந்த மற்ற பக்தர்களுக்குக் கீழே பந்தலிலும் என்று பிரித்துப் பந்தி போட்டிருந்தேன் (சாப்பாடு என்னவோ எல்லாருக்கும் ஒரே அயிட்டங்கள்தான்). இந்தப் பக்தர்கள் வரிசையில் கடைசியாக இரண்டு வரிசைகள் பிரித்திருந்தேன். ஒரு வரிசை பசியோடு வரும் நரிக்குறவர்களுக்கு… இன்னொரு வரிசை ஊனமுற்றவர்களுக்கு! நெரிசல் இல்லாமல், எந்தத் தயக்கமும் இல்லாமல் அவர்கள் சாப்பிடத்தான் இந்த ஏற்பாடு.

ஊனமுற்று, கையில் விரல்கள் இல்லாமலிருந்த சிலருக்கு மட்டும் சாத வகைகளை நாங்கள் பிசைந்தே (கலந்த சாதமாக) பரிமாறியிருந்தோம். இரண்டு பெரியவர்களும் இதைக் கண்டனர். ‘ரொம்ப யோசிச்சுத்தான் பண்ணியிருக்க… உனக்கு நிறைய புண்ணியம் கிடைக்கும்!’ என்று புதுப் பெரியவர் வாழ்த்தினார்.

இதேபோன்று, ஒருசமயம் பெரியவர் ஜெயந்தியன்று நான் சமைத்து முடித்த பிறகு, என்னைக் கூப்பிட்டு அனுப்பினார். தன் முன் இருந்த மூங்கில் தட்டை எடுத்து அதிலிருந்த பணத்தை என்னிடம் சம்பளமாகக் கொடுக்கச் சொன்னார்.

மடத்தில் இருக்கும் உதவியாளர் சந்திரா தட்டை எடுத்தார்.

நான் அப்படியே என் மேல்துண்டை ஏந்த… அதைக் கவிழ்த்தார். இரண்டு ரூபாய், ஐந்து ரூபாய், பத்து ரூபாய் நோட்டுக்கட்டுகள்! நிறைய சில்லறைக் காசு! கூடவே அரை கிராம் தங்கக்காசு உள்பட அப்படியே என் மேல்துண்டில் விழுந்து கனத்தது.

நான் திகைப்பு மாறாமல் பார்த்தேன். பல வருடங்களுக்கு முன்பும் இதே போல் மூங்கில் தட்டிலிருந்து பதினோரு ரூபாய் கொடுத்தபோது சிரித்தாரே… அதே மாதிரி சிரித்துக் கையை உயர்த்தி ஆசீர்வதித்தார் மகா பெரியவர்.

https://balhanuman.files.wordpress.com/2013/02/maha_periyava_014s5b15d.jpg?w=200

நான் சிலிர்த்தேன்.

ஆனால், முதலில் பெற்ற பதினோரு ரூபாய் மாதிரி இந்தப் பணத்தையும் செலவழித்துத்தான் குடும்பம் நடத்த வேண்டும் என்ற அவசியத்தை இப்போது எனக்கு அவர் வைக்கவில்லை. வீட்டுக்குக் கொண்டுவந்து, எண்ணிக்கூடப் பார்க்காமல் அப்படியே ஒரு டிஃபன் பாக்ஸில் ரூபாய் நோட்டுக்களையும் நாணயங்களையும் போட்டேன். என் சொந்த வீட்டின் பிரத்தியேக பூஜை அறையில், நான் வைத்திருக்கும் அவருடைய பெரிய படத்தின் முன், இந்த  டிஃபன் பாக்சை வைத்து, வெள்ளிக்கிழமைதோறும் பூஜை செய்து வருகிறேன்.

மஹா பெரியவா அருள்வாக்கு : –

* சொந்தக் குடும்பத்துக்கு மட்டும் சேர்க்காமல் வெளியார் இருவர் வயிறும் குளிரப் பண்ணுங்கள்.

* பசியோடு இருப்பவர்களுக்கு அன்னமிட்டு வந்தால், பஞ்சமே வராது.

* தானங்கள் எல்லாவற்றிலும் சிறந்தது அன்னதானம்.

* அன்னதானத்தில் தான் ஒருவரை முழுமையாகத் திருப்திப்படுத்த முடியும்.

* நீங்கள் சாப்பிடுவதைவிட, ஓர் ஏழைக்குச் சாப்பாடு போட்டால் அதில் உங்களுக்கு இன்னும் அதிகமாக இன்பம் உண்டாகும்.

Advertisements

4 thoughts on “61-மகா பெரியவா – அனுபவங்கள் ஆயிரம்

 1. vijaya July 17, 2014 at 4:33 AM Reply

  This is one of the best article I have ever read. This article moved me to tears. I am determined to follow Maha Periava’s Arul Vakku (the last 5 points are worth memorizing) This will keep me anchored.
  vijaya

 2. shanmugananda July 17, 2014 at 7:48 AM Reply

  Same with me as told in the above comment.

 3. Venky Natarajan August 16, 2014 at 11:30 PM Reply

  I read this with tears in my eyes. If each one of us feed at least one another person, no one will go hungry in this world.

 4. Varadarajan Krishnan August 22, 2014 at 7:11 PM Reply

  மனதில் அத்தனை ஆதங்கம், இதைப் படிக்கும்போது! நான் எத்துனை பாபம் செய்திருந்தால் இதுபோன்ற அனுபவங்கள் எனக்குக் கிடைக்காமல் போயிருக்கும்? இனிமேல் என்னால் முடிந்த அளவு பிறரின் பசியைப் போக்க வழி செய்வேன் என்று உறுதி கொள்கிறேன். சரணாகதி அடைகிறேன் mahaperiyavaa.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s