2-ஆரோக்கிய வாழ்வுக்கு ஆதார டிப்ஸ்! – நடிகர் சிவகுமார்


நீங்க ப்யூர் வெஜிடேரியனா ஸார்?

எப்பவோ சென்னைக்கு வந்த புதுசில உடல் பலம் வேணும்னு நினைச்சு கொஞ்ச நாள் அசைவம் சாப்பிட்டேன் ஆனா இப்ப விட்டு எத்தனையோ வருஷமாச்சு.

நம்ம ஊர்ல என்ன பண்றாங்க, அசைவம் சாப்பிட்டா ஆரோக்கியம்னு நினைச்சும், பாடி பில்ட் பண்ணி பயில்வான்னு பேர் வாங்கணும்னும் நினைச்சு இறைச்சி சாப்பிடறாங்க. சின்ன வயசில் வயிறு ஜீரணிக்குது. ஆனா ஒரு 45, 50 வயசுக்கு மேலே வயிற்றுக்கு ஜீரண சக்தி குறைஞ்சுடும். ஜீரண உறுப்புகளுக்கு அதிக வேலை தரக் கூடாதுன்னுதான் இயற்கையே பல்லை வீக்காக்குது. ஆட்டம் தருது. ஆனா நம்ம என்ன பண்றோம். உடனே பல் டாக்டரைப் பார்த்து செயற்கைப் பல்லோ எதுவோ செய்து, பல்லை பலமாக்கி, பழையபடியே அசைவம், நொறுக்குத் தீனின்னு ஒரு கை பார்க்கிறோம். இதனால வயிறு, கல்லீரல் எல்லாத்துக்கும் ஓவர்லோடு. 60 வயசுக்குள்ள ஹார்ட் அட்டாக்! உலகப் புகழ்பெற்ற குத்துச்சண்டை வீரர்கள், பளு தூக்கி தங்கப் பதக்கம் வாங்கின வீரர்கள் எல்லம் கண்டபடி சாப்பிட்டு சதை வளர்த்து சீக்கிரமே இதய நோய்க்கு ஆளாயிடறாங்க.”

புதிய கோணத்தில் பேசுகிறார் சிவகுமார்.

ஆமாங்க, வயசானா கண் மங்குது, காது கேட்கலே, உடம்பு வீக்காகுது. இயற்கையே ஒரு வயசுக்கு மேலே நம்மைக் கட்டுப்படுத்த நினைக்குது. ஆனா கண் ஆபரேஷன், கண்ணாடி, ஹியரிங் எய்ட், மருந்து மாத்திரைன்னு எல்லாம் உபயோகப்படுத்தறோம்.அதை நான் தப்பா சொல்லலே. ஆனா இயற்கையை எதிர்க்கிறப்ப அது வேற மாதிரி பக்க விளைவுகளை உண்டாக்குது”

நான் சின்னவனா இருந்தப்ப மஞ்சள் சோளம் சோறு தண்ணீர் விட்ட பழையது; அது பேர் தீஞ்ச சாப்பாடு – அதைச் சாப்பிட்டு விட்டு ஸ்கூலுக்கு எட்டு கிலோ மீட்டர் நடந்து தான் போவேன். இப்ப சின்னப் பசங்க கூட பக்கத்துத் தெருவுக்குப் போக ஸ்கூட்டர். கார் கேக்கறாங்க. அப்புறம் இரவில் எங்க சாப்பாடு கேழ்வரகுக் களி, தட்டைப்பயறு உப்புமா, கம்பு தோசை இப்படித்தான் இருக்கும்.

எல்லா வீடுகள்லேயும் மாடு இருக்கும். பால் கறந்த உடனே அப்படியே அந்த சூட்டோட அரை லிட்டர் குடிப்பேன். கொழுப்பு என்று இப்போ எச்சரிக்கை செய்கிற கெட்டித்தயிர், அம்மா வீட்டிலேயே கடைந்து எடுக்கிற வெண்ணெய் எல்லாமே நல்லா சாப்பிடுவோம். எல்லாம் நடை, விளையாட்டுன்னு பர்ன் ஆயிடும். உடம்புல சேராது. சருமம் நல்லா மினுமினுன்னு இருக்கும். இப்ப சின்ன வயசுலேயெ நெய் சாப்பிடாதே, பால் குடிக்காதேன்னு டயட் இருக்கச் சொல்றாங்க. ஏன்னா, உடல் உழைப்பு குறைஞ்சு போச்சு” என்று ஆதங்கப்படுகிறார்.

தொடரும்…

–நன்றி மங்கையர் மலர்

Advertisements

One thought on “2-ஆரோக்கிய வாழ்வுக்கு ஆதார டிப்ஸ்! – நடிகர் சிவகுமார்

 1. CNS July 17, 2014 at 1:38 AM Reply

  ​யாராவது எண்ணிப்பார்தீர்களா ? அசைவம் இல்லாத உலகம் எப்படி இருக்கும் என்று?

  Whales & Sharks are hunted on high seas and converted into ‘tinned food” before sending them to any shore.

  Fishermen from all nations go with their trawlers and smaller boats for bringing the ”food” to sell.

  Besides Sea Food there is the Meat – Goat, Cows, Pigs, Camels et all! Do Not Know if the Billions of Eggs consumed is still counted as Non Veg or Not

  If we decide to STOP all this who will supplement the ‘Shortage’.

  At the end there is no denying the fact – it is all the part of a Natures Way of keeping the World ;going’

  EAT as Much as YOU want, if you can! But ENSURE you BURN all of it before the next MEAL?

  That is What the ARMY does. Feeds its Soldiers Well and makes sure they Exercise to Burn.

  Remember the old saying: “The Army Marches on its Belly” !

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s