1-ஆரோக்கிய வாழ்வுக்கு ஆதார டிப்ஸ்! – நடிகர் சிவகுமார்


சுமார் 50 வருடங்களாக சிவாஜி, எம்.ஜி.ஆர் என ஆரம்பித்து, ரஜனி, கமல் என தொடர்ந்து அஜீத், விஜய் வரை மூன்று தலைமுறை நடிகர்களுடன், 200 படங்களுக்கு மேல் நடித்திருந்தும், எல்லா சபலங்களுக்கும் அதிக வாய்ப்புள்ள திரையுலகில் மது, மாது, காபி, டீ, சிகரெட், பாக்கு என்று எந்த கெட்டப் பழக்கத்துக்கும் ஆளாகாத மார்க்கண்டேயராச்சே! ஆரோக்கியம் சம்பந்தமாக பல நல்ல கருத்துக்களை சமூகத்துக்கு சொல்ல சிவகுமாருக்கு இல்லாத தகுதியா?

தாயிடம் கரு உருவாகும் போதே பேட்டரியை ஃபிக்ஸ் செய்து, குறிப்பிட்ட வயது வரை வாழணும்னு புரோகிராம் பண்ணி அனுப்பிடறாரு கடவுள். அதுவரை அதை நல்லபடியா பார்த்துக்க வேண்டியது நம்ம பொறுப்பு!

தாயின் வயிற்றிலிருந்து குழந்தையானது, வெளிவந்து வெளிக்காற்றை சுவாசிக்க ஆரம்பிக்கிறபோதே உடல் நலம் கவனிக்கணும். கூவம் ஓரம் அல்லது குளிர் ஏசி ரெண்டுமே பிறந்த குழந்தைக்குக் கெடுதல் தானே?” என்று ஆரம்பிக்கிறார்.

உயிர் வாழ பிராண வாயு வேணும்; அதுக்கு சுத்தமான காற்று வேணும். ஆரோக்கியத்துக்கு முதல் தேவையே

சுத்தமான காற்றுதான். அந்த சுவாசத்துனால ரத்தம் சுத்தமாகும் சுத்தமான ரத்தம் தான் நல்ல ஆரோக்கியம் சிட்டியிலே சுத்தமான காற்று எப்ப கிடைக்கும் தெரியுமா? விடியற்காலை நாலு மணிலேருந்து சுமார் ஆறு ஆறரை மணி வரைதான். ஓசோன் படலம் இருக்கும். அப்பறமாய் வெயில், வாகனங்களின் புகைன்னு அது காணாமப் போயிடும்..

நான் பதினாறு வயது வரை கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் பக்கம் கிராமத்துல சுத்தமான காத்துல வளர்ந்தவன். இப்ப நான் காலை நாலரை மணிக்கு வாக் போறேன். இப்படி காலையிலே சீக்கிரம் எழுந்து சுறுசுறுப்பாய் இருக்கணும்னா அதுக்கு குறைஞ்ச பட்சம் 7 மணி நேரத் தூக்கம் கண்டிப்பா வேணும். 5 மணி நேரம் மட்டும் தூங்கறவங்களுக்கு மாரடைப்பு வரதுக்கான வாய்ப்பு 40 சதவீதம். அதற்கும் குறைவா தூங்கினா 70 சதவீதம் மாரடைப்பு வாய்ப்பு நிச்சயம். இதை உணராம ராத்திரி ரொம்ப நேரம் டி.வி. பார்க்கிறாங்களே!

சரி, நான் படிச்சப்போ அநேகமாய் எல்லா ஸ்கூல்லேயும் விளையாட்டு மைதானம் இருக்கும். தினம் ஒன்றரை மணி நேரம் விளையாடுவோம். இப்ப பசங்களுக்கு அவுட்டோர் கேம்ஸே இல்லையே… நான் பார்த்தவரை, 90 சதவீத பள்ளிக் கூடங்களில ப்ளே கிரவுண்ட்டே கிடையாது.

சரி,சாப்பாட்டு விஷயத்துக்கு வாங்க…

நம்ம நாட்டுல, நம்ம க்ளைமேட்டுக்கு இந்த மண்ணுல விளையற உணவுகள்தான் ஏற்றது. வழி வழியா நம்ம மரபணுக்கள் ஏத்துக்கிட்ட விஷயமும் அதுதான். ஆனா, பளபள கவர்கள்ல, பண்டம் பாதி, வெற்றிடம் பாதின்னு விற்பனையாகிற நொறுக்ஸை, உங்கக் குழந்தை சாப்பிடறதால, பத்து பன்னிரண்டு வயசுலயே தைராய்ட் பிரச்னை, உடல் பருமன், ஷுகர் எல்லாம் கண்டிப்பா வரும். இதை நான் சொல்லலே. ஆராய்ச்சிகள் மூலம் நிரூபிச்சிருக்காங்க”

வெளிநாடுகள் குளிர் தேசம். அவங்க சாப்பிடற உணவு வகைகள், குடிக்கிற விஸ்கி, ஒயின் எல்லாம் நம்ம உஷ்ண தேசத்துக்கு ஒத்துக்குமா? இயற்கைக்கு மாறா நாம் செய்யற எதுவும் நிச்சயமா நம்ம ஆரோக்கியத்தை பாதிக்கும்தானே?” நியாயம் ஒலிக்கிறது அவர் குரலில்.

தொடரும்…

–நன்றி மங்கையர் மலர்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s