60-மகா பெரியவா – அனுபவங்கள் ஆயிரம்


Periyavaa1

ஞானாம்பிகா‘ ஜெயராமன் கூறுகிறார்…

அரண்மனையில் நடக்கிற விருந்தைக் காட்டிலும் அமர்க்களமான விருந்து நடக்கிற இடம் காஞ்சி சங்கர மடம்! வருடா வருடம் மகா பெரியவர் பிறந்த தினத்தின்போது பாயசம், கூட்டு, பொரியல்னு அமோக விருந்து நடக்கும். அப்பாவோட (நன்னிலம் நாராயணசாமி ஐயர்) சமையல் மீது பெரியவாவுக்கு மிகுந்த மதிப்பும், விருப்பமும் இருந்தது. அதிலும் தயிரை சம்பாரம் செய்து அப்பா சுவையாகத் தயாரிக்கும் மோர் பெரியவாளுக்கு ரொம்பவே பிடிக்கும்.

மோரை சம்பாரம் செய்றதுன்னா என்னன்னு கேட்கறீங்களா ? தயிரை நீரில் ஊற்றி, இஞ்சி, உப்பு, கறிவேப்பிலை சேர்த்து எல்லோரும் சேர்ந்து கடைவோம். ஒரு முறை பருகியவர்கள் மறு முறை சம்பாரம் செய்த மோரைக் கேட்டு வாங்கிப் பருகுவார்கள். அந்தளவுக்குச் சுவையாக இருக்கும். இத்தனைக்கும் மோரை சம்பாரம் செய்வது ரூம் போட்டு யோசித்து எடுத்த ஐடியா அல்ல.

ஒரு முறை பெரியவா விழா நடந்தபோது மோர் போதவில்லை. சாம்பார், ரசத்தோடு சாப்பாடு முடிந்தால் குறையாகி விடுமே என்று, அப்பா அடுத்த சில நிமிடங்களில் அடுத்த நாள் உபயோகத்துக்காக எடுத்து வைத்திருந்த தயிரை, தண்ணீரோடு கலந்து இஞ்சி, கறிவேப்பிலை எல்லாம் சேர்த்து அவசர கதியில் தயாரித்த பானம் அது!

சம்பாரம் செய்த மோரைக் கூட பெரியவா கேட்டு வாங்கிப் பருக மாட்டார். ஆனால், அப்பா செய்யும் உப்புமாவின் வாசம் நாசியை எட்டி விட்டால், சமையற்கட்டுக்கே வந்து விடுவார் பெரியவா. ‘உப்புமா ரொம்ப வாசனையா இருக்கே… எனக்குக் கொஞ்சம் தரக் கூடாதா நாராயணா’னு வாய் விட்டே கேட்பார் பெரியவா. அந்த அளவுக்கு அப்பா உப்புமா ஸ்பெஷலிஸ்ட்!

மஹா பெரியவா அருள்வாக்கு : –

அறுசுவை’ என்பார்கள். நாக்குக்கு ருசிக்கிற இந்த ‘ரஸங்’களை வைத்துத்தான் மனசுக்கு ருசியாக இருக்கப்பட்ட கலை அநுபவங்களுக்கும் நவ‘ரஸம்’ என்று பெயர் வைத்தார்கள். இனிப்பு, கசப்பு, துவர்ப்பு, புளிப்பு, உறைப்பு, கரிப்பு என்று ஆறு ரஸங்கள் இருக்கின்றன. இவை ஒவ்வொன்றுமே ‘ப்பு’ என்றுதான் முடிகின்றன. அதனால் எல்லாவற்றிலுமே ‘உப்பு’ இருப்பதாகச் சொல்லலாம். ‘உப்பில்லாப் பண்டம் குப்பையிலே’ என்று இதனால் தான் சொல்கிறோம் போலிருக்கிறது!

இதில் எந்த ரஸத்தையும் தனியாகச் சாப்பிட முடியவில்லை. வெறும் உப்பை, வெறும் புளியை, மிளகாயை, கடுக்காயை, பாகற்காயைச் சாப்பிடுவது என்றால் முடியாத காரியம். சர்க்கரை, வெல்லத்தை வேண்டுமானால் ஏதோ கொஞ்சம் சாப்பிடலாம். ஆனாலும் அது கூட, மாவு கீவு சேர்த்துத் தித்திப்புப் பட்சணமாகப் பண்ணினால். சாப்பிடுகிற அளவுக்கு வெல்லத்தையும் சர்க்கரையையும் சாப்பிட முடிவதில்லை. அது திகட்டி விடுகிறது.

ஆனால் தனியாகச் சாப்பிட முடியாத இந்த ஷட் ரஸ வர்க்கங்களையும் விதம்விதமாகக் கலந்துவிட்டால், பல தினுசு வியஞ்சனங்கள் செய்து வயிறாரச் சாப்பிட முடிகிறது. ஒன்று சேருவதில், ஸங்கத்தில் விளைகிற பெரிய ருசிக்கு இது ஒரு திருஷ்டாந்தம். வாழ்க்கையிலும் இப்படியே ஏதோ ஓர் உணர்ச்சி மட்டும் இருந்தால் சீக்கிரம் திகட்டிவிடும். அதனால்தான் அழுகை சிரிப்பு, வெற்றி தோல்வி, மான அவமானம் எல்லாம் கலந்து வருகின்றன.

 

Advertisements

3 thoughts on “60-மகா பெரியவா – அனுபவங்கள் ஆயிரம்

 1. janakikrishnan July 15, 2014 at 7:51 PM Reply

  thanks. today being our 50th wedding anniversary, I felt elated to see Periyava in my email first thing in the morning. we were blessed by Mahaswamigal when we went to Kanchipuram on his 70th b’day celebration. .

  • BaalHanuman July 15, 2014 at 8:00 PM Reply

   Best wishes for your 50th wedding anniversary!

   You were really fortunate to have His dharshan and blessings on his 70th b’day celebration!

 2. N SEETHARAMAN July 17, 2014 at 6:41 AM Reply

  Very very nice. The explanation for Arusuvai by mahaperiyaa is simply superb

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s