சுஜாதா பற்றி பாம்பே கண்ணன்…


sujatha33

புது முயற்சிகளில் ஈடுபட விரும்பினேன். அப்படி ஆரம்பித்ததுதான் டெலிஃபிலிம்.  என் ‘இரு வீடு ஒரு வாசல்’ நாடகத்தை டெலிஃபிலிம் ஆக, டிவிடியில் கொண்டு வந்தேன். 90 முறைக்கு மேல் மேடையேறியது அது. தொடர்ந்து கோமல் சாமிநாதனின் ‘ஆட்சி மாற்றம்’, சுஜாதாவின் ‘மாமா விஜயம்‘, பாக்கியம் ராமசாமியின் ‘அப்புசாமியும் ஆப்பிரிக்க அழகியும்’ போன்றவற்றைக் கொண்டுவந்தேன். சுஜாதா டிவிடி/விசிடிக்காக எழுதிய முதல் தொடர் ‘மாமா விஜயம்‘. தொடர்ந்தது என் ஒலிப்புத்தக ஆவல்.

https://balhanuman.files.wordpress.com/2010/09/scan0001.jpg?w=213

சுஜாதாவின் ‘கொலையுதிர் காலம்‘ தொலைக்காட்சித் தொடரில் குமார வியாசன் பாத்திரத்தில் நடித்தது மறக்க முடியாது. இன்றைக்கும் அதை வைத்து என்னை நினைவு கூர்பவர்கள் இருக்கிறார்கள்.

பாம்பே கண்ணன் பற்றி…

நடிகர், நாடக ஆசிரியர், இயக்குனர், எழுத்தாளர், தயாரிப்பாளர் என்று கலையுலகில் நீண்ட அனுபவம் கொண்டவர் பாம்பே கண்ணன். ஒய்.ஜி.பார்த்தசாரதியின் UAA குழுவின் மூலம் தனது கலையுலக வாழ்க்கையைத் துவக்கிய கண்ணன், இதுவரை 3000 தடவைக்கு மேல் மேடையேறியிருக்கிறார். ‘நாடகக்காரன்’ என்ற தனது குழுவின் மூலம் நாடகங்களை எழுதி இயக்கியிருக்கிறார். சென்னை மட்டுமல்லாமல் ரெய்ப்பூர், பாம்பே, அகமதாபாத், ஹைதராபாத், போபால், ஜாம்ஷெட்பூர், பெங்களூர் என்று பல இடங்களில் நாடகங்களை அரங்கேற்றியிருக்கிறார். ‘இரு வீடு ஒரு வாசல்’, ‘ஷெர்லாக் ஷர்மா’, ‘ஒரு வினாடி பொறு’ போன்ற இவரது நாடகங்களைப் புத்தகமாக அல்லையன்ஸ் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. பல நாடகப் போட்டிகளில் நடுவராகச் செயல்பட்டு வரும் இவர், வானொலி, தொலைக்காட்சி, நாடகம், திரைப்படம், டெலிஃபிலிம், குறும்படம், டிவிடி, ஒலிப்புத்தகம் என ஒரு ஊடகத்தையும் விடவில்லை. சிறந்த நடிகர், சிறந்த இயக்குனர், சிறந்த நகைச்சுவை நாடக வசனகர்த்தா என பல விருதுகளைப் பெற்றிருக்கும் இவரது சமீபத்திய சாதனை, கல்கியின் பொன்னியின் செல்வனை ஆடியோ சிடியாகத் தயாரித்திருப்பது.

வட அமெரிக்கத் தமிழர்களுக்காக வெளிவரும் தென்றல் மாத இதழுக்காக இவரைச் சந்தித்து உரையாடியவர் வேறு யாருமில்லை, நமது அருமை நண்பர் அரவிந்த் சுவாமிநாதன் தான்…

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s