58-மகா பெரியவா – அனுபவங்கள் ஆயிரம்


Yamirukka Bayamen

பண்டர்பூரில் 1980-ல் ஸ்ரீ பெரியவாள் சாதுர்மாஸ்ய விரதம் அனுஷ்டித்துக் கொண்டிருந்தார்கள்.

ஒரு நாள் பம்பாய் அனந்தராமன் மிகவும் கவலை தோய்ந்த முகத்துடன் பெரியவாள் தரிசனத்திற்கு வந்தார். அப்போது தரிசனம் பண்ணி வைத்துக் கொண்டிருந்த சதாரா ஜகதீஷ் பட், அனந்தராமனை விசாரிக்க ஆரம்பித்தார். ஸ்ரீ பெரியவாள், “அவனிடம் ஒன்றும் கேட்க வேண்டாம்” என்று சொல்லி ஆனந்தராமனை உட்காரச் சொல்லிவிட்டு மற்ற பக்தர்களுக்கு தரிசனம் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.

சுமார் ஒருமணி நேரம் கழித்து அனந்தராமனைப் பார்த்து ஸ்ரீ பெரியவாள், “உன் சம்சாரத்திற்கு அந்த விஷ சிகிச்சை வேண்டாம்; நிறுத்திவிடு” என்று கூறினார்கள். அவர் சந்நிதியை விட்டு விலகி வெளியே வந்ததும் அவரை நாங்கள் விசாரித்தபோது சொன்னார். “என் மனைவிக்கு கான்ஸர் ஆபரேஷன் ஆகி ஒரு வாரம் ஆகிறது. Chemotherapy செய்கிறார்கள். ஆனால் வியாதியைவிட சிகிச்சை பொறுக்கமுடியாத அளவு துன்பத்தைக் கொடுக்கிறது” என்றார்.

ஸ்ரீ மஹாபெரியவாளின் உத்திரவுப்படி Treatment நிறுத்த வேண்டும் என்று சொன்னபோது டாக்டர்கள், “சிகிச்சையை நிறுத்தினால், நோயாளி ஒரு வாரம் கூட உயிருடனிருக்கமாட்டார்” என்று சொன்னார்கள். அனந்தராமனுடைய மனைவி “நான் செத்துப் போனாலும் சரி, ஸ்ரீ பெரியவாள் உத்திரவுப்படிதான் நடப்பேன்” என்று தீர்மானமாகச் சொல்லிவிட்டார். அவர் இன்று வரை (2006) ஒரு உபத்திரவுமில்லாமல் இருக்கிறார் !

பெரியவாளுக்குக் கீமோதெரபி செய்யத் தெரியாமலிருக்கலாம். அனால், அனுக்ரஹ தெரபி செய்யத் தெரியுமே!

அவருடைய ட்ரீட்மென்ட் அமுதமயமானவை என்பது அடியார்களுக்குத் தெரியும்.

மஹா பெரியவா அருள்வாக்கு : –

“நம்ம வீடுகளுக்கு யார் வந்தாலும், அவாளுக்கு வயறு நன்னா நெறையற மாதிரி,
முகம் சுளிக்காம, சந்தோஷமா சாப்பாடு போட்டாலும்,தர்மம்ன்னு யார் வந்தாலும் நம்மால முடிஞ்சதை தாராளமா குடுத்தாலும்….இகலோக சௌக்யமும்
பரலோக சௌக்யமும் நிச்சயமா கெடைக்கும்!..”

Advertisements

One thought on “58-மகா பெரியவா – அனுபவங்கள் ஆயிரம்

  1. U.shekhar July 19, 2014 at 3:35 PM Reply

    Glad to inform you that with Mahaperiyaval’s grace both Mama and Mami are doing very well today and living in Coimbatore.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s