55-மகா பெரியவா – அனுபவங்கள் ஆயிரம்


இருபது வருஷங்களுக்கு முன்பு நடந்த சம்பவம். பகிர்ந்து கொண்டவர் ஸ்ரீ மடம் பாலு.

ஈச்சங்குடி கணேசய்யர் என்பவர் பெரியவாளிடம் நிரம்பவும் பக்தி பூண்டவர். அவருடைய மனைவிக்கு வயிற்றில் புற்று நோய் ஏற்பட்டு மிகவும் கஷ்டப்பட்டாள். டாக்டர்கள் அந்த அம்மாளுக்கு ஆபரேஷன் செய்துதான் ஆகவேண்டும். இல்லாவிட்டால் பிழைப்பது அரிது என்று சொல்லிவிட்டார்கள்.

பெரியவாளிடம் வந்து பிரார்த்தித்தார், கணேசய்யர்.

‘ஆபரேஷன் வேண்டாம். திருத்துறைப்பூண்டிக்குப் பக்கத்திலே திருநெல்லிக்காவல் என்று ஒரு ரயில்வே ஸ்டேஷன் இருக்கு. அந்த ஸ்டேஷனில் இறங்கி ஒரு கிலோ மீட்டர் மேற்கே போனால், ஒரு வாய்க்கால் வரும். அதன் கரையில் கனகல் என்று ஒரு மரம் இருக்கு. அதன் இலைக்காம்பை சாப்பிடச் சொல். கான்சர் குணமாகி விடும்’ என்றார்கள் பெரியவா.

அதன்படி அந்த அம்மாள், அந்த மரத்தின் இலையின் காம்பை மென்று தின்று வந்தாள். சில நாட்களில் நோய் மறைந்தே விட்டது. (துரதிருஷ்டவசமாக அந்தக் கனகல் மரம் சமீபத்தில் பட்டுப் போய் விட்டது)

கணேசய்யரின் சம்சாரத்தின் பிரார்த்தனையின்படி, அந்த அம்மையார் எண்பது வயதுக்கு மேல், மகாப் பெரியவாளின் கனகாபிஷேகத்தைக் கண்டு களித்து விட்டு, நிம்மதியாகச் சிவபதம் அடைந்தாள்.

மஹா பெரியவா அருள்வாக்கு : –

அச்வமேத யாகத்தை நம் எல்லோராலும் பண்ண முடியுமா? அச்வமேதத்துக்கு சமமான பலனைத் தரும் ஒரு பணி இருக்கிறது. மற்ற எல்லாவற்றையும் விட உயர்ந்ததான அந்தப் பணிதான் அனாதைப் பிரேத சம்ஸ்காரம். பரோபகாரமாக, இறந்து போன இன்னொரு ஜீவனுக்கு இதனால் உதவி பண்ணும்போதே நமக்குப் பாபம் வராமல், கடமையைச் செய்து நமக்கும் உபகாரம் பண்ணிக் கொள்கிறோம்.

Advertisements

One thought on “55-மகா பெரியவா – அனுபவங்கள் ஆயிரம்

  1. . .Ramachandransridharam July 19, 2014 at 1:31 PM Reply

    பெரியவரின் கருணை படிக்க ஆனந்தமாக உள்ளது. ஜயஜய சங்கர ஹர ஹர சங்கர!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s