நூல் அறிமுகம்: சந்திரசேகரம் – இந்திரா சௌந்தர்ராஜன்


மொழி, இனம், ஜாதி மதம் என்கிற பேதங்களைக் கடந்து உலகப்பொதுவாகத் திகழ்ந்தவர் ஜகத்குரு காஞ்சி மகா பெரியவர். நம்பிக்கைக் குறைவும், சந்தேகமும் நிரம்பிய நம்மை வழிப்படுத்த இம்மகான் சொல்லிச் சென்ற அருளுரைகள் ஏராளம். அவரது அருளுரைகளின் சாரமாக, இந்திரா சௌந்தர்ராஜனின் கைவண்ணத்தில் வெளிவந்திருக்கும் நூலே ‘சந்திரசேகரம்.’ இது, நமது ‘தீபம்’ இதழில் இரண்டாண்டுகள் வெளிவந்த தொடரின் தொகுப்பு. ஆன்மிகம் தொடர்பான பல கேள்விகள், நம் அனைவரின் மனதிலும் எழுவது இயல்பு. அக்கேள்விகளுக்கான பதில்களை காஞ்சி மகா பெரியவர் வழிநின்று அலசி ஆராய்ந்தளித்திருப்பதே இந்நூலின் சிறப்பு.

காஞ்சி பெரியவர் தொடர்பான பல்வேறு நூல்கள் வெளிவந்திருந்தாலும், மிகவும் சுவாரஸ்யமாகவும், பக்திப் பரவச விறுவிறுப்பு குறையாமலும் இந்நூலைத் தந்திருக்கிறார் இந்திரா சௌந்தர்ராஜன். வெள்ளைக்காரர் ஒருவர் ஸ்ரீசுவாமிகளிடம் கேட்ட, ஏற்றத் தாழ்வு, சொர்க்கம், நரகம் போன்ற கேள்விகளுக்குப் பரமாச்சாரிய ஸ்வாமிகள் அளித்த பதிலும், அதை நூலாசிரியர் நமக்குத் தொகுத்தளித்துள்ள விதமும் சிந்தனையைத் தூண்டும் வடிவில் அமைந்துள்ளது.

இதுபோன்று அர்த்தமுள்ள அநேகக் கேள்விகளுக்கு ஆழமான, பொருள் பொதிந்த பதில்களை காஞ்சி மகா பெரியவர் மூலம் நமக்கு வழங்கியிருக்கிறார் ஆசிரியர். இது படிக்கத் திகட்டாத பக்தித் தேனமுதம். சஞ்சலமும், சலனமும் நிரம்பிய மனித மனதுக்கு, வாசிக்கும்போதே மருத்துவம் பார்க்கும் அபூர்வ மருத்துவர் இந்தப் புத்தகம் என்றால் மிகையில்லை.

விலை: ரூ. 175.

நூல் கிடைக்குமிடம்: திருமகள் நிலையம், பு. எண்: 13, ப. எண்: 28, சுகான்ஸ் அபார்ட்மெண்ட்ஸ், சிவப்பிரகாசம் சாலை, தி. நகர், சென்னை – 600 017. போன் 044 – 2434 2899 / 2432 7696.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s