பிளாஸ்டிக் பெட்ரோல்! – வனராஜன்


சுற்றுச்சூழலுக்கும் மண்ணின் வளத்துக்கும் பெரும் சவாலாயிருக்கும் மலைபோல் குவியும் பிளாஸ்டிக் கழிவுகளை என்ன செய்வது என்று அரசு விழி பிதுங்கி நிற்கிறது. பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து பெட்ரோல் தயாரிக்க முடியும் என்று நிரூபித்துள்ளார் சென்னையைச் சேர்ந்த பொறியாளர் சித்ரா. பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து எரிபொருள் தயாரிப்பதற்கான கருவியை வடிவமைத்து சாதனையும் படைத்துள்ளார். பொறியியல் படிப்பை முடித்த இவர், தற்போது சென்னையிலுள்ள முன்னணி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வரும் சித்ராவைச் சந்தித்துப் பேசியதிலிருந்து:

எப்படி ஏற்பட்டது இந்த வினோத ஆசை?

சிறு வயதில் இருந்தே வீட்டில் ஏதாவது செய்து கொண்டே இருப்பேன். நன்றாக பாடிக் கொண்டிருக்கும் ரேடியோவைக் கழற்றி அது எப்படிப் பாடுகிறது என்பதைத் தெரிந்து கொண்டு பின்பு பாட வைப்பேன். இதில் ஏதோ கற்றுக்கொண்ட திருப்தி. +2 முடித்தவுடன் எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷனில் டிப்ளமோ படிப்பை முடித்து விட்டுத்தான் பி.டெக்., படித்தேன். அப்போது உருவானது தான் இந்தத் திட்டம். பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து எரிபொருள் தயாரிப்பதற்கான கருவியைக் கண்டுபிடித்தேன்.”

இதன் சிறப்பு என்ன?

பத்து கிலோ பிளாஸ்டிக்கிலிருந்து எட்டு லிட்டர் எரிபொருளைத் தயாரிக்கும் விதத்தில் இந்தக் கருவியை உருவாக்கினேன். மூன்று ஆண்டு முயற்சியில் உருவான இந்தக் கருவிக்குக் காப்புரிமை கோரியுள்ளேன். இதில் பெட் பாட்டில்கள் தவிர மற்ற எல்லாவிதமான பிளாஸ்டிக் கழிவுகளையும் இந்தக் கருவிக்குள் போட்டு, குறிப்பிட்ட வெப்பநிலையில் சூடுசெய்யும் போது கிடைக்கும் எரிபொருளை டீசலுக்கு மாற்றாகப் பயன்படுத்தலாம்.”

இது நடைமுறைக்குச் சாத்தியப்படுமா?

ஏன் சாத்தியமாகாது. நான் கண்டுபிடித்த தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி இந்தக் கருவியை மேம்படுத்தினால் கிலோவை டன்களாக மாற்றினால் எரிபொருளை அதிகமாகப் பெறலாம். சோதனையில் இது சாத்தியப்பட்டதானாலேயே அரசிடம் காப்புரிமை கோரியுள்ளேன். பெரிய நிறுவனங்கள் இந்தத் தொழில் நுட்பத்தைச் சரியாகப் பயன்படுத்தினால் நிச்சயம் வெற்றி காண்பதோடு கட்டாயம் லாபம் பெற முடியும் என்பதில் துளியும் சந்தேகமில்லை.”

ஏற்கெனவே இதுபோன்று மூலிகை பெட்ரோல் கண்டுபிடிப்பு சர்ச்சை ஆனதே?

நான் பொறியியல் பட்டம் பெற்றவள். ஒரு பொருளை முறையாகக் கண்டுபிடித்து வெளி உலகுக்குக் கொண்டு வருவதே என்னுடைய லட்சியம். கழிவிலிருந்து எரிபொருள் என்பது இன்று நமது நாட்டுக்கு மிகவும் தேவையான ஒன்று. நம் நாட்டில் சேரும் கழிவுகளைச் சரியாகப் பயன்படுத்தினாலே போதும். பொருளாதாரத்தில் மேம்படுத்தி பல நன்மைகளைப் பெறலாம்.”

வேறு என்ன கண்டுபிடித்துள்ளீர்கள்?

கேன்சரைக் கண்டறியும் கருவியைக் கண்டுபிடித்துள்ளேன் என்று சொன்னால் மற்றவர்கள் நம்ப மாட்டார்கள். டாக்டர்கள்தான் இதை உறுதி செய்ய வேண்டும். பெங்களூரு மருத்துவக் கல்லூரி பேராசிரியர் ராம் பிரகாஷ் உள்ளிட்ட சில டாக்டர்கள், நான் கண்டறிந்த கருவியில் பரிசோதித்த நூற்றுக்கும் மேற்பட்ட டெஸ்ட் மாதிரிகளை வைத்துப் பரிசோதித்து வருகிறார்கள். இன்னும் 2 அல்லது 3 மாதங்களில் அங்கீகாரம் கிடைத்து விடும் என்று நம்புகிறேன்.

சென்னை அடையாறில் உள்ள கேன்சர் இன்ஸ்டிடியூட் அங்கீகாரம் தந்துவிட்டால் எல்லா பரிசோதனைக் கூடங்களிலும் இக்கருவி பயன்பாட்டுக்கு வந்துவிடும்.”

உங்களைப் போன்ற மாணவர்களின் கண்டுபிடிப்புக்கு அரசு காப்புரிமை தருகிறதா?

என்னுடைய கண்டுபிடிப்புகளுக்குக் காப்புரிமை பெறுவது பற்றி முதலில் எனக்குத் தெரியாது. அப்பாவின் நண்பர்கள் சிலரின் ஆலோசனையின்படிதான் எனது பொருட்களுக்கு காப்புரிமை கேட்டு விண்ணப்பித்துள்ளேன். விரைவில் சாதகமான பதில் வரும் என எதிர்பார்க்கிறேன். மத்திய அரசும் சரி, மாநில அரசும் சரி இளம் படைப்பாளிகளுக்கு ஊக்கம் தந்தால் இது போன்று இன்னும் ஏராளமான படைப்புகள் வெளியே தெரியவரும். இதனால் பலரும் நன்மை பெறுவார்கள்.”

வருங்கால லட்சியம் என்ன?

அப்துல்கலாம் போல நாட்டில் சிறந்த விஞ்ஞானியாக வர வேண்டும். எனது கண்டுபிடிப்புகள் ஏழை, எளிய மக்களைச் சென்றைடைய வேண்டும். அதுவே எனது கண்டுபிடிப்பின் வெற்றியாக நினைக்கிறேன்.

–நன்றி கல்கி

Advertisements

3 thoughts on “பிளாஸ்டிக் பெட்ரோல்! – வனராஜன்

  1. natarajan1950 June 8, 2014 at 7:06 AM Reply

    Reblogged this on Take off with Natarajan.

  2. Umesh Srinivasan June 9, 2014 at 5:26 AM Reply

    பாராட்டவேண்டிய முயற்சி.வாழ்த்துக்கள்.

  3. Krishna Moorthy June 9, 2014 at 6:36 AM Reply

    வாழ்க வளமுடன் சகோதரி சித்ரா .கனவை காணுங்கள் என்ற கலாம் போல ஆக சொன்ன அவர்போலவே அக்கும் உங்கள் லட்சிய பாதையை இறையருள் வழிநடத்தட்டும் .

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s