யாரும் புதியதாக உருவாக்க முடியாது! – இளையராஜா


சிறு வயதில் எனக்கும், பாரதிராஜாவுக்கும் ஓவியம் வரைவதில் போட்டி நடக்கும், ஓவியத்தின் மீது இருந்த காதல்தான் என்னைப் புகைப்படம் எடுக்கும் கலைஞனாக மாற்றியது” என்றார் இளையராஜா.

கோவை ஜென்னி கிளப்பில் இளைய ராஜா எடுத்த புகைப்படங்களின் கண்காட்சி சமீபத்தில் நடந்தது. எனது அப்பாவின் நண்பர் இளையராஜா. அவர் எப்படிப் பழகுவாரோ என முதலில் பயந்தேன். ஆனால், எளிமையாகப் பழகினார். அவரது புகைப்படங்களைத் தொகுத்து சென்னையில் எங்களது ஆர்ட்ஹவுஸில் கண்காட்சி வைத்தோம். நல்ல வரவேற்பு இருந்தது. இப்பொழுது கோவையிலும். அதைத்தொடர்ந்து மலேசியா, சிங்கப்பூரிலும் கண்காட்சி நடத்தவுள்ளோம்” என்றார் மறைந்த அடைக்கல ராஜ் எம்.பி.யின் மகனும் ஆர்ட்ஹவுஸின் நிறுவனருமான வின்சென்ட் அடைக்கலராஜ்.

ஒரு தேர்ந்த இசையமைப்பாளராக மிளிரும் இளையராஜாவின் இசையைப் போலவே அவரது புகைப்படங்களும் இருக்கின்றன. சிறந்த புகைப்படக் கலைஞர்கள் எடுத்த படங்கள் போலவே உள்ளன” என்றார் கோவையின் பிரபல தொழிலதிபரான நந்தினி ரங்கசாமி.

இங்கு நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பல சுவாரஸ்யமான விஷயங்களைப் பகிர்ந்து கொண்ட இளையராஜா.

79ஆம் ஆண்டிலிருந்து எடுத்த படங்கள்தான் இவை. பழைய மாடல் கேமராக்களில்தான் இந்தப் படங்களை எடுத்தேன். அபர்ச்சர் தெரியாது. ஷட்டர் ஸ்பீடு தெரியாது. ஆனால் எடுத்த படம் சரியாக இருக்கும். அத்தனை வகை லென்ஸ்களையும் வைத்திருந்தேன். டிஜிட்டல் கேமரா வந்த பிறகு படம் எடுப்பதை விட்டுவிட்டேன். வீடியோ எடுக்கும் ஆர்வம் இருந்ததில்லை.

இந்தப் படங்கள் அனைத்தையும் எடுத்து பிரிண்ட் போட்டு பார்த்து அப்படியே இருட்டறையில் போட்டு விட்டேன். தேனிகண்ணன், வின்சென்ட் அடைக்கலராஜ் ஆகியோர் பெருமுயற்சி எடுத்து இதை வெளிக்கொண்டு வந்தனர். இசையில் நான் சாதித்து விட்டதாக கூறுகின்றனர். ஏற்கெனவே உள்ள ஸரிகமபதநி என்ற ஏழு ஸ்வரங்களைத் திருப்பி திருப்பிப் போட்டுத்தான் இசையமைத்து வருகிறேன். புதிதாக ஸ்வரங்களை நான் உருவாக்கியிருந்தால் சாதித்து விட்டதாகக் கூறலாம். புதிதாக எதையும் உருவாக்க முடியாது. ஏற்கெனவே உள்ளதைத்தான் நான் பயன்படுத்துகிறேன். இவை எல்லாவற்றையும் விட்டுவிட்டு ஆன்மிகத்தில் போய் உட்காருவதுதான் சாதனை என்பேன். கின்னஸ் ரிக்கார்டில் வருவது எல்லாம் சாதனையல்ல. இங்கே புரவிபாளையத்தில் கோடி சுவாமிகள் இருந்தார். 100 வயதுக்கு மேல் இருக்கும். பக்தர்கள் தருவதை விரும்பிச் சாப்பிடுவார். அது எப்படி முடிகிறது? அதுதான் ஆன்மிகம். இதுதான் உலக சாதனை. இப்படி கின்னஸில் வராத பல சாதனைகள் நம்மிடம் இருக்கின்றன. பாட்டு என்றால் என்னைக்கும் கேட்கணும். அதுதான் பாட்டு. பழையதுதான் இப்ப புது ட்ரென்ட். புதிய இசையமைப்பாளர்கள் இன்னும் நிறைய வரவேண்டும்” என்றார்.

–நன்றி கல்கி

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s