47-மகா பெரியவா – அனுபவங்கள் ஆயிரம்


காஞ்சி காமாட்சியம்மன் கோயில் பிரதான அர்ச்சகரும், மகா பெரியவாளின் அன்புக்கு உரிய அடியார்களில் ஒருவருமான நீலக்கல்-ராமச்சந்திர-சாஸ்திரிகள், மகாபெரியவாளின் கருணைப் பிரவாகத்தை நம்மோடு பகிந்துகொள்கிறார்.

ஒருமுறை, என்.சி.வசந்தகோகிலம் என்ற புகழ்பெற்ற பாடகி, மகா பெரியவாளைத் தரிசிக்க வந்திருந்தார். ஒரு கச்சேரிக்குப் போய்ப் பாடிய கையோடு, அங்கிருந்து நேராகக் காஞ்சிபுரம் வந்திருந்தார் அவர். கச்சேரி செய்ததற்குக் கிடைத்த ஆயிரம் ரூபாயை அப்படியே பெரியவா முன்னால் வைத்து விட்டு, நமஸ்காரம் செய்தார். ஆயிரம் ரூபாய் என்பது அந்தக் காலத்தில் ரொம்பப் பெரிய தொகை. அவருக்கு ஆசி வழங்கிய பெரியவா அந்தப் பணத்தை என்ன செய்தார் தெரியுமா?

அங்கே பக்கத்து நிலத்தில் உழுது கொண்டிருந்த அத்தனை குடியானவர்களையும் வரச் சொன்னார். ஆயிரம் ரூபாயையும் அவர்களுக்குச் சமமாகப் பிரித்துக் கொடுத்து விட்டார். குடியானவர்களுக்கு மகிழ்ச்சியோ மகிழ்ச்சி! பணம் கிடைத்தது மட்டுமல்ல… மகா பெரியவாளின் ஆசியோடு கிடைத்த பணம் என்பதே அதற்குக் காரணம்.

இன்னொரு சம்பவம்… மகா பெரியவா இளையாத்தங்குடியில் முகாமிட்டிருந்தார். பக்கத்து ஊரில் அரியக்குடி ராமானுஜ அய்யங்கார் தங்கியிருப்பது பெரியவாளுக்குத் தெரிய வந்தது. அவரை, தான் இருக்கும் இடத்துக்கு வருமாறு தகவல் அனுப்பினார் மகா பெரியவா. அவரும் உடனே புறப்பட்டு வந்தார்.

‘நீங்கள் ஸ்ரீசுப்ரமண்யாய நமஸ்தே கீர்த்தனையைப் பாடி, நான் கேட்கணும்னு எனக்கு ஒரு சின்ன ஆசை வந்துடுத்து. பாட முடியுமா?’ என்று பெரியவா கேட்டதும், ராமானுஜ அய்யங்கார் கண்ணில் நீர் ததும்பிடுச்சு. எப்பேர்ப்பட்ட பாக்கியம் அவருக்கு?!

‘நான் கொடுத்து வைத்திருக்கிறேன் சுவாமி, பெரியவா முன்னால் பாடுவதற்கு’ என்று பணிவுடன் சொல்லிவிட்டு, முத்துசாமி தீட்சிதரின் பிரபலமான கிருதியான  ’ஸ்ரீசுப்ரமண்யாய நமஸ்தே’ பாடலைப் பாடினார். அதை ரசித்துக் கேட்டதுடன், அந்தப் பாட்டுக்கு பெரியவா விசேஷ அர்த்தமும் சொன்னதைக் கேட்டு ராமானுஜ அய்யங்கார் சிலிர்த்துப் போயிட்டார். ‘நீங்க ஆயிரம் பத்தாயிரம் பேர் இருக்கிற சபையில் பாடி, கைத்தட்டல் எல்லாம் வாங்கிருப்பீங்க. இங்கே நான் ஒரே ஒருத்தன் உங்கள் பாட்டைக் கேட்டது உங்களுக்கு எப்படியோ இருக்கோ?!’ என்று பெரியவா தமாஷாக கேட்க, நெகிழ்ந்து போய்விட்டார் அரியக்குடி.

மஹா பெரியவா அருள்வாக்கு : –

நமக்கு எண்ணி முடியாத ஆசைகள் இருக்கின்றன. ஆனாலும் என்றோ ஒரு நாள் நாம் ஆசைப்படும் வஸ்துக்கள் நம்மை விட்டுப் பிரிவது, நாம் அவற்றைவிட்டுப் பிரிவது சர்வ நிச்சயம். சாவின் மூலம் இந்தப் பிரிவு ஏற்படாமல், அதற்கு முந்தி நாமாக ஆசைகளை ராஜினாமா செய்து விட்டுவிட்டால், அத்தனைக்கத்தனை ஆனந்தமாக இருக்கலாம். நமக்கு எத்தனை ஆசைகள் இருக்கின்றனவோ அத்தனை முளைகளை துக்கத்துக்கு அடித்துக்கொண்டு நம்மைக் கட்டிப்போட்டுக் கொள்கிறோம். ஆசைகளை குறைக்கக் குறைக்க துக்கஹேதுவுங் குறையும். இந்தப் பிறவி முடியுமுன் நாம் சகல ஆசைகளையும் விட்டுவிட்டால் மறுபடியும் பிறந்து அவஸ்தைப்படவே வேண்டாம். அப்படியே பரமாத்மாவில் கரைந்து ஆனந்தமாகி விடலாம்.

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s