46-மகா பெரியவா – அனுபவங்கள் ஆயிரம்


1888473_616442668409685_526532623_n

வில்லிசைக் கலைஞர் சுப்பு ஆறுமுகம் தொடர்கிறார்…

”ஒருமுறை மனசு நிறைய கவலையோட கலவைக்குப் போனேன். பெரியவரை தரிசனம் பண்ணி, நமஸ்கரிச்சேன். மனசுக்குள் ‘காமாட்சித் தாயே! என் கவலைகளை உன் காலடியில் வைக்கிறேன்’னு அழுதேன். உடனே பெரியவா, ‘உன் கவலைல இருக்கிற ‘வ’வை அழிச்சுட்டு, அந்தக் காமாட்சியே உன் நாக்குல வந்து உக்கார்ந்துண்டுட்டாடா! நீ க்ஷேமமா இருப்பே!’ன்னு ஆசிர்வாதம் பண்ணினார். சிலிர்த்துப் போயிட்டேன். என் கவலைகளைப் போக்கி, கலையைத் தந்திருக்கிறாள் காமாட்சி என்பதை எத்தனை நுட்பமாகச் சொல்லியிருக்கிறார் பாருங்கள்! பெரியவாளின் ஆசீர்வாதத்தால்தான் நானும் என் குடும்பமும் இன்னிக்கு வரைக்கும் நல்லா இருக்கோம்” என்றார் நெகிழ்வுடன். தொடர்ந்து…

”ஒருமுறை, காஞ்சிபுரத்தில் ஒரு டாக்டர் வீட்டு கல்யாணத்தில் கச்சேரி முடித்துவிட்டு, நேரம் இருந்ததால் மடத்துக்குச் சென்று பெரியவாளை தரிசித்தேன். ‘எங்கே இவ்வளவு தூரம்?’ என்று விசாரித்தார். எனக்கு மனதில் ஒன்றும் வைத்துக் கொள்ளத் தெரியாது. உள்ளதை உள்ளபடி சொன்னேன். கருணை வெள்ளமெனச் சிரித்தவர், ‘சத்தியம் பேசறேடா! உனக்கு ஒரு குறைவும் வராது. இங்கே பட்டுப் புடவை, பட்டு வேஷ்டி வாங்க வரவாள்ளாம், பெரியவாளைத்தான் பார்க்கப் போயிருந்தேன்னு சொல்லிண்டிருக்கா!’ என்று சொல்லிவிட்டு, மீண்டும் குழந்தையெனச் சிரித்தார். அப்போதுதான், அன்று நான் அறிஞர் அண்ணாவைப் பார்க்கக் காஞ்சிபுரம் வந்ததாகச் சொன்னபோது, பெரியவா உற்றுப் பார்த்துப் புன்னகைத்ததன் அர்த்தம் புரிந்தது. பெரியவா நம்மிடம் எதிர்பார்ப்பதெல்லாம் சத்தியம், சத்தியம், சத்தியம் மட்டுமே!” என்றார்.

மஹா பெரியவா அருள்வாக்கு : –

ஒரு இல்லறத்தான் தியான யோகம் பயில இயலாமலிருக்கும் வரையில் சாஸ்திரம் விதிக்கும் கர்மங்களை செய்தேயாக வேண்டும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s