44-மகா பெரியவா – அனுபவங்கள் ஆயிரம்


வில்லிசைக் கலைஞர் சுப்பு ஆறுமுகம் கூறுகிறார்…

காஞ்சிப் பெரியவரைப் பற்றிப் பேசும்போதெல்லாம் சுப்பு ஆறுமுகத்தின் முகத்தில் அலாதி உற்சாகமும், குரலில் ஒரு பரவசமும் நெகிழ்ச்சியும் இழையோடுவதை உணரமுடிகிறது.

”காஞ்சி மகா சுவாமிகளை 1963-ல் தரிசிக்கும் பாக்கியம் கிடைச்சுது. மடத்தில் என் கச்சேரி நடந்தது. அடுத்த நாள் பெரியவா என்னிடம், ‘இதுக்கு முன்னே காஞ்சிபுரம் வந்திருக்கயா?’ என்று கேட்டார். அறிஞர் அண்ணா அவர்களைப் பார்ப்பதற்காக கலைவாணர் என்னை காஞ்சிபுரம் அழைத்து வந்திருந்தார். அந்தச் சம்பவத்தைச் சொன்னேன். உற்றுப் பார்த்துச் சிரித்தார். அந்தச் சிரிப்புக்கான அர்த்தம் பிறிதொரு நாளில்தான் எனக்குத் தெரிய வந்தது.

பின்பு, ‘உன் கச்சேரியில் புல்லாங்குழல் உண்டா?’ என்று கேட்டார். ‘அது வட இந்திய வாத்தியமாச்சே! வில்லுப்பாட்டு, தமிழகத்தில் திருநெல்வேலிப் பக்கம் உண்டான கலை! அதனால புல்லாங்குழல் வெச்சுக்கலை!’ என்றேன். கொஞ்ச நேரம் என்னையே மௌனமாகப் பார்த்துக்கொண்டிருந்தவர், பிறகு ஏதோ நினைத்துக்கொண்டு, மறுபடி சிரித்தார். பெரியவா சிரித்தால், காஞ்சி காமாட்சியே நம்மைப் பார்த்துக் கருணையோடு சிரிக்கிற மாதிரி இருக்கும். அதை அனுபவிச்சவங்களுக்குத்தான் தெரியும். சிறிது நேரம் கழித்து, ‘ஆமாமாம்… அது கிருஷ்ணனுடைய வாத்தியமாச்சே!’ என்றார் பெரியவா.

உடனே, அவர் முன் சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்தேன். ‘பெரியவா! நான் வட இந்திய தென்னிந்திய பேதம் பார்க்கிறேன். நீங்களோ சர்வ வியாபியான கிருஷ்ணனுடைய வாத்தியம் அது என்று சொல்லிவிட்டீர்கள். எனக்கு திசைதான் தெரிந்தது. உங்களுக்கோ தெய்வம் தெரிகிறது. இன்னும் எத்தனை தூரம் கடந்து வந்தாலும் உங்கள் பக்கத்தில்கூட வரமுடியாது என்பதை உணர்ந்து கொண்டேன்’ என்றேன். மறுபடியும் சிரித்து, கைகளை உயர்த்தி, ‘காமாட்சி உன் நாக்கில் குடியிருக்காடா. நீ க்ஷேமமா இருப்பே!’  என்று ஆசீர்வதித்தார்.

மஹா பெரியவா அருள்வாக்கு : –

வேதத்தை அழிய விடக் கூடாது என்று சொல்லி, தொடர்ந்து வேத ரக்ஷணத்திற்கு  எதாவது ஏற்பாடு பண்ணுமாறு செய்ய வேண்டும் என்று தான் உங்களைக் கேட்க வந்திருக்கின்றேன்.  எனக்காக, உங்களுக்காக என்று வித்யாசம் எதற்கு?  நான், நீங்கள் எல்லாம் ஒன்றுதான்.  என் கார்யம் உங்கள் கார்யம். “வேதத்தை ரக்ஷித்து விட்டால்” அதுதான் எல்லோருக்கும் பரம ஸ்ரேயஸ்ஸை தருகிற ஒரே கார்யம். இதை செய்வதால் க்ஷேமம் உங்களுக்கு.  பெயர் எனக்கு.

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s