39-மகா பெரியவா – அனுபவங்கள் ஆயிரம்


பிரபல எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன் கூறுகிறார்…

அவர் ஒரு வெளிநாட்டவர் – பெரியவரை சந்தித்துப் பேசியபோது, அவரிடம் சில பல கேள்விகள்.

ஏன் உங்கள் தெய்வங்கள் திரிசூலம், வேல், சங்கு சக்கரம் என்று ஆயுதங்களைப் பிடித்துக்கொண்டிருக்கின்றன. கடவுள் என்பவர், மிக அன்பானவராயிற்றே – அவருக்கு எதற்கு இப்படிப்பட்ட ஆயுதங்கள்?” என்பது அவரது முதல் கேள்வி.

ஆயுதங்கள் இருப்பதால் கடவுளிடம் அன்பில்லை என்று யார் சொன்னது? அன்பும் கருணையும் மிகுதியானாலும் இப்படியிருக்கச் செய்யும்” என்றார் பெரியவர். பின் அவரே, நாட்டைக் காத்திடும் ராணுவ வீரர்கள் துப்பாக்கியோடு இருப்பது நாட்டைக்காக்கவா? இல்லை அழிக்கவா?” என்று கேட்கவும், அந்த வெள்ளைக்காரருக்கும் புரியத் தொடங்கியது.

கேள்விகள் தொடர்ந்தன.

மனிதனின் பாவ புண்ணியம் என்பது தொடர்ந்து வரும் என்பதை எப்படி ஏற்பது? நாங்கள் கடவுளிடம் பாவ மன்னிப்பு கேட்டு விடுகிறோம். அவரும் மன்னித்துவிடுவதால், இந்த கருத்தை ஏற்க நெருடலாக உள்ளது” என்றார் அவர்.

சிரித்த பெரியவர், பக்கத்தில் இருக்கும் ஒரு பிரசவ ஆஸ்பத்திரிக்குச் சென்று, அன்று பிறந்திருக்கும் குழந்தைகளை பார்த்துவிட்டு வரச் சொன்னார். அவரும் சென்று பார்த்துவிட்டு வந்தார். ஒரு குழந்தை நல்ல சிகப்பு, ஒரு குழந்தை கறுப்பு. ஒரு குழந்தை பணக்காரக் குழந்தை, ஒன்று ஏழைக்குழந்தை; ஒன்றுக்கு தலையில் நிறைய முடி – ஒன்று வழுக்கை, ஒன்று சவலை – ஒன்று புஷ்டி!

மொத்தத்தில் கடவுளின் படைப்பான, கடவுளுக்கு சமமான குழந்தைகளிலேயே இப்படி ஏகப்பட்ட ஏற்றத்தாழ்வுகள்! ஏன் இப்படி?

அந்த வெளிநாட்டுக்காரரிடம், குழந்தைகளிடம் காணப்பட்ட ஏற்றத் தாழ்வுகளுக்கு எது காரணமாக இருக்க முடியும் என்கிற ஒரு கேள்வியை பெரியவர் முன்வைத்தார்.

அவரால் பளிச்சென்று ஒரு பதிலைச் சொல்ல முடியவில்லை. ஆனால், பெரியவர் தொடர்ந்தார்:

கடவுள்தான் மிகமிக அன்பானவராயிற்றே? கருணைதானே அவரிடம் பிரதானம்…! நம் பாவங்களுக்கு அவரிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டுவிட்ட நிலையில், நமக்கு பிறக்கும் பிள்ளைகளிடம் எந்த ஊனமும் கோளாறும் இருக்கக்கூடாதுதானே? ஆனால் இருக்கிறதே?

என்றால், கடவுள் நம்மை எல்லாம் படைக்கவில்லையா – இல்லை அவருக்கு கருணை உள்ளது. அவர் அன்பானவர் என்று நாம் கருதிக்கொண்டிருப்பது பொய்யா?”

– பெரியவர் கேட்ட இந்தக் கேள்விக்கும், அவரால் பதிலேதும் கூறமுடியவில்லை. சில விஷயங்களை உணர்த்த இப்படிப் பேச வேண்டியிருக்கிறது. அன்று பெரியவர் பேசியதும், அதன்பிறகு, அவருக்கு உணர்த்த வேண்டியதை உணர்த்திவிட்டது.

‘என்றால் இந்த ஏற்றத்தாழ்வுகளுக்கு யார்தான் காரணம்?’ கேள்வி மட்டும் அப்படியே இருந்தது. பெரியவரே பதிலை விரிவாக சொல்லத் தொடங்கினார்.

கடவுள் கருணையே வடிவானவர் என்பதில் நாம் சந்தேகமே கொள்ளக் கூடாது. இந்த பிரபஞ்சம் எத்தனை பெரியது? இதை அழகாய் சுற்றச் செய்து, சூரிய சந்திரர்களை கொண்டு இரவு பகலை நிர்ணயம் செய்து, காற்று, நீர், நெருப்பு என்று பூதங்களைக் கொண்டு மண்ணின் மேல் பயிர்களை உருவாக்கி – அதைக் கொண்டு உயிர்கள் வாழ, எல்லா ஏற்பாட்டையும் செய்தவனை கருணையில்லாதவன் என்றால், நமக்கு கருணைக்கு அர்த்தமே தெரியவில்லை என்றாகிவிடும். கூடவே இப்படித்தான் வாழவேண்டும் என்று வழிகாட்ட வேதங்களை படைத்து, அதை உபதேசிக்க ரிஷிகளை, முனிவர்களை அனுப்பி வைத்து, மனித வாழ்வை வகைப்படுத்தி ருசிப்படுத்தியதும் கடவுள்தானே?

ஆனால், நாம் எங்கே வேதத்தில் சொன்னபடி நடக்கிறோம். ஒரு பாவமும் நான் செய்யவில்லை என்று ஒருவரால் கூற முடியுமா? இல்லை இந்த மண்ணில்தான் பாவம் செய்யாமல் வாழ்ந்து விடமுடியுமா?

நம் பாவமும் புண்ணியமுமே, நம்மை இந்த மண்ணில் சம்பந்தத்தோடு வைத்துள்ளது. முற்றாக துறந்தாலே மோட்சம். அப்படித் துறக்க முடிந்தவனையே துறவி என்கிறோம். முடியாத வரை, நல்லதை அனுபவிக்கவும் சரி; தீயதை அனுபவிக்கவும் சரி; அதற்கேற்ப ஜென்மாக்களை எடுத்தே தீரவேண்டியுள்ளது. அதுவே ஏற்றத்தாழ்வுகளுக்கு காரணம். கடவுள் அல்ல.”

அந்த விளக்கத்தில் அசைக்கமுடியாத ஒரு லாஜிக் இருந்தது. அது, அந்த வெளிநாட்டவரை மட்டுமல்ல; என்னையும் கட்டிப்போட்டது.

மஹா பெரியவா அருள்வாக்கு : –

கல், மண், செம்பு முதலிய எந்த பிம்பத்தில் வைத்துக் கூப்பிட்டாலும் இறைவன் வருவான்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s