37-மகா பெரியவா – அனுபவங்கள் ஆயிரம்


பிரபல எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன் கூறுகிறார்…

கல்கத்தாவில் ஒரு சேட்ஜி! மிக நல்ல மனிதர். சத்காரியங்களுக்கு மனதார உதவுபவர். பெரிய பரோபகாரி – நல்ல செல்வந்தரும்கூட! ஆனால், இவருக்கு இந்த உலகமே இதுநாள்வரை கண்டிராத ஒரு அபூர்வமான வியாதி. சோற்றுக்கே இல்லாத பிச்சைக்காரன்கூட இவர் முன், பெரும் அருளாளன்.

அந்த வியாதியைச் சொன்னால், ஆச்சரியமாயிருக்கும்.

உயிர்குடிக்கும் புற்றுநோய் தெரியும்; எட்ஸ் பற்றியும் தெரியும். ஆனால், இந்த நோய் ஒரு வினோதம், பெரும் விபரீதம்!

அதாவது, இவரால் வாயால் மென்று சாப்பிட முடியாது. நாவுக்கு சுவை தெரியாது – தொண்டையால் விழுங்க முடியாது. அந்த பாகங்கள் இருப்பதே, அவர் உயிர் வாழக் காரணமான சுவாச கதிக்கு மட்டும்தான்.

இப்படி ஒரு வியாதியை கேள்விப் பட்டிருப்பீர்களா? சரி; சாப்பிடாமல், எப்படி உயிர் வாழமுடிந்தது?

அங்கேதான் நம் மருத்துவ விஞ்ஞானம், ஒரு குறுக்கு வழியை கண்டுபிடித்து இவரைக் காப்பாற்றியது. அதைச் செய்ததுகூட ஒரு அமெரிக்க மருத்துவர் தான்.

வயிற்றில் துளை போட்டு – துளை போட்ட பாகத்தில் ஒரு செயற்கை வாயை வைத்து, அதன் வழியாக ஆகாரத் தையும் நீரையும் தராசில் அளந்து பார்த்து அளித்துவிட வேண்டும். சமயங்களில் ஒரு புனலை வைத்து கரைத்து ஊற்றும் கொடுமைகூட உண்டு.

எந்த மருத்துவராலும் இவர் வியாதிக்கு மருந்து காணமுடியவில்லை. லட்சத்தில் ஒருவருக்கு இப்படி இருக்கும் என்று கூறக்கூட இடமில்லாத விநோதக் கோளாறு. என்றால், எத்தனை மோசமான கர்ம வினை இருவருடையது?

இந்த வினையையே நம் பெரியவர் விரட்டி அடித்தார். அவர் சொன்ன ஒரு பரிகாரம் இந்த சேட்ஜியை முழுமையான மனிதனாக்கியது. அதை அறிந்து, அமெரிக்க டாக்டர்களும் அதிசயித்துப்போயினர். அந்தப் பரிகாரம்?

அந்த கல்கத்தா சேட்ஜிக்கு, பெரியவர் சொன்ன பரிகாரம் என்பது மேலோட்டமாக பார்த்திட ஒரு பெரிய விஷயம்போல தெரியாது. ஆனால், நடைமுறையில் அதைச் செய்திட உண்மையில் இறையருள் நிறையவே வேண்டும்.

நம் மதத்தின் தனிப்பெரும் சிறப்புக்குரியவை, முதலில் வேதங்களே! அதைத் தொடர்ந்து இந்த மண்ணில் வந்தவை இதிகாச புராணங்கள். இதிகாசங்கள் என்றாலே, ராமாயணமும், மகாபாரதமும் வந்துவிடும்.

புராணம் என்று வரும்போது ஒரு பட்டியலே உள்ளது. அந்த வகையில், ‘பிரம்ம புராணம், பத்மபுராணம், விஷ்ணு புராணம், சிவ புராணம், லிங்க புராணம், கருட புராணம், நாரத புராணம், பாகவத புராணம், அக்னி புராணம், ஸ்கந்த புராணம், பவிஷ்ய புராணம், பிரம்ம வைவர்த்த புராணம், மார்க்கண்டேய புராணம், வாமன புராணம், வராக புராணம், மச்ச புராணம், கூர்ம புராணம், பிரம்மாண்ட புராணம்’ என்று பதினெட்டு புராணங்களோடு வாயு புராணத்தையும் சேர்த்தால், 19 புராணங்கள் வருகிறது.

பெரியவர் அந்த சேட்ஜிக்கு சொன்ன பரிகாரம் இதுதான். மேலே கண்டவற்றில், நான்கு வேதங்கள் மற்றும் இரண்டு இதிகாசங்களையும் விட்டுவிட்டு, மீதமுள்ள அவ்வளவு புராணங்களையும் மூலத்தில் உள்ளது உள்ளபடி துளியும் பிசகின்றி, நூலாக அச்சிட்டு அதை இந்த பாரததேசம் முழுக்க உள்ள வேத பண்டிதர்களுக்கும், விரும்பிக் கேட்பவர்களுக்கும் இலவசமாக வழங்க வேண்டும். சேட்ஜியால் செய்ய முடியுமா? என்று கேட்டார். சேட்ஜியே உப்புச் சப்பில்லாத ஒரு வாழ்வை வாழ்ந்தபடி இருக்கிறார். எனவே, மறுபேச்சே பேசாமல் அந்த பரிகாரத்துக்கு தயாராகிவிட்டார்.

ஆனால், பதினெட்டு புராணங்களையும் மூலத்தில் உள்ளது உள்ளபடி துளியும் மாறாமல், அச்சிட வேண்டும் என்று பெரியவர் அடிக்கோடிட்டு விட்டபடியால், அதை தேடிக்கண்டுபிடிப்பதே ஒரு பாடாக இருந்தது. அதற்காக ஒரு அலுவலகம் அமைந்து, அதில் வேத பண்டிதர் களை நியமித்து, அவர்களுக்கு உரிய சன்மானமும் மரியாதையும் தந்து, ஒரு அர சியல் கட்சித் தலைவர் ஒரு இயக்கத்தை நடத்துவதுபோலவே நடத்த வேண்டி யிருந்தது.

தோராயமாக சில லட்ச ரூபாய் செலவாகும் என்று கணிக்கப்பட்ட விஷயம், பல லட்சங்களை விழுங்கியது. ஒவ்வொரு புராணத்தையும் தேடிப்பிடித்து அச்சேற்றி புரூஃப் திருத்தி, பின் உரிய முறையில் புத்தகமாக்கி, அதை பாதுகாப்பாக வைத்துவிட்டு, அடுத்த புராணம் என்று செயல்பட வேண்டியிருந்தது.

இவ்வாறு செய்வதால், அவருக்கு குணமாகிவிடும் என்கிற உறுதியை பெரியவர் தரவில்லை. சொல்லப் போனால், இந்த பரிகாரத்தைக்கூட, எடுத்த எடுப்பில் கூறிவிடவில்லை. ஒருமுறைக்கு பலமுறை அந்த சேட்ஜி சார்பில் ராஜகோபால சர்மா என்னும் உபன்யாச சிரோன்மணி ஒருவர், முயற்சி செய்தபிறகே அவர் கூறியிருந்தார். இதைக் கூற காரணம் உண்டு.

ஒரு நம்பிக்கை அடிப்படையில், பெரியவர் சொன்னதை செய்ய, அதைவிட கூடுதலான நம்பிக்கை செய்பவரிடம் வேண்டும். அடுத்து அந்த நம்பிக்கை துளியும் குறையாதபடி நீடிக்கவும் வேண்டும். ஏனென்றால், பெரியவர் சொன்ன இந்த பரிகாரப்படி பதினேழு புராணங்களைத் தேடிப்பிடித்து, அச்சேற்றிவிட்ட நிலையில், பதினெட்டு ஒன்றே பாக்கி என்றிருக்கும் நிலையில், அந்த சேட்ஜியிடம் எந்த குணப்பாடும் இல்லை. சொல்லப்போனால் குணமாவதற்கான அறிகுறிகள் கூட கண்ணில் படவில்லை.

ஆனால், பணமோ கரைந்தபடி உள்ளது. சொல்லப்போனால், சேட்ஜி சம்பாதித்ததை எல்லாம் கரைத்துவிட்டார் என்று கூட கூறலாம்தான். ஆனால், சேட்ஜியோ துளியும் நம்பிக்கை குன்றாமல் பதினெட்டாவதையும் வெளியிட்டு முடித்தார். பதினெட்டாவதாக ஸ்ரீஸ்கந்த புராணத்தை அச்சடிக்கத் தொடங்கும்போதே அவரிடம் ஒரு மாற்றம். தாகம் எடுக்க ஆரம்பித்தது. அச்சடித்து முடிக்கும்போது சாப்பிடவே தொடங்கிவிட்டார். நாக்குக்கு ருசி உணர்வு வந்து, அவரது மர்மநோய் இனி என்னால் உன்னை ஒன்றும் செய்ய முடியாது என்பதுபோல நீங்கியேவிட்டது.

சேட்ஜியின் மனநிலை எப்படி இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். அதன் பிறகு, அவர் பெரியவரை எப்படி எல்லாம் கொண்டாடி மகிழ்ந்திருப்பார் என்று கூறத் தேவையே இல்லை. இந்த விஷயத்தில் பெரியவர் சொன்ன பதில்தான் சிகரம்.

‘இந்த அதிசயத்தை நான் செய்யவில்லை. அப்படிச் சொன்னால் தவறு. பதினெட்டு புராணங்களுக்குள்ளும் சப்த ரூபமாய் வாழ்ந்துகொண்டிருக்கும் நம் ரிஷிகளும் முனிவர்களும் இறை அம்சங்களுமே இதைச் செய்தன. சேட்ஜியின் கர்ம வினைக்கு இணையான பரிகாரமாக, நான் இதை எண்ணிடக் காரணம் கூட, நமது ரிஷிகளும் முனிவர்களுமே…’ என்று, அவருக்கு வந்த வந்தனங்களை எல்லாம், அப்படியே ரிஷிகளுக்கும் முனிவர்களுக்கும் சமர்ப்பணமாகும்படி செய்துவிட்டார்.

மஹா பெரியவா அருள்வாக்கு : –

வீடு அழுக்கில்லாமல் இருந்தால் போதாது. நம் மனம் அழுக்கில்லாமல் ஆக வேண்டும். அதற்கு அம்பாளுடைய சரணாரவிந்த தியானம் தான் ஒரே வழி. நம்முடைய மதத்துக்கு ஒரு குறைவு வந்தால் அது இன்னொரு மதத்தினால் வராது. நம்முடைய அனுஷ்டானக் குறைவினால்தான் வரும்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s