பசியின் ருசி – வீ.கே.டி.பாலன்


சென்னையில் முதன் முதலில் எனக்குக் கிடைத்த வருமானம் ரெண்டு ரூபாய். பணம் வந்ததும் சோறு சாப்பிட ஆசை வந்தது. நடந்தே வள்ளுவர் கோட்டம் சென்று முகம் கை கால் கழுவிக் கொண்டேன்.

அருகே ஒரு முனியாண்டி விலாஸ் ஹோட்டல் இருந்தது. அங்கே சென்று சாப்பாடு கேட்டேன். 11 மணிக்கு மேல் தான் சாப்பாடு. இப்போ இட்லி, இடியாப்பம்தான் கிடைக்கும் என்றார்கள். எனக்கு அது போதாது.

சோற்றின் ருசி கண்டு பல நாட்கள் ஆகி விட்டன. எனக்குச் சோறு ஒரு கனவு. எப்போதடா 11 மணி ஆகும் எனக் காத்திருந்தேன். கடை வாசலில் ‘சாப்பாடு தயார்’ என்ற போர்டைக் கொண்டு வைத்தார்கள்.

சாதம், சாம்பார், குழம்பு, ரசம், மோர், அவியல், பொரியல் எனப் பெரிய லிஸ்ட். விலை 2 ரூபாய். 2 ரூபாய் 10 பைசா என்று போட்டிருந்தால் கூட நான் சாப்பிட்டிருக்க முடியாது. உள்ளே சென்று சாப்பிட உட்கார்ந்தேன்.

என்னை ஒரு பூச்சியைப் போல எல்லோரும் பார்த்தார்கள். காரணம் என் உடை, மழிக்காத தாடி, சிக்கேறிய தலை. பிச்சைக்காரனைப் போல் இருந்தேன். இலையைப் போட்டு சாப்பாட்டைக் கொண்டு வைத்தார்கள்.

எனக்குச் சப்பென்று ஆனது. காரணம், அது அளவுச் சாப்பாடு. சாதக்கட்டி கொஞ்சம் பெரிய இட்லி மாதிரி இருந்தது.

சோற்றை கோபுரம் போலக் குவித்து குழம்பு ஊற்றி ஒரு கட்டு கட்டுவோம் என்று நினைத்திருந்த எனக்கு மிகப் பெரிய ஏமாற்றம்.

சாதத்திற்குத் தான் அளவு எல்லாம். கூட்டு, பொரியல், கீரைக்குக் கிடையாது என்பது புரிந்தது. உடனே பொரியலும், கூட்டும், கறியுமாக வாங்கி ஒரு கட்டுக் கட்ட ஆரம்பித்தேன்.

கொஞ்ச நேரத்தில் என்னுடைய டெக்னிக்கைப் புரிந்து கொண்ட சப்ளையர் எல்லாவற்றையும் உள்ளே கொண்டு போய் வைத்துவிட்டார்.
மீண்டும் கேட்டால் கிடைக்காது என்பது தெரிந்தவுடன்தான் சாதத்தைப் போட்டுச் சாப்பிட ஆரம்பித்தேன்.

அன்றைக்கு நான் சாப்பிட்ட சாப்பாட்டின் ருசி, இன்றைக்கு வாரத்துக்கு ஐந்து நாள் ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் சாப்பிடுகிற போதும், விமான நிறுவனங்கள், கன்சலேட்டுகள் அளிக்கும் விருந்துகளில் கலந்து கொள்கிறபோதும் எனக்குக் கிடைக்கவில்லை. அன்றைக்கு முன்னாலும் சரி, பின்னாலும் சரி அது மாதிரி உணவை நான் உண்டதே இல்லை. ஏனென்றால் அது உணவின் ருசி அல்ல; பசியின் ருசி.

வீ.கே.டி.பாலன் ‘மதுரா ட்ராவல்ஸ்’ நிறுவனத்தைத் தொடங்கி, தமிழ்நாட்டிலிருந்து 1500க்கும் மேற்பட்ட கலைஞர்களை 25க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு அழைத்துச் சென்றிருப்பவர். இந்தியாவிலிருந்து மிக அதிகமாக இந்தியக் கலைக்குழுக்களை வெளிநாடுகளுக்கு அழைத்துச் சென்றதால் லிம்கா புக் ஆஃப் ரெகார்ட்ஸின் சாதனைப் பக்கங்களில் இடம் பெற்றவர். ‘பண்பாட்டுக் கலை பரப்புநர்’ என்ற வகையில் தமிழக அரசு இவருக்கு கலைமாமணி விருது வழங்கி கௌரவித்துள்ளது. பேச்சாளர், எழுத்தாளர், நடிகர், சமூக சேவகர் எனப் பன்முகங்கள் கொண்ட அவருடனான சந்திப்பிலிருந்து….

சந்தித்து உரையாடியவர் — அரவிந்த் சுவாமிநாதன்

–நன்றி தென்றல் மாத இதழ் – நவம்பர், 2012

Advertisements

2 thoughts on “பசியின் ருசி – வீ.கே.டி.பாலன்

  1. srinivasan sriramalu April 4, 2014 at 1:54 PM Reply

    VKT Balan: You are doing yeoman service because still you know ‘what is hungry?’ Only a few know this. Thanks to Balhanuman.

  2. kahanam April 4, 2014 at 2:07 PM Reply

    Great experience of PASI by Sri. VKT Balan. Has made him do great things in life!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s