32-மகா பெரியவா – அனுபவங்கள் ஆயிரம்


1888473_616442668409685_526532623_n

பிரபல எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன் கூறுகிறார்…

ஒரு புலவர், தன் குடும்பத்தவருடன் செட்டிநாட்டுப் பகுதியிலிருந்து பயணிக்கும்போது, வழியில் எங்குமே சாப்பிடக் கிடைக்கவில்லை. பசியோ குடலைப் பிடுங்கித் தின்கிறது. நேரமோ நள்ளிரவைத் தாண்டிவிட்டது. அப்போது, புதுக்கோட்டை அருகே ஒரு ஊரில் மகாபெரியவர் தங்கி இருக்கும் அறிவிப்பு அவர் கண்களில் படுகிறது.

உடனே காரை அங்கு விடச் சொல்கிறார். குடும்பத்தவர்களோ, ‘நள்ளிரவாகி விட்ட நிலையில், பெரியவர் தங்கி இருக்கும் இடத்துக்குப் போய், அவரை சிரமப்படுத்துவது சரியில்லை’ என்கின்றனர்.

நாம் சிரமப்படுத்த வேண்டாம். காலை அவரை தரிசித்துவிட்டு செல்வோம். இந்தப் பட்டினி அவருக்கான விரதமாக இருக்கட்டும்‘’ என்கிறார் புலவர். காரும் அந்த ஊரை நெருங்கி விட்ட நிலையில், மணி ஒன்று!

ஊர் எல்லையிலேயே ஒரு பிராமணர் காத்திருந்து, வழிமறித்து நிறுத்தி, ‘நீங்கள் தானே புலவர்?’ என்று கேட்கிறார். புலவருக்கோ பெரும் வியப்பு…!

அந்த நள்ளிரவில் புலவரின் காரை வழிமறித்து, நீங்கள்தானே புலவர்?” என்று அந்த பிராமணர் கேட்டபோது, அந்த புலவருக்கு பெரும் வியப்பு. ஏனென்றால், அவர் அங்கு பிரவேசம் செய்திருப்பதே எதிர்பாராத விதம்.

‘நான் வந்தபடி இருக்கிறேன்’ என்று கூற, இன்றுபோல கைபேசி வசதிகளும் இல்லாத காலம் அது. அப்படி இருக்க, இந்த பிராமணருக்கு தன் வருகை எப்படித் தெரிந்திருக்க முடியும் என்கிற கேள்வி, அந்த புலவருக்கு மட்டுமல்ல; புலவர் குடும்பத்தவர்க்கும் சேர்ந்தே ஏற்பட்டுவிட்டது.

அதைத் தொடர்ந்து நடந்தவைகளும் ஆச்சர்யமூட்டும் அனுபவங்கள்தான். அந்த பிராமணர், அவரை பெரியவர் தங்கியிருக்கும் படத்துக்கு அழைத்துப் போய், கைகால் கழுவி வரச் செய்து பின் அமர்வித்து தையல் இலை போட்டு, அதில் அரிசி உப்புமா, பிட்லே என்று சுடச்சுட பரிமாறியபோது புலவர் குடும்பம் சிலிர்த்துப் போனது. சாப்பிட்டு முடித்த கையோடு, பெரியவர் காத்திருப்பதாக கூறி, அவர்களை அழைத்துச் சென்று நிறுத்தியபோது பெரியவரும் விழித்திருந்தார்.

புலவரும் அவர் குடும்பத்தவரும் அந்த சாப்பாட்டையும் எதிர்பாக்கவில்லை – அந்த தரிசனத்தையும் எதிர்பாக்கவில்லை. புலவருக்கு ஆனந்தக் கண்ணீரே வந்து விட்டது.

இப்போது நடந்த அவ்வளவும் எங்கள் பாக்கியம். நாங்கள் துளியும் எதிர்பாராதது. எங்கள் வருகையும் சரி; பசியும் சரி; உங்களுக்கு எப்படித் தெரியும் என்றே தெரியவில்லை” என்றார் புலவர். அதற்கெல்லாம் எந்த பதிலையும் கூறவில்லை பெரியவர். ஒரு புன்னகைதான் பதில்.

சரி நாங்கள் இப்போதே தஞ்சாவூர் புறப்படுகிறோம்” என்று புலவர் கூறவும், படுத்து உறங்கிவிட்டு காலையில் போய்க்கொள்ளலாம்” என்று உறுதியாக கூறிவிட்டார் பெரியவர்.

படுக்கச் சென்ற இடத்தில் சூடாக பால் வேறு!

புலவர் கூட வந்தவர்களில் கைக்குழந்தை ஒன்றும் அடக்கம். அதற்கு பால்தானே சரியான உணவு!

புலவர், பெரியவரின் கருணையையும் உதவியையும் எண்ணி நெகிழ்ந்துபோனார்.

இந்தப் புலவர் யாரோ அல்ல. அந்த நாளில் புகழ்பெற்று விளங்கிய ஏ.கே. வேலன் என்பவர்தான் இவர். திராவிட இயக்கத் தொடர்போடு ஹிந்தி எதிர்ப்பு, விலைவாசி உயர்வு என்று பல போராட்டங்களில் கலந்துகொண்டவர். ஆன்மிகத்தில் நிறைய கேள்விகளை கொண்டிருந்தவர்.

இவரிடம் பெரியவர் எந்த உபன்யாசமும் செய்யவில்லை. அவர் போன வழியையும் தவறென்றோ சரியென்றோ கூறவில்லை. பெரியவர் மேல் புலவருக்கு ஒரு மதிப்பும் மரியாதையும் இருந்தது. இச்சம்பவத்துக்குப் பிறகு அது பக்தியாய் மாறிவிட்டது.

உண்மையான தவசிக்கு மாற்றுக் கருத்து உடையவர்களும் சரி; மதித்து பின் தொடர்பவர்களும் சரி, ஒன்றுதான்.

மஹா பெரியவா அருள்வாக்கு : –

* சுவரில் எறியும் பந்து மீண்டும் நம்மிடமே திரும்பிவிடும். அதுபோல, கோபத்தால் பிறரைத் தாக்கினாலும் மீண்டும் வந்து நம்மைத் தாக்கும்.

* உங்களது ஆசைகள் நிறைவேறத் தடையாக இருப்பவர்கள், நம்மை விடக் கீழ்ப்பட்டவர்களிடம் கோபத்தைக் காட்டாதீர்கள்.

* நிறைவேறாத ஆசை என்பது கோபம், வருத்தம் ஆகிய இருவிதங்களில் வெளிப்படுகிறது. இதில் வருத்தத்தை விட, கோபத்தால் நமக்கும் பிறருக்கும் பெரிய அளவில் துன்பம் உண்டாகிறது.

* யாரையும் கோபிக்கும் தகுதியோ உரிமையோ நமக்கு இல்லை என்பதை நினைவில் வையுங்கள். நாமும் பல சந்தர்ப்பங்களில் தவறு செய்திருக்கிறோம் என்ற உண்மை அவரவர் மனதிற்கு நன்றாகத் தெரியும்.

* பலவிதமான தீங்குகளில் தள்ளிவிடும் மோசமான எதிரி கோபம். அது நம்மை அண்டாதபடி விழிப்புடன் இருப்பது அவசியம்.

* கோபம் எதிராளியை மாற்றுவதில்லை. மாறாக இருவருக்கும் இடையே வெறுப்பை உண்டாக்கி பகையை வளர்ப்பது தான் அதன் பலன்.

 

4 thoughts on “32-மகா பெரியவா – அனுபவங்கள் ஆயிரம்

 1. mahesh April 3, 2014 at 4:54 PM Reply

  Reblogged this on Sage of Kanchi.

 2. Balasanmuganathan April 4, 2014 at 7:34 AM Reply

  Unable to stop the tears.

 3. kahanam April 4, 2014 at 1:59 PM Reply

  Mahaan Sri Maha Periyava KaruNai Alavee Illaathathu! Let us eliminate anger and be even Better Devotees! Jaya Jaya Shankara, Hara Hara Shankara!

 4. Krishna ganesh April 13, 2014 at 6:59 AM Reply

  No doubt Mahaperiyava is reincarnation of Lord shiva and are lucky and fortunate to be in Hie Midst. Our generation must be grateful To Him for making possible to see,revere mahaperiava. He was having the power of GNadristhi. I have my personal experience when I had an opportunity to have his darshan and advice. I had a shock of my life. I shall share my experience on some other occasion. Krishna ganesh

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s