31-மகா பெரியவா – அனுபவங்கள் ஆயிரம்


Periyavaa5

பிரபல எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன் கூறுகிறார்…

எம்.ஜி.ஆர். ஆட்சிக்கு வந்த சமயம் – முதல்வராக பொறுப்பேற்பதற்கு முதல் நாள் ஒரு சம்பவம்! அப்போது மகாபெரியவர், மகாராஷ்டிர மாநிலம் சதாராவில் தங்கியிருந்தார். இதே சாதுர்மாஸ்ய விரதம்தான். எம்.ஜி.ஆரை வாழ்த்தி, ஆசி கூற விரும்பினார் பெரியவர். அதன் நிமித்தம் ஒரு பொன்னாடையுடன் காமாட்சியம்மன் பிரசாதத்தை வரவழைத்து ஆசீர்வாதத்துடன், அதை வைணவ சீலரான முக்கூர் லஷ்மி நரசிம்மாச்சாரியார் வசம் ஒப்படைத்து, “இதை மடத்து ஆசீர்வாதமாக முதல்வரிடம் சேர்ப்பித்துவிடு” என்று கூறி அனுப்பிவித்தார்.

முக்கூர் லக்ஷ்மி நரசிம்மாச்சாரியாரும் ராமாவரம் தோட்டத்துக்கு வந்து காத்திருந்து, அந்த பிரசாதத்தை எம்.ஜி.ஆர். வசம் சேர்ப்பித்தார். பெரும் ஜனத்திரளுக்கு நடுவில் பிரசாதத்தை உரிய முறையில் சேர்க்க முடியுமா என்று சந்தேகம் இருந்தது. ஆனால், பெரியவர் கருணை அங்கே பரந்தாமன் எனும் அன்பர் மூலம் வழி நடத்தி பிரசாதத்தையும் சேர்த்துவிட்டது.

அவ்வேளையில், எம்.ஜி.ஆர் அவர்கள் லஷ்மி நரசிம்மாச்சாரியாரிடம் கூறியது ஒன்றுதான்: “மனசாட்சிக்கு விரோதமில்லாமல் நான் ஆட்சி செய்வேன்” என்று மட்டும் பெரியவரிடம் கூறி, என் பணிவான நமஸ்காரங்களையும் கூறிவிடுங்கள் என்றார்.

லஷ்மி நரசிம்மாச்சாரியாரும் மகிழ்வுடன் விடை பெற்றுக்கொண்டார். மறுநாள் எம்.ஜி.ஆர். பெரியவர் அணிவித்த சால்வையை அணிந்துகொண்ட பிறகே பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார்.

சதாராவிலிருந்து பெரியவர் புரிந்த ஆசிகளும், கருணையும், எம்.ஜி.ஆருக்குள் இயல்பாகவே இருந்த உதாரகுணமும் ஒன்றிணைந்தன.

மஹா பெரியவா அருள்வாக்கு : –

ஆடம்பர பொருள்களைத் தேடிப் போவதால் வாழ்க்கைத் தரம் உயர்ந்துவிடாது.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s