29-மகா பெரியவா – அனுபவங்கள் ஆயிரம்


Periyavaa6

வருடம் 1975. லால்குடியும் அவரின் மனைவியும் காஞ்சி மகா பெரியவரைத் தரிசிக்க, தேனம்பாக்கம் கிராமத்துக்குப் போகிறார்கள். அங்கு சோகமான, வருத்தம் கலந்த சூழல் நிலவுகிறது. மடத்துச் சிப்பந்திகளில் ஒருவரின் நடவடிக்கையால் அதிருப்தி அடைந்த பெரியவர், அறை ஒன்றில் தன்னை அடைத்துக்கொண்டு காஷ்ட மௌனத்தில் இருந்தார். ஆகாரம், தண்ணீர் கிடையாது. எதற்காகவும் யாரிடமும் பேசாமல் இருந்தார்.

வேறு வழியின்றி, பரமாச்சார்யரைத் தரிசிக்க வேண்டும் என்கிற தனது ஆவலை அடக்கிக்கொண்டார் லால்குடி. இருப்பினும், புறப்படும்முன், பாடல்கள் சிலவற்றை அந்த மகானுக்குச் சமர்ப்பிக்கத் தீர்மானித்தார்.

Lalgudi

காஞ்சிப் பெரியவருக்கு மிகவும் பிடித்தமான சாமா ராகப் பாடலுடன் தொடங்கினார். பின்னர், ஆபோகி ராகத்தில், ‘சபாபதிக்கு வேறு தெய்வம் சமானம் ஆகுமா?‘ பாடலை வாசிக்க ஆரம்பித்தார். ‘கிருபாநிதி இவரைப் போல‘ வரியை பல்வேறு சங்கதிகளுடன் லால்குடி மெய்மறந்து இசைத்துக் கொண்டிருக்க, பெரியவர் தங்கியிருந்த அறையின் ஜன்னல் கதவு திறந்து கொண்டது. பாடல் முடிவுக்கு வரும் வேளையில், அறைக் கதவும் திறந்தது. கையைத் தூக்கி வாழ்த்தியபடியே ஆச்சார்ய சுவாமிகள் வெளியே நடந்து வந்தார்.

லால்குடியும் அருகில் இருந்த மற்றவர்களும் சிலிர்த்துப் போனார்கள்.

மஹா பெரியவா அருள்வாக்கு : –

ஒரு செயலை ‘நான் செய்கிறேன்‘ என்ற மமதை எண்ணம் போய்விட்டால் அதுவே பகவானுக்கு நாம் செலுத்தும் நமஸ்காரம்தான்!

 

Advertisements

4 thoughts on “29-மகா பெரியவா – அனுபவங்கள் ஆயிரம்

 1. mahesh April 1, 2014 at 7:44 AM Reply

  Reblogged this on Sage of Kanchi.

 2. K Laksminarasimhan April 1, 2014 at 1:44 PM Reply

  அந்த நடமாடும் தெய்வத்தை நினைதாலே சிலிர்க்கும்.நீங்கள் தரும் ஒவ்வொரு தகவலும் கண்களில் நீர் வரச் செய்கிறது.
  இப்பொழுதும் அந்த மஹானை நினைத்து நமஸ்காரம் செய்து ஆரம்பிக்கும் எந்த நல்ல காரியமும் வெற்றி அடைகிறது. இது என் சொந்த அனுபவம்.

 3. s.k.ramanathan April 2, 2014 at 4:05 PM Reply

  hara hara sankara jaya jaya sankara

 4. A,V,Sundararaman April 3, 2014 at 3:59 AM Reply

  HARA HARA SANKARA JAYA JAYA SANKARA

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s