பத்திரிகையாளர்களைச் சந்தித்த இளையராஜா…


♫ “பத்திரிக்கையாளர்களை நாங்கள்தான் அழைத்துப் பேசுவது வழக்கம். பத்திரிக்கையாளர்கள்… நீங்களாக என்னைச் சந்திக்க வந்திருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

‘உலகின் சிறந்த Composers வரிசையில் உங்கள் பெயர் இடம் பெற்றிருப்பது பற்றி.. … …??

♫ அதைப் பற்றி எனக்கு ஒரு அபிப்பிராயமும் கிடையாது. அது எந்த Award’ஆக வேண்டுமானாலும் இருக்கட்டும். அது இந்த உலகின் மிக உயர்ந்த Award’ஆக நீங்கள் கருதும் ஒரு Award’ஆகக் கூட இருக்கட்டும். இசையில் முழுமையாக தன்னை ஈடுபடுத்திக் கொண்ட ஒருவனுக்கு எந்த award’ஐப் பற்றிய சிந்தனைகளும் இருக்காது.

நான் செய்யும் வேலைகளில் இருக்கும் குறைகள் எனக்குத் தெரிந்துகொண்டே இருப்பதால், நான் செய்யும் வேலையை நான் நிறையாக நினைப்பதே இல்லை. நான் ஓவ்வொரு நாளும் செய்யும் விஷயங்கள் ஆணி அடித்தாற்போல அப்படியே இருக்கிறதென்றால், அதற்குக் காரணம் இறைவனின் அருளே.

எத்தனையோ பேர் எட்ட முடியாத உயரத்திற்கு நீங்கள்.. … ..

♫ எத்தனையோ பேர் எட்ட முடியாத உயரம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். எனக்கு அது ஒரு பொருட்டே அல்ல. என் வாழ்க்கையை ஓட்டிக்கொண்டு போகிறேன் என்றுதான் என்னால் நினைக்க முடிகிறதே தவிர, இதை ஒரு சாதனையாக என்னால் கருத இயலவில்லை. ஏனென்றால் அதைப் பற்றி சிந்தித்துக்கொண்டிருந்தால் தலைதான் பெரிதாகும். நீங்கள் இன்று என்னைத் தேடி வந்திருப்பதன் காரணம் என்னுடைய சாதனைகள் அல்ல. என்னுடைய சுத்தம். இசையினுடைய Purity என் மேல் உங்களுக்கு ஒரு ஈர்ப்பை ஏற்படுத்தி உங்களை இங்கே கொண்டு வந்து சேர்த்திருக்கிறது, நாம் இங்கே சந்திக்கிறோம் என்றால், இது நிகழ்வதற்கு ’யாரோ என்னை Select செய்துவிட்டார்கள்’ என்பது காரணம் அல்ல. அதன் பின்னால் உங்கள் அன்பும், என் மேல் நீங்கள் வைத்திருக்கும் ஈடுபாடும் அல்லவா காரணம்? இதற்கு என்ன விலை கொடுத்துவிட முடியும்?

”சினிமாவில் வந்து சாதித்துவிட்டோம் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?”

♫ அப்படி எதுவுமே இல்லை. என்னிடம் வேலை வாங்கத்தான் ஆட்கள் இல்லை. என்னிடம் வேலை வாங்கிவிட்டதாக ஒருவன் நினைத்தால் அது அன்றைக்கு அவனுக்குக் கிடைத்த சாப்பாடு. அவ்வளவே. இட்லியோ, பழையசாதமோ, என்னிடம் இருந்து ஒருவன் பெற்றுக்கொண்டதை வைத்து என்னிடம் இருக்கும் விஷயங்களை கணக்குப் போட இயலாது.

”இத்தனை காலங்கள் கடந்து, இன்றைக்கு இருக்கக்கூடிய இளையதலைமுறையினரும் உங்களைக் கொண்டாடுகிறார்களே? இதைப் பற்றி..??

♫ சின்ன வயதில் நான் சென்னைக்கு வரும்போது என்ன Fire’உடன் வந்தேனோ, அதே Fire’உடன்தான் இன்று வரை இருக்கிறேன் என்பதைத்தான் அது காட்டுகிறது

“மதுரையில் நடக்கவிருக்கும் நிகழ்ச்சி பற்றி..?

♫ மதுரையில் ஏப்ரல் ஐந்தாம் தேதி என்னுடைய இசைக்குழுவினருடன் வருகிறேன். நீங்கள் அனைவரும் வந்திருந்து இசையை Enjoy பண்ண வேண்டும். இதைப் போன்ற ஒரு நிகழ்ச்சியை நீங்கள் வேறெங்கும் கேட்க முடியாது, பார்க்க முடியாது என்பதினாலே இது ஒரு சிறப்பான இசை நிகழ்ச்சியாக இருக்கும். ரசிகர்கள் இதைத் தவறவிடவேண்டாம்.

”நெடுநாட்கள் கழித்து பண்ணைப்புரத்து மக்களை அங்கே சந்திக்கப் போகிறீர்கள்.. அதைப் பற்றி..??:”

♫ (சிரிப்பு) பண்ணைப்புரத்து மக்கள் என் மீது வைத்திருக்கிற அன்புக்காக அவர்கள் வருகிறார்கள். அவர்களை வரவேற்கிறேன்.

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s