26-மகா பெரியவா – அனுபவங்கள் ஆயிரம்


நண்பர் வி.கோபாலன் கூறுகிறார்…

காஞ்சி மடத்துக்கு அறுபத்திஎட்டாம் பீடாதிபதியாக இருந்த மகா பெரியவர் சுமார் எண்பது ஆண்டுகளுக்கும் மேலாக பதவியில் இருந்தார்.

நடமாடும் தெய்வமாக அவர் இருந்தது எதனால்?

நான் நேரில் பார்த்த ஒரு நிகழ்ச்சி. ஆந்திராவில் கர்னூல் நகரத்தில் ஒரு அரிசி ஆலையில் அவர் தங்கி இருந்தார். இரவு நேரம். அவரைக் காண பல்லாயிரக் கணக்கில் மக்கள் வந்து போய்க்கொண்டு இருந்தனர். நானும் என் நண்பர் ஒருவரும் அவர் உட்கார்ந்திருந்த இடத்துக்கு எதிரில் தடுப்புக்கு அப்புறமாக உட்கார்ந்து கொண்டு அவரிடம் வந்து செல்வோரையும், அவர் ஆசீர்வதிக்கும் அழகையும் பார்த்துக் கொண்டு இருந்தோம்.

பட்டுக்கோட்டையைச் சேர்ந்த ஒரு நிலக்கிழாரின் மகன் அமெரிக்காவில் காது மூக்கு தொண்டை நிபுணர் ஆச்சாரிய சுவாமிகளை தரிசிக்க மனைவி மக்களோடு வந்திருந்தார்.

பெரியவர் அவரை யார்? என்றார். அவர் தன்னை அறிமுகம் செய்து கொண்டார்.

உடனே சுவாமிகள் அப்படியா? நான் உங்க ஆத்திலே தங்கி பூஜை செய்திருக்கேன் உனக்குத் தெரியுமோ? என்றார்.

ஆமாம் தெரியும் என்றார் டாக்டர்.

அப்போ நான் உன்னைப் பார்த்து, நீ பெரியவன் ஆனா என்னவா ஆகப் போறே என்றேன், நீ டாக்டராக ஆகப்போறேன் அப்படீன்னு சொன்னே நினைவு இருக்கா? இப்போ ஆயிட்டியா என்றார்.

அந்த டாக்டர் குலுங்கிக் குலுங்கி அழுது, அவர் பாதத்தில் விழுந்து நமஸ்கரித்தார். அது பக்தி, அது ஒரு குருவின் அன்பு, பாசம். அந்த மகானின் ஆசீர்வாதம் அவர் டாக்டராக ஆனார் என்பதை அந்த டாக்டரும் புரிந்து கொண்டார்.

மஹா பெரியவா அருள்வாக்கு : –

எண்ணம், சொல், செயல் மூன்றாலும் ஒருவன் நல்ல செயல்களைச் செய்ய வேண்டும். இதற்கு நம்மிடம் இருக்கும் செல்வம் நம்முடையதல்ல என்ற எண்ணம் முதலில் இருக்க வேண்டும்.

One thought on “26-மகா பெரியவா – அனுபவங்கள் ஆயிரம்

  1. Srinivasan March 26, 2014 at 7:10 AM Reply

    Excellent Service; keep it up; Blessings of His Holiness Mahaperiyava will be always with All.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s