7-சாவியில் சில நாட்கள் – ஷ்யாமா


இதன் முந்தைய பகுதி…

Saaviyil_Sila_Naatkal_1

கடுகு அவர்களின் சிறு குறிப்பு தொடர்கிறது…

‘நான் ஒரு ஆசிரியன்… புகழ் பெற்ற எழுத்தாளன்… எனக்கு ஈடாக நகைச்சுவை எழுத யார் இருக்கிறார்கள் ?’ என்றெல்லாம் அவர் ஒருபோதும் எண்ணியதில்லை. அவர் மகாரசிகர்… காலத்திற்கேற்ப தன்னை மாற்றிக்கொண்டவர். அதனால்தான் அவர் பல புதிய எழுத்தாளர்களை உருவாக்கினார். ஊக்கம் கொடுத்து வளர்த்தார். தான் ரசித்த கதையையோ, கட்டுரையையோ அவர் விவரிப்பதை கேட்பதே சுவையான அனுபவம். ‘என்னமாய் எழுதியிருக்கிறான்! எப்படி வார்த்தைகள் வந்திருக்கின்றன! கேள்வி-பதில் என்றால் இப்படித்தான் இருக்கணும்! அடடா… அந்தக் கதையில் அந்த மாதிரி முடியும்படிக் கதையைக் கொண்டுபோவது லேசான காரியமில்லை… என்று பல பாராட்டுக்களை மனம் விட்டுச் சொல்வார்.

ஷ்யாமாவும்… மற்றவர்களும் எழுதியுள்ள இந்தப் புத்தகத்தில் எல்லோருமே உள்ளது உள்ளபடி சொல்லியிருக்கிறார்கள். சாவியிடம் உள்ள நிறைகுறைகளை அப்படியே சிறப்பாகக் கூறியிருக்கிறார்கள். சாவியுடனேயே இருந்ததுபோல் ஓர் உணர்வை ஏற்படுத்துகிறது இந்தப் புத்தகம்… என் மனமார்ந்த பாராட்டுக்கள்.

எனக்கும் இந்தப் புத்தகத்தில் ஒரு இடம் அளித்ததற்கு ஷ்யாமாவுக்கு மிக்க நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்.

என் கட்டுரையில் அதிகம் இடம் பெற்றுள்ள வார்த்தை ‘நான்’ எனும் சொல். என்னைப்பற்றி பெருமையடித்துக் கொள்ள இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டதாக நினைக்க வேண்டாம். நான் அறிந்த சாவியைப் பற்றி எழுதும்போது ‘நான்’ வருவதை எப்படித் தவிர்க்க முடியும்?

அன்புடன்,
கடுகு

kadugu

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s