5-சாவியில் சில நாட்கள் – ஷ்யாமா


இதன் முந்தைய பகுதி…

Saaviyil_Sila_Naatkal_1

கடுகு அவர்களின் சிறு குறிப்பு தொடர்கிறது…

இன்னொரு சம்பவம்… டில்லியிலிருந்து சென்னைக்கு லீவில் வருகிறேன். இன்னதேதி, இன்னரயில் என்று எழுதியிருந்தேன். சென்ட்ரலில் இறங்குகிறேன்… ‘வாங்கோ ரங்கநாதன் வாங்கோ’ என்று முகமலர்ச்சியுடன் வரவேற்றவர் சாவி… கூட உதவி ஆசிரியரும் இருந்தார்! எனக்கு எவ்வளவு பெரிய அந்தஸ்தை தந்து விட்டார்.. அவ்வளவுதான்! சாவியின் அன்பு வலையில் அகப்பட்டுக் கொண்டேன்.

Sujatha_0

சுஜாதா… ஒன்றிரண்டு சிறுகதைகளை குமுதத்தில் எழுதியிருந்தார். ‘நம் பத்திரிகைக்கு ஒரு தொடர்கதை அவரை எழுதச் சொல்லுங்களேன்’ என்று சாவி எனக்குக் கடிதம் எழுதினார்….சுஜாதாவைக் கேட்டேன். ஒப்புக் கொண்டு கதையை எழுதினார். Double Spread படங்களுடன் சுஜாதாவின் கதை வெளியாகியது. ஜெயராஜின் படங்களும் சுஜாதாவின் கதையும் வாசகர்களைப் பெரிதும் கவர்ந்தன. சுஜாதாவிற்கு நிறைய வாய்ப்பளித்துத் தூக்கிவிட்டார். ‘சுஜாதாவைச் சந்தியுங்கள்’ என்ற நிகழ்ச்சியையும் நடத்தி அசத்திவிட்டார்.

இப்படித்தான் சுப்புடுவையும் வளைத்துப் போட்டார் சாவி. சங்கீத கச்சேரி விமர்சனங்கள் சுப்புடுவிடம் எழுதி வாங்க வேண்டியது உங்கள் பொறுப்பு என்று எனக்கு அன்புக் கட்டளையிட்டார் சாவி.

ஒரு பத்திரிகை எனக்கு ரயில் செலவு, ஹோட்டல் செலவு என்று பலவிதத்தில் பணம் தருகிறது. அப்படி இருக்கும்போது ‘சாவி’யில் நான் எழுதுவது தர்மமல்ல என்றார் சுப்புடு. ‘அப்படியானால், விமர்சனம் வேண்டாம். கச்சேரியில் சந்திக்காதவர்களைப் பற்றி, பாடகர்களைப் பற்றி, சுவையான துணுக்குகள் எழுதுங்களேன். அப்படியே எழுதிக் கொடுத்தார். அவர் பெயரைப் போடாமலேயே கட்டுரையை சாவியில் வெளியிட்டார். சுப்புடுவை முழுமையாக வளைத்துப் போட்டுக் கொண்டார் சாவி.

குமுதத்தில் நான் எழுதி வந்ததாலும், நான் டில்லியில் இருந்ததாலும் என்மீது அவருக்கு எக்ஸ்ட்ரா மதிப்பு! எத்தனைக் கடிதங்கள் எழுதியிருப்பார் என்பதற்கு கணக்கே கிடையாது! பத்திரிகை பற்றி ஆலோசனை எழுதச் சொல்வார். குடும்ப பிரச்சனைக்கும் ஆலோசனை கேட்பார். திடீரென்று பல சமயங்களில் டில்லி கிளம்பி வந்துவிடுவார். உங்களுடன் பேசி, என்னை சார்ஜ் பண்ணிக்கொள்ள வந்திருக்கிறேன்’ என்பார். (அவர் விளையாட்டாகச் சொல்லியிருக்கக்கூடும். ஆனால் அதை மகாபெரிய உண்மையாகக் கருதி பூரித்துப் போனேன் என்பது வேறு விஷயம்)

கதை, கட்டுரைகளுக்கான சன்மான ‘செக்’கை அனுப்பும்போது, ‘பொன் வைக்க வேண்டிய இடத்தில் பூவை வைக்கிறேன்’ என்று எழுதி அனுப்புவார். ஆனால் உண்மையிலேயே எழுத்தாளர்களுக்கு நிறையக் கொடுக்க வேண்டும் என்று கருதியவர் சாவி. ஆனால் நிர்வாகம் ‘ஒரு இதழுக்கு இவ்வளவு தொகை’ என்று நிர்ணயித்து விட்டதால் அவரால் அதிகம் தர இயலவில்லை. பின்னால் சொந்தமாகப் பத்திரிகை நடத்திய பொது, அவர் எழுதியது, ‘என் சொந்தப் பத்திரிகையில் எழுதுபவர்களுக்கு என் இஷ்டப்படி தாராளமாகச் சன்மானம் வழங்க முடியவில்லை. எவ்வித மூலதனமும் இல்லாமல் துவக்கி நடத்துகிறேன். அதனால்தான் அதே பழைய பல்லவியை… பொன்… பூ… பாடுகிறேன்’ என்று வருத்தத்துடன் சொல்லுவார்.

கடுகு அவர்களின் சிறு குறிப்பு தொடரும்…

kadugu

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s