3-சாவியில் சில நாட்கள் – ஷ்யாமா


இதன் முந்தைய பகுதி…

Saaviyil_Sila_Naatkal_1

ராணிமைந்தனின் முன்னுரை தொடர்கிறது…

இந்த நூலில் ஷ்யாமாவும், மற்றவர்களும் வெளிப்படுத்தியுள்ள பல சம்பவங்களை நான் அறிவேன்.

‘சாவி’யில் முழுநேர ஊழியனாக நான் இல்லாவிட்டாலும், ஒரு முழு நேர பத்திரிகையாளனுக்குச் சமமாக நான் எழுதி வந்த காரணத்தால் – என் அலுவலக நேரம் தவிர மற்ற நேரங்களில் நான் பெரும்பாலும் சாவி அவர்களுடனே இருந்துவந்த காரணத்தால் – இச்சம்பவங்களில் பலவற்றை நான் அறிவேன்.

இந்த நூலில் குறிப்பிட்டுள்ள சில சம்பவங்கள் இப்போது படிக்கும்போதுதான் எனக்குத் தெரிய வந்தன என்பதும் உண்மை.

இவர்களில் யாருக்குமே சாவி அவர்கள் மலர்ப்பாதை போட்டுத் தரவில்லை.

வழியில் முட்களை வைத்தார். அவற்றில் குத்திக் கொள்ளாமல் நடக்கச் சொன்னார்.

தடைக்கற்களைப் போட்டார். தாண்டிவரச் சொன்னார். அப்படித் தாண்டியவர்களின் அனுபவத் தொகுப்பு இந்த நூல்.

சாவி அவர்களால் நேரிடையாகவோ, மறைமுகமாகவோ பயிற்றுவிக்கப்பட்டவர்கள் யாருமே சோடை போனதில்லை. பல்வேறு பத்திரிகைகளின் பொறுப்பாசிரியர்களாக, ஆசிரியர்களாக, புகழ்பெற்ற நிருபர்களாக, எழுத்தாளர்களாக அவர்கள் திகழ்ந்து கொண்டிருக்கிறார்கள், இந்தப் பத்து பேர்களையும் சேர்த்து.

இந்த அருமையான அனுபவத்தொகுப்பு நூலுக்கு முன்னுரை எழுத எனக்கு தனித்தகுதி ஏதுமில்லை என்ற உண்மையை நானறிவேன்.

சாவி இதழ் தொடங்கப்பட்ட முதல் நாளிலிருந்து சாவி அவர்களின் இறுதி நாள் வரை உடனிருந்தேன் என்பதாலும், என் மீது தான் கொண்டுள்ள நட்பாலும் ஷ்யாமா அவர்கள் எனக்கு இப்பணியைத் தந்திருக்கிறார்.

நல்ல நட்புள்ளங்கள் தரும் பணியைத் தவிர்க்க முடியாது. எந்நாளும் தவிர்க்க முடியவில்லை.

ஷ்யாமா ? ———–

இப்படி ஒரு பணியில் தாங்கள் ஈடுபடுவதைப்பற்றி நீங்கள் முன்பே என்னிடம் கோடிட்டுக் காட்டினீர்கள்.மகிழ்ந்தேன்.

‘நீங்கள்தான் முன்னுரை எழுத வேண்டும்’ என்று அன்புக் கட்டளையிட்டீர்கள். பணிந்தேன்.

காந்தியையே வேகமாக மறந்து வரும் இந்த நாட்டில் சாவி அவர்களை நினைவு கூறும் சில நெஞ்சங்கள் இருப்பது ஆறுதலாய் இருக்கிறது தெரியுமா ?

சரளமான நடையில் எங்குமே தொய்வின்றி தாங்கள் எழுதியது மட்டுமின்றி, தங்கள் தோழிகளையும் அவர்களின் அனுபவங்களை இங்கே பகிர தங்களோடு இணைத்துக் கொண்ட உங்கள் முயற்சி வெற்றி பெற்றிருக்கிறது.

என் நல்வாழ்த்துகள். பாராட்டுக்கள்.

நாம் வாழுகின்ற காலம் வரை சாவி அவர்களைப் பற்றிய நினைவுகளும் விளம்பரமின்றி நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கும்.

சென்னை
செப்டம்பர், 2008                                                                                        ராணிமைந்தன்

kadugu

இந்தப் புத்தகத்திற்கு கடுகு அவர்கள் எழுதிய சிறுகுறிப்பு (ஆசிரியர் சாவியுடன் சில நாட்கள் – வருடங்கள்) அடுத்து உங்கள் பார்வைக்கு…

Saaviyil_Sila_Naatkal_2

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s