20-மகா பெரியவா – அனுபவங்கள் ஆயிரம்


Periyavaa4

டாக்டர்.ஆர்.வீழிநாதன் (சம்ஸ்க்ருதப் பேராசிரியர்) கூறுகிறார்…

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சம்ஸ்க்ருதப் பண்டிதர் ஒருவர் எனது நெருங்கிய நண்பர். சம்ஸ்க்ருதத்தில் ஸ்லோகம் எழுதும் வல்லமை பெற்றவர். அவர் சொன்ன ஒரு நிகழ்ச்சி:

வெகு நாட்களுக்கு முன், தஞ்சாவூருக்கு அருகில் ஒரு கிராமத்தில் பெரியவாள் முகாமிட்டிருந்த சமயம். சந்த்ரமௌலீஸ்வரர் சன்னதியில் தீப நமஸ்காரங்கள் முடிந்ததும் அங்கு குழுமியிருந்த மாணவர்களை ராம நாமத்தையும், சிவ நாமத்தையும் சொல்லச் சொன்னார் பெரியவர். குறிப்பாக அவர் ஒரு மாணவனை அழைத்து ‘ராம ராமா’ ‘சிவ சிவா’ என்று சொல்லச் சொன்னபோது, சுற்றி இருந்தவர்கள் அப்பையனை பிறவி ஊமை என்றனர். ‘ அதனாலென்ன? பையன் சொல்லட்டும்’ என்று பெரியவாள் சொல்ல, பையன் ராம நாமத்தை சொல்ல ஆரம்பித்துவிட்டான் .

Sita Rama

இதைக் கண்ட என் ஆந்திர நண்பர். “எந்த மகானை வர்ணிக்க வார்த்தைகள் கிடையாதோ, எந்த மகானைக் கண்டதும் பிறவி ஊமை பேசும் சக்தியைப் பெறுகிறானோ அந்த சந்திரிகா மௌலீ ஆன என் குருநாதனை நமஸ்கரிக்கிறேன்” என்று சம்ஸ்க்ருதத்தில் ஸ்லோகம் எழுதினார். இதில் இன்னொரு விசேஷம் என்னவென்றால், அதுவரை அவர் சம்ஸ்க்ருதத்தில் ஸ்லோகமே எழுதியதில்லையாம்.

மஹா பெரியவா அருள்வாக்கு : –

தெய்வம் என்று ஒன்று இருந்தால் அது லோகம் பூராவுக்குந்தான். ஆனாலும் அதை ‘நம்முது’ (நம்முடையது) என்று விசேஷமாகப் பிரித்து வைத்து ப்ரியம் காட்டி உறவு கொண்டாடணும் என்று பக்த மனஸுக்குத் தோன்றுகிறதுண்டு. ஒவ்வொரு தெய்வத்திடம் இப்படி ஒவ்வொரு ஜனஸமூஹத்திற்கு ஒரு அலாதி பந்துத்வம் இருப்பதில், தமிழ் மக்களுக்கு ஸுப்ரஹ்மண்ய ஸ்வாமி என்றால் தனியான ஒரு ப்ரியம். முருகன், முருகன் என்று சொல்லி, தமிழ்த் தெய்வம் என்று அவரை இந்த நாட்டுக்கே, பாஷைக்கே உரித்தானவராக முத்ரை குத்தி வைத்துக் கொண்டாடுகிறோம்.
Murugan-Vinayagar
எனக்கென்னவோ அவரை மட்டும் அப்படிச் சொல்லாமல் அவருடைய அண்ணாக்காரரையும் தமிழ்த் தெய்வம் என்று சொல்லணும் என்று (இருக்கிறது)! இளையவரைத் தமிழ்த் தெய்வம் என்று குறிப்பாகச் சொல்ல எவ்வளவு காரணமுண்டோ அவ்வளவு -ஒருவேளை, அதைவிடக்கூட ஜாஸ்தியாகவே – அண்ணாக்காரரையும் சொல்வதற்கு இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. அதனால் – அந்த அண்ணா – தம்பிகளைப் பிரிக்கவே படாது; சேர்த்துச் சேர்த்தே சொல்லணும், நினைக்கணும், பூஜை பண்ணணும் என்பதாலேயும் – பிள்ளையார், ஸுப்ரஹ்மண்யர் இரண்டு பேரையுமே தமிழ்த் தெய்வங்கள் என்று வைத்துவிட வேண்டுமென்று தோன்றுகிறது. அப்படி ஒரு ‘ரெஸொல்யூஷன்’ கொண்டு வரப் போகிறேன்! (அது) ‘பாஸ்’ ஆகணுமே! அதனால் புஷ்டியான காரணம் நிறையக் காட்டுகிறேன். ‘யுனானிம’ஸாகவே ‘பாஸ்’ பண்ணி விடுவீர்கள்!
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s