2-சாவியில் சில நாட்கள் – ஷ்யாமா


இதன் முந்தைய பகுதி…

Saaviyil_Sila_Naatkal_1

ராணிமைந்தனின் முன்னுரை தொடர்கிறது…

ஒவ்வொரு பத்திரிகைக்கும் ஒரு கேரக்டர் உண்டு.

அதன் பசிக்குத் தீனி போட வேண்டும்.

அந்தத் தீனியை எப்படி அடையாளம் காண்பது ?

அனுபவம்தான் அதை அடையாளம் காட்டும்.

அந்த அனுபவத்தை எப்படிப் பெறுவது ?

சாவி சார் போன்றவர்கள் கிடைத்தால் பெறலாம். என்னைப் போன்ற பலருக்கு இவர் கிடைத்தார்.

சாதி, மத வேறுபாடின்றி எங்களைத் தட்டிக் கொடுத்தார்; குட்டவும் செய்தார்.

அவர் குட்டினால் எங்களுக்கு உற்சாகம் வந்தது. குட்டினால் அது பாடம் தந்தது.

அவரது சிந்தனையோட்டத்தைப் புரிந்து கொள்ள எனக்கு சில காலம் தேவைப்பட்டது. அதுவரை நான் எழுதி அவர் பார்வைக்கு வைத்த கட்டுரைகளில் ஓகே ஆனவைகளை விட ரிஜெக்ட் ஆனவைகளே அதிகம்.

நான் சோர்வடையவில்லை என்பதைவிட என்னை அவர் சோர்வடையச் செய்யவில்லை என்பதே உண்மை. நான் உனக்குத் தொடர்ந்து தேர்வுகள் வைத்துக் கொண்டிருக்கிறேன் என்பதை எனக்கு சொல்லாமல் புரிய வைத்தார்.

‘சாவி’-யில் வாராவாரம் தலையங்கம் எழுதும் அளவுக்கு வளர்ந்தேன்.

சாவி அவர்களால் அவர் பத்திரிகையான ‘சாவி’-யில் அங்கீகரிக்கப்பட்ட பத்திரிகையாளனாக நான் எழுதிக் கொண்டிருந்தபோது ஒரு தரம் விளம்பரம் செய்து இவரைத் தேர்ந்தெடுத்து அவர்களை சாவியில் சேர்த்து ட்ரெய்னிங் கொடுத்தால் என்ன? என்று சிலருக்குத் தோன்றியது.

பத்து பேர் தேர்வானார்கள்.

ஆனந்தவிகடனில் ‘மாணவப் பத்திரிகையாளர் திட்டம்’ போல, சாவி அவர்கள் திட்டமிட்டது அது ஒரு முறைதான் என்பது என் நினைவு.

தேர்வானவர்கள் சாவியில் சேர்ந்து பெற்ற பயிற்சிகளும், சாவி அவர்களின் கோபம், எதிர்பார்ப்பு, கண்டிப்பு ஆகியவற்றை எதிர்கொண்டு பெற்ற வெற்றிகளும் மறக்க முடியாதவை.

அந்த அனுபவங்களை மிகச் சுவையாகத் தொகுத்து இந்த நூலாகத் தந்திருக்கிறார் சகோதரி ஷ்யாமா.

அவரும், அவருடன் தேர்வானவர்களும் எழுத்துத்துறையின் பல பிரிவுகளில் சிறந்து விளங்குகிறார்கள்.

தங்கள் அனுபவங்களை அவர்களும் இந்த நூலில் பகிர்ந்து கொண்டிருப்பது சிறப்பு.

ஏற்றி வாய்த்த ஏணியை தன் நினைவுச் சுவர்களில் இவர்கள் நன்றியுடன் சார்த்தி வைத்திருக்கிறார்கள் என்பதை இந்த நூல் வெளிப்படுத்துகிறது.

தொடரும்…

Saaviyil_Sila_Naatkal_2

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s