1-சாவியில் சில நாட்கள் – ஷ்யாமா


Saaviyil_Sila_Naatkal_1

ராணிமைந்தனின் முன்னுரை… 

அத்தி பூத்தாற்போல சிலர் பிறக்கின்றார்கள். தான் வளர்ந்துவிட்ட நிலையில், திறமையுள்ள மற்றவர்களையும் வளர்த்துவிட எண்ணுகிறவர்கள் அவர்கள். ‘சாவி‘ சார் அப்படிப்பட்ட அத்திப்பூ.

சினிமா, அரசியலுக்கு அடுத்து பலர் கால் பதிக்க எண்ணும் துறையாக பத்திரிகைத்துறை இருக்கிறது. படைப்பாளிகள் தன் பெயரும் இருக்க வேண்டும் என்று பலர் விரும்பக் காரணம் அந்தத் துறை தரும் புகழ். பலதுறை பெருமக்களோடு எளிதாக ஹலோ சொல்லி கை குலுக்கக்கூடிய வாய்ப்பு.

ஆனால் அந்த வாய்ப்பு அவ்வளவு சுலபமாக வாய்ப்பதில்லை. எழுதும் முயற்சியில் ஈடுபடுபவர்களைக் கேட்டால் தெரியும்.

‘பிரசுரமான கதைகளை விட திரும்பி வந்த கதைகளே அதிகம்’ என்பார்கள்.

‘நூறு துணுக்குகள் அனுப்பினால் இரண்டு மாதங்கள் கழித்து ஐந்து பிரசுரமானால் அதிகம்’ என்பார்கள்.

‘யார் யாரையோ பேட்டி எடுத்து எத்தனையோ கட்டுரைகள் அனுப்பியாச்சு. என்ன ஆச்சுன்னே தெரியலை சார்’ என்பார்கள்.

பத்திரிகை உலகில் இவையெல்லாம் நடக்கக் கூடியவையே. காரணங்கள் அநேகம்.

தொடரும்…

Saaviyil_Sila_Naatkal_2

சாவி-85  நூலின் ஆசிரியர், திரு. ராணிமைந்தன், ஒரு கால் நூற்றாண்டு காலம், அமரர் சாவியோடு, நெருங்கிப் பழகி, பணியாற்றியவர்.

புகைப் படத்தில் வலது ஓரத்தில்இருப்பவர் ராணி மைந்தன்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s