15-மகா பெரியவா – அனுபவங்கள் ஆயிரம்


ஸ்ரீ பெரியவாளின் பரிபூர்ண ஆசியோடும் அருளோடும் விகடனில் ஆலயங்களையும், தெய்வப்படங்களையும் வரைந்து, ஈடு இணையற்ற ஓவியராகத் திகழ்ந்த ‘சில்பி’, மயிலை சம்ஸ்கிருதக் கல்லூரியில் பெரியவாளைத் தரிசித்த போதெல்லாம் தம் இல்லத்துக்கு வருகை தர வேண்டும் என்று அழைத்துக் கொண்டிருப்பார். பெரியவாளும் ‘சரி’ என்பதுபோல் புன்முறுவலுடன் தலையசைப்பது வழக்கம்.

ஒரு நாள் அதிகாலையில் சாந்தோம் கடற்கரையில் சமுத்திர ஸ்நானம் செய்துவிட்டு, பெரியவா கச்சேரி ரோடில் வந்து கொண்டிருந்தார்.  திடீரென்று அருண்டேல் ரோடு திருப்பத்தில் நின்று,  ‘இங்கேதானே ‘சில்பி’ வீடு இருக்கிறது?’  என்று கேட்க அதை உறுதி செய்து கொள்ள, அந்தத் தெருவில் திரும்பி, ‘அவன் வீடு எங்கேயிருக்கு ?  விசாரி ‘ என்று கூறவே, நாங்கள் ஒவ்வொரு வீடாக விசாரித்துக் கொண்டிருந்தோம்.  அதற்குள் பெரியவா ஒரு வீட்டுக்கு முன் வந்து நின்று ‘இதுவா பாரு ?’  என்றதும்,  உள்ளே சென்று விசாரித்தேன்.  ஆம்.  அதுவேதான்!  அப்போது ‘சில்பி’யின் குடும்பத்தினர் மட்டுமே வீட்டில் இருந்தனர்.  ‘சில்பி’  வெளியூர் சென்றிருந்தார்.

சில்பியின் அம்மாவுக்கு கையும் ஓடவில்லை.  காலும் ஓடவில்லை.  பெரியவா நேரே பூஜையறைக்குச் சென்றார்.  பின்னர், கூடத்தில் வந்து அங்கு மாட்டியிருந்த படங்களை ஒவ்வொன்றாகப் பார்த்து விட்டு புறப்பட்டார்.  அப்போது ‘சில்பி’யின் அம்மா,  ‘எனக்கு ஆஸ்துமா தொந்தரவு அதிகமா இருக்கு.  ரொம்பக் கஷ்டப்படறேன்’  என்று கூறினார். பெரியவா உடனே,  ‘தினம் இரண்டு வில்வ தளம் சாப்பிட்டுண்டு வாங்கோ’  என்று வைத்தியம் சொன்னார்.

சில்பி ஊரிலிருந்து திரும்பியதும்,  ‘பெரியவா வீட்டுக்கு வந்த போது தாம் இல்லாமல் போய்விட்டோமே’  என்று மிகவும் வருத்தப்பட்டிருக்கிறார். பெரியவாளைத் தரிசித்த போது,  வீட்டுக்கு வந்ததைக் குறித்துத் தன் மகிழ்ச்சியைத் தெரிவித்து விட்டு, பெரியவா வந்து விட்டுப் போன சமயம் தான் வீட்டில் இல்லாமல் போனதற்கு வருத்தத்தையும் தெரிவித்தாராம்.  அப்போது பெரியவா சிரித்துக் கொண்டே,  ‘நீ ஆத்துக்கு வரணும்,  ஆத்துக்கு வரணும்’ னுதான் கூப்பிட்டுண்டிருந்தே.  நான் ஆத்திலே இருக்கறப்ப வாங்கன்னு கூப்பிடலையே’  என்றாராம்.

மஹா பெரியவா அருள்வாக்கு : –

காளிதாஸர் ‘ரகு வம்சம்’ என்று ஒரு காவியம் எழுதியிருக்கிறார். அதை ஆரம்பிக்கும்போது, இந்த ஜகத் முழுதையும் ஸ்ருஷ்டித்து, நடத்தி வரும் ஆதி தம்பதியான ஸ்வாமிக்கும் தேவிக்கும் நமஸ்காரம் செய்து, தமிழில் கடவுள் வாழ்த்து என்று சொல்லுகிறார்களே, அப்படி ஒரு ச்லோகம் செய்திருக்கிறார்.

அந்த ச்லோகத்துக்கு அர்த்தம், சொல்லையும் பொருளையும் போல ஒன்றை விட்டு மற்றதைப் பிரிக்க முடியாதபடி ஒன்று சேர்ந்திருக்கும் ஸ்வாமிக்கும் தேவிக்கும் எனக்கு நல்ல சொல்லும் உயர்ந்த அர்த்தமும் உள்ளதாக எழுதும் ஆற்றல் ஸித்திக்க வேண்டும்,” என்பது.

வாக் – அர்த்தவ் – இவ
ஸம்ப்ருக்தௌ வாக் – அர்த்த ப்ரதிபத்தயே!

ஜகத: பிதரௌ வந்தே பார்வதீ – பரமேச்வரௌ!

இதிலே முடிவாக ‘பார்வதீ – பரமேச்வரௌ’ என்று வருகிறது. இதற்கு வெளிப்படையாகத் தெரியும் அர்த்தம், பர்வத ராஜகுமாரியானதால் பார்வதி என்று பேர் பெற்ற அம்பாளுக்கும், சிவ பெருமானுக்கும் காளிதாஸர் நமஸ்காரம் தெரிவிக்கிறார் என்பதாகும்.

ஆனால், எனக்கோ இதற்கு வேறு விதமாகவும் அர்த்தம் செய்யலாம் என்று தோன்றுகிறது. காளிதாஸரின் ஸப்ஜெக்ட்-மாட்டர் ரகுவின் பரம்பரையில் வந்த அத்தனை ராஜாக்களின் சரித்திரத்தையும் சொல்வதுதான். அந்தப் பரம்பரைக்கே மிகவும் பெருமை சேர்த்து, ‘ரகு குல திலகர்’ என்றே பெயர் பெற்றுள்ள ராமசந்திர மூர்த்தியின் திவ்ய சரித்திரத்தையும் மற்ற ராஜாக்களைவிட இந்த ‘ரகு வம்ச’ காவியத்தில் விஸ்தாரமாகப் பாடியிருக்கிறார்.

ராமர் யார்? ஸாக்ஷாத் மஹா விஷ்ணுவின் தசாவதாரங்களில் மிகவும் முக்யமான இரண்டு பேரில் ஒருத்தர். மற்றவர் க்ருஷ்ண பரமாத்மா. இவர்களுக்கு மூலவரான மஹாவிஷ்ணுவையும் விட இந்த இரண்டு அவதாரங்களைத்தான் நம் தேசம் பூராவும் அவர்களுடைய அவதார காலத்திலிருந்து அதி விசேஷமாகக் கொண்டாடி வருகிறோம்.

சீதையோ ஸாக்ஷாத் மஹாலக்ஷ்மி அவதாரம். ருக்மிணி – ஸத்யபாமாக்களை ஜனங்கள் அவ்வளவாகக் கொண்டாடுவதில்லை. ஸீதைக்கே விசேஷ மஹத்வம் தருகிறோம்.

அப்படியிருக்க, காளிதாஸர் செய்த ச்லோகத்தில் பார்வதி – ப்ரமேச்வரர்களை மாத்திரம் சொல்லிவிட்டு மஹாவிஷ்ணு – மஹாலக்ஷ்மிகளை விட்டிருப்பாரா என்று யோசித்துப் பார்த்தேன்.

அப்படிப் பார்த்ததில் அவர் மஹா விஷ்ணு – மஹாலக்ஷ்மிகளையும் இந்த ச்லோகத்தில் சொல்லியே இருக்கிறாரென்று தெரிந்தது.

எப்படி என்றால்: ‘பார்வதீ – பரமேச்வரென’ என்று வருவதை வேறே மாதிரி பதம் பிரித்தால் ‘பார்வதீப -ரமேச்வரென’ என்று வரும்.

‘ப’ என்று சொன்னாலே ‘பதி’ என்று அர்த்தம் உண்டு. பழங்காலத்தில் இந்தத் தமிழ் தேசத்தில் பல ராஜாக்கள் தங்களுக்கு ‘ந்ருப நுங்கன்’ – அதாவது ‘ராஜாக்களில் சிரேஷ்டமானவர்’ என்று பட்டப் பெயர் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ‘ந்ருப’ என்றால் என்ன அர்த்தம்? ‘ந்ரு’ என்றால் ‘நர’- அதாவது ‘மனுஷ்யர்’ என்று அர்த்தம். ‘நரஸிம்ஹ’ ஸ்வாமியை ‘ந்ருஸிம்ஹர்’ என்றும் சொல்வதுண்டு.

இப்படித்தான் ‘ந்ருப’ என்பதில் ‘ந்ரு’ என்பது ஜன ஸமூஹத்தையும், ‘ப’ என்பது ‘பதி’ என்பதையும் குறிக்கும். ‘ந்ருப’ என்பது ஜனங்களுக்கு அதிபதியான ராஜாவைக் குறிக்கும்.

இப்படிப் பார்க்கும்போது ‘பார்வதீப’ என்பது பார்வதிக்குப் பதியான சிவ பெருமானைச் சொல்வதாகிறது.

‘ரமேச்வர’ என்பது ‘ரமா’வான மஹாலக்ஷ்மிக்கு நாயகனான மஹா விஷ்ணுவைச் சொல்வதாகிறது.

ஆகக்கூடி, காளிதாஸர் தம்முடைய ச்லோகத்தில் சிவ – விஷ்ணு பேதமில்லாமல் இரண்டு பேரையும் அவர்களுடைய தேவிமார்களின் பெயருடன் சேர்த்து நமஸ்காரம் தெரிவித்திருக்கிறார் என்று அர்த்தம் பண்ணிக்கொண்டு திருப்தி அடைந்தேன். இந்த ஸமரஸ பாவம் நம் எல்லோருக்கும் ஏற்ப, அத்தனை தெய்வங்களுமான ஏக பரமாத்மா அநுக்ரஹிக்க வேண்டும்!

இதுவரை பிரசுரமாகாத மகா பெரியவரின் அருள்வாக்கு இது.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s