சுஜாதா பற்றி சாருஹாசன்…


? உங்களிடம் சுஜாதாவின் பாதிப்பு இருக்கிறது … நண்பர் என்பதாலோ?

! அய்யா?.. மன்னிக்க வேண்டிய சொற்கட்டு………… என்னையும் சேர்த்துத்தான்….! யாரோ என்னை சிவாஜி போல் நடிக்கிறாய் என்று சொன்னது போல் இருக்கிறது.

என் சின்னம்மா மகன் ஜான்….. என் தம்பியாகவே வளர்ந்தவன்… ஒரு ராங்கியில்லாத ‘ரான்கர்’ ….. அவன் ஒரு 35 எம்மெம் காமிரா வைத்து படம் எடுத்துக்கொண்டிருந்தான்,

நான் ஒரு நாள் வழக்கம் போலே ஒரு ஜோக் அடித்தேன்.. “எங்க காலத்தில் ஷட்டர் ஸ்பீடு அது இதுன்னு கிடையாது…….குரூப் போட்டோ எடுக்க எங் ஊர் போட்டோ ஸ்டூடியோ கோவிந்தராம் வருவார்…. எல்லாரையும் உட்கார வச்சு -ஸ்டெடி- என்று சொல்லி லென்ஸ் கவரை எடுத்து கீழே கொண்டுபோய் ஒரு அரைச்சுத்து சுத்தி மூடுவார்……”

உடனே ஜான் சொல்லுவான் … “ஆமா…மாம் ஒரு நாள் கவர் கீழே விழுந்திரிச்சு…. குரூப்பிலிருந்து ஒருவர் வேகமாக ஓடி வந்து எடுத்து கொடுத்தார்….. அந்த நாள் கொடாக் பிலிம் அந்த மாதிரி ஸ்பீடு ………..படம் நல்லாவே வந்திருக்கும்…”

இந்த ஜான் என்பவர்தான் எழுத்தாளர் சுஜாதாவின் கிளாஸ் மேட்.. இரண்டு பேரும் சம ஜோடி. நல்ல வேளை……. இந்த ஜானுக்கு ஒரு பொண்டாட்டி வந்து அவனை அடக்கி வைக்கலேன்னா என்னையே காணாமே அடிச்சிருப்பான்!…….

ஓரு நாள் அந்த ஸ்டுடியோ ஓனர் வீட்டுக்கு போனோம்…அவருக்காக காத்திருந்தோம்………………. அங்கே கோவிந்தராமின் மறைந்த தந்தையின் படம் எதிரே மாட்டியிருந்தது…. மாலையுடன்…..!


என் கொழுப்பு கேட்டு வைத்தேன்..

ஏன் இவர் அழுகிற மாதிரி மூஞ்சியை வச்சிருக்கார்?

ஜானின் பதில்…

“நாம செத்துபோயிட்டமேன்னு அழுகிறார் போலே?’

நல்லவேளை ஸ்டுடியோக்காரர் இன்னும் வரவில்லை…..”


காலேஜிலே படிக்கும்போதே எழுதித் தள்ளினவர் சுஜாதா..இவன்டே நண்பர்.

பின்னால் நான் சினிமாவுக்கு வந்ததும் ஒரு இயக்குனரை அவரிடம் கூட்டிப்போனேன்…..

Short Circuit

ஷார்ட் சர்க்யூட் என்று ஒரு “ரோபோ” படம். அதற்கு ஒரு தமிழ் வர்ணம் பூசிப் பார்த்தோம்.. ஏதோ காரணத்தில் நின்று விட்டது.

நான் உடலெங்கும் காயத்துடனும் எலும்பு முறிவுகளுடனும் இந்தியா வந்து சேர்ந்த போது சுஜாதா அவர்கள் ஒரு பூங்கொத்தை என் கையில் திணித்ததும் அதை நடிகர் பார்த்திபன் என் கையிலிருந்து பிடுங்கியதும்………!

அறைகுறையாக நினைவில் நிற்கிறது.

அதற்கு பிறகுதான் டாக்டர் ரெஜினால்ட் என் மண்டையை குடைந்தெடுத்து ..

என் மனைவியை சமாதானப்படுத்த “ஓண்ணுமில்லை…!” என்று சொல்லி

“அது எனக்கு ஐம்பது வருஷமா தெரியுமே?” என்ற பதிலை வாங்கி தான் கட்டிக்கொள்ளாமல் என் தலையில் கொட்டி ஹா ஹா ஹா என்று சிரித்தது.

சுஜாதா மறைந்த அன்று ஒரு தடியை ஊன்றி கொண்டே துக்கம் கேட்கப்போனேன். … ஓரு வேளை அந்த தாக்கம் இருக்கலாம்……

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s