12-மகா பெரியவா – அனுபவங்கள் ஆயிரம்


ஒரு முறை குத்தாலத்திலிருந்து  பந்தநல்லூர்  வழியாக, சுவாமிகள் பல்லக்கில் வந்து கொண்டிருந்தார்.  இரவு பதினோரு மணியிருக்கும்.  மேனாவின் கதவு மூடியிருந்தது.  நூற்றுக்கணக்கான பக்தர்கள் வழியில் நின்று, பெரியவாளின் தரிசனத்திற்காக வேண்டி கொண்டார்கள்.

மேனா நின்றது.

பக்தர்கள் எழுப்பிய குரல் கேட்டு சுவாமிகள் கதவைத் திறப்பார்கள் என்று நினைத்தவர்களுக்கு ஏமாற்றமே ஏற்பட்டது.  சற்றுப்  பொறுத்து விட்டுக் கதவைத் திறந்து பார்த்தால், சுவாமிகளைக் காணவில்லை!

நன்றாகத் தேடிப்  பார்த்தார்கள்.  டார்ச் அடித்துப் பார்த்தார்கள்.  மேனா காலியாக இருந்தது.  கிலி பிடித்துக் கொண்டது.

ஒன்றுமே புரியாத நிலையில்,  பக்தர்களுக்கு இந்த விஷயம் தெரிந்து வீண் கலவரமாகிவிடப்  போகிறதே என்று அன்பர், மேனாவின் கதவைச் சாத்தினார்.

சற்றைக்கெல்லாம் உள்ளேயிருந்து முனகல் சத்தம் கேட்டது.  சட்டென்று கதவைத் திறந்து பார்த்த அன்பர் சுவாமிகள் படுத்திருப்பதைப் பார்த்து திகைத்துப் போனார்.  உடம்பெல்லாம் வியர்க்க விஷயத்தை சுவாமிகளிடம் கூறினார்.

சுவாமிகள் சிரித்துக் கொண்டே,  “நீ பார்க்கிறபோது   பெரியவா உள்ளே இல்லையா ?” என்று குழந்தை போல்  கேட்டார்.

“சரி சரி…  இனிமே இப்படி சட்டென்று கதவைத் திறக்காதே..
நமப் பார்வதீ பதயேன்னோ, கோவிந்தா நாம சங்கீர்த்தனம்னோ  சொல்லிட்டுக்  கதவைத் திற”  என்றார்கள்.

யோக சாதனைகளைக் கரை கண்டவர்களல்லவா இப்படியெல்லாம் செய்வார்கள்!

மஹா பெரியவா அருள்வாக்கு : –

நம் கர்மா மூட்டை சாதாரண தப்புகள் உள்ளதாக இருந்தால், இந்த பூலோகத்தில் மறுஜென்மா எடுப்பதோடு போகும். இதுவே பெரிய கஷ்டம்தான். திரும்பவும் சம்சார பந்தம்! அதனால் திரும்பவும் பயத்துக்குக் காரணமாகிறது. ஆனால், சாதாரண தப்போடு போகாமல் மகா பாவங்களைச் செய்து நாம் மூட்டை கட்டிக் கொண்டிருந்தால், இறந்தபிறகு மறுபடி இந்த பூமியில் இன்னொரு உடம்பு எடுப்பதற்கு முந்தி, இதைவிட அதிக கஷ்டம் தருவதான நரக லோகத்துக்குப் போய், சொல்ல முடியாத அளவுக்கு சித்ரவதைகளை அனுபவிக்க வேண்டும். மனுஷ உடம்பால் இந்தச் சித்ரவதைகளைத் தாங்க முடியாது. உடம்பே நைந்து ஒன்றுமில்லாமல் போய்விடும். அதோடு அந்த உடம்பைத்தான் பூமியிலேயே கழட்டி விட்டாச்சே! இந்த நிலையில் மகாபாவிகளுக்கு ‘யாதனா சரீரம்’ என்று ஒரு சரீரம் ஏற்படுகிறது.

இந்த யாதனா சரீரத்துக்குள், பூலோகத்துக்குள் உடம்பை விட்டுவிட்டு வந்த ஆத்மா புகுந்து கொள்ள, யாதனா சரீரம் செயல்பட ஆரம்பிக்கும். இந்த யாதனா சரீரம் நரக சித்ரவதைகளால் நைந்து போகாது. ஆனால், மனித சரீரம் போலவே வலியைத் தரும்”

Advertisements

One thought on “12-மகா பெரியவா – அனுபவங்கள் ஆயிரம்

  1. rjagan49 March 12, 2014 at 2:02 PM Reply

    சக்கரம் வைத்த வண்டியில் பெரியவாள் போவதில்லை என்று சங்கல்பித்துக் கொண்டு இருப்பதை படித்ததும், மேனாவில் போவது தூக்கிச் செல்பவர்களைப் பற்றி நினைத்தேன். அவர்களுக்கும் கஷ்டம் கொடுக்கக்கூடாது என்றுதான் தவ யோகத்தினால் உடலை உயர்த்தி சென்றிருப்பாரோ! – ஜெ.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s