5-சுஜாதாவைப் பற்றி திருமதி சுஜாதா…


image_6

அவர் விமர்சனங்களைப் பத்தி கவலைப்பட்டதே இல்லை. ஜாதியெல்லாம் சொல்லித் திட்டுவாங்க. அதுக்கு பதில் எழுத மாட்டார். அதைப் பொருட்படுத்தவும் மாட்டார். அவனுக்கு வேலை இல்லை. திட்டிட்டிருக்கான் அப்படீன்னு விட்டுடுவார். ‘ஏன் உங்களுக்கு சாகித்ய அகாடமி கொடுக்கலை’ன்னு அவர் கிட்ட கேட்பாங்க. ‘அவங்களுக்கு இஷ்டமில்லை. அதான் கொடுக்கலை’ அப்படீன்னுடுவார். அதெல்லாம் அவருக்கு ஒரு விஷயமாகவே இருந்ததில்லை.

தொடரும்…

Sujatha_0

? ஈகோ இல்லாமல் வாழ்வது எப்படி ? எனக்குச் சொல்லிக் கொடுங்களேன் ?

! மற்றவர் பேசுவதை கவனமாகக் கேட்டாலே ஒரு நல்ல ஆரம்பம்.

? எத்தனை சாமர்த்தியமாகப் பொய் சொன்னாலும், பெண்கள் சுலபமாகக் கண்டுபிடித்து விடுகிறார்களே ?

! பெண்கள் என்று சொல்லாதீர்கள். காதலிக்கும் பெண்கள், அத்தனை பொய்களையும் நம்புகிறவர்கள். பொய்யைக் கண்டுபிடிக்கும் திறமை படைத்தவர்கள் மனைவிகள்.

? நமது கூட்டுக் குடும்பங்கள் சிதைந்ததற்கு பிரதான காரணமாக எதைச் சொல்வீர்கள் ?

! சின்னச் சின்ன வீடுகளும், சின்னச் சின்ன மனங்களும்தான்.

? ‘காதலிக்கு ரோஜா, மனைவிக்கு மல்லிகை’ – யார் கொண்டு வந்த வழக்கம் இது ? மாற்றிக் கொடுத்தால் பிரச்சினையாகி விடுமா ?

! மலரை மாற்றினால் பிரச்சினை ஆகாது. பெயரை மாற்றினால்தான்!

? பெண்ணின் மனதில் இடம் பிடிக்க என்ன செய்ய வேண்டும் ?

! அவசரப்படக்கூடாது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s