சுஜாதா பற்றி R P ராஜநாயஹம்…


சுஜாதா பற்றி எல்லோரும் இப்போது தான் நிறைய பேர் சொல்லி முடித்திருக்கிறார்கள்.

அவரை பற்றி சொல்ல இனி ஒன்றுமில்லை.

சுஜாதா தமிழில் ஒரு Trend setter என்பதில் மாற்றுக் கருத்து யாருக்கும் இருக்க முடியாது.

 நைலான் கயிறு  விருப்பமில்லா திருப்பங்கள் Vanamenum+Veedhiyile_2

ஆனால் சுஜாதாவை நான் முழுமையாக படித்தவன். அவருடைய சிறுகதைகள் கனமானவை. அப்புறம் அந்த ‘வானமென்னும் வீதியிலே’ , ‘நைலான் கயிறு
அவருடைய ‘விருப்பமில்லா திருப்பங்கள்‘ நாயகன் கையில் பூமணியின் “பிறகு” . கணையாழியின் கடைசிப்பக்கங்கள், அறிவியல் கட்டுரைகள், அவருடைய பத்தி எழுத்து.

சுஜாதாவை ‘கரையெல்லாம் செண்பகப்பூ‘ டப்பிங் போது அவரை மிக அருகில் இருந்து ஒரு இரண்டு மணி நேரம் கவனித்து கொண்டிருந்தேன் . மனோரமா வந்தவர் உடனே டப்பிங் பேச ஆரம்பித்தார் . விளக்கை மீண்டும் போட்டவுடன் மனோரமா சுஜாதாவை பார்த்து விட்டு ‘அய்யய்யோ சார் நீங்க இங்கேயா உட்கார்ந்திருந்தீங்க ? நீங்க இருப்பது தெரிந்திருந்தா பயத்திலே என்னாலே பேசியிருக்கவே முடிந்திருக்காது . உளறிக் கொட்டியிருந்திருப்பேன் ‘ என்றார்.

பச்சை கட்டம் போட்ட சட்டை போட்டிருந்தார் சுஜாதா . மனோரமாவிடம் அவர் சமீபத்தில் பார்த்த ‘திருமலை தென்குமரி ‘ படத்தில் அவருடைய நடிப்பில் ஒரு குறிப்பிட்ட இடம் பற்றி “ஒரு எழுத்தாளருக்குரிய அப்சர்வேஷன் அது ‘ என பாராட்டினார். மனோரமா எப்போதும் போல் பரவசமாகி, ‘சார் உங்க கிட்ட பாராட்டு வாங்க கொடுத்து வச்சிருக்கணும் சார்’ என்றார்.


டப்பிங்குக்காக லூப்களை பின்னோக்கி ஓட்டும்போது ரிவர்சில் நடிகர்கள் அபத்தமாக விகாரமாக செய்கைகள் மாறுவது பற்றி “கொடுமை கொடுமைங்க . சம்பந்தபட்டவங்க பார்க்கும்போது நொந்து போயிடுவீங்களே” என்று மனோரமா, ஸ்ரீப்ரியா, தப்புத்தாளங்கள் சுந்தர் ஆகியோரை கிண்டல் செய்தார்.

நான் அவரிடம் பேசவே இல்லை. இரண்டு மணி நேரமும் ஜஸ்ட் அவரை அப்சர்வ் செய்துகொண்டிருந்தேன். அவரோடு வாசகனுக்கு பேசும் சூழல் இல்லை அது. சினிமாக்காரர்கள் சூழ சினிமா கனவுகளுடன் அந்த சுஜாதா .

மேலும் நானும் அப்போது அவரை (அதுவரை அவர் எழுதியிருந்த அத்தனையும்) முழுமையாக படித்திருந்த போதும் ஏதோ ஒரு தயக்கம் எனக்கு.

அவருடைய வார்த்தைகள் ” உண்மையான ரசிகர்கள், வாசகர்கள் நேரில் சந்திக்கிற, பேசுகிற ஜாதியில்லை.”

 விருப்பமில்லா திருப்பங்கள்

விருப்பமில்லா திருப்பங்கள்’ மாத நாவலாக வெளிவந்தது. கதையின் நாயகன் செல்வம் நல்லவன். படிப்பில் கெட்டிக்காரன். தேர்வு நாளின்போது சக மாணவன் ஒருவனுக்கு உதவி செய்யப்போய் அநியாயமாகத் தண்டிக்கப்படுகிறான். படிப்பு நின்றுபோய் அவனது வாழ்க்கையில் முதல் விருப்பமில்லா திருப்பம் நிகழ்கிறது. அவன் மீது அன்பும் நம்பிக்கையும் கொண்டிருந்த தாய் இறந்து போகிறாள். அதன் பிறகு சென்னைக்குச் செல்லும் செல்வத்தின் போக்கு திசை மாறி தப்புத் தப்பாகவே, கூடா நட்பும், போதை மயக்கமுமாக விருப்பத்திற்குரிய திருப்பம் ஒன்றுமே நிகழாமல் போய் மீளமுடியாத சுழலில் சிக்கிக் கொள்கிறான். இளைஞன் சிக்கியுள்ள சூழ்நிலையை சுஜாதா சித்திரிக்கிறார் என்பதைவிட எச்சரிக்கிறார் என்பதே இந்நாவலின் வெற்றியாகும்.

சுஜாதாவின் ‘விருப்பமில்லா திருப்பங்கள்’ நாவலில் இயற்பியல் பொதுத்தேர்வுக்கு முன் ஒரு மாணவன் ஒரு சிறிய சந்தேகத்தை மட்டும் எழுப்பாமல் இருந்திருந்தால் பல வருடங்கள் கழித்து ஒருவன் ஒரு கொலைகாரனாக மாறாமல் இருந்திருப்பான் என்பதுபோல் கதை முடியும்.

Vanamenum_Veedhiyile

ஒரு விமானம் நேரிசை வெண்பா எழுதினால் இப்படித்தான் இருக்குமோ ?

என்னை அடைந்து எனக்குள்
நுழைந்து விட்டீர்
சென்னைக்குப் போகின்ற
சிந்தனையோ? – என்னைப்
பறக்க வைக்கும் சக்தி
சிலசமயம் உம்மை
இறக்க வைக்கும். எச்சரிக்கை!

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s