6-மகா பெரியவா – அனுபவங்கள் ஆயிரம்


Periyavaa3

டாக்டர் எம்.நடராஜன், Skin Specialist, சென்னை-10 கூறுகிறார்…

பிரும்மஸ்ரீ சிவராம கிருஷ்ண சாஸ்த்ரிகள் என்பவர் ரிக் வேத விற்பன்னர். மடத்துக்குப் பெருமை சேர்க்கும் ஒரு மாமேதை.

கொடுமையான தோல்நோய் அவருக்கு. என்னிடம் சிகிச்சை பெற்று வந்தார்.

பேட்டையிலிருந்த சம்ஸ்கிருத பாடசாலையில் பேராசிரியராகவும் வேலை பார்த்து வந்தார் அவர். சிலசமயம், உரிய காலத்தில் வந்து என்னிடம் மருந்து வாங்கிக் கொள்ள மறந்து விடுவார். நான் அவருடைய மாணவர்கள் ஓரிருவரை அழைத்து மருந்து கொடுத்தனுப்புவேன். அப்படி மருந்து கொடுக்கும்போது, ஒரு சமயம் மாணவர்களிடம், “நான் சாஸ்திரிகளை மட்டும் காப்பாற்றவில்லை. அவரிடம் இருக்கும் ரிக் வேதத்தையும் சேர்த்து காப்பாற்ற முயல்கிறேன்” என்று விளையாட்டாகச் சொன்னேன்.

இந்தச் சொற்கள், பெரியவாள் செவிகளுக்குப் போய்விட்டது.

அடுத்த தடவை தரிசனத்துக்குப் போனேன்.

“நீ சாஸ்திரிகளைக் காப்பாற்றி வருகிறார். சந்தோஷம். ரிக் வேதத்தையும் காப்பாற்றுவதாகச் சொன்னாயாமே?”

“அவருக்கு மருந்தில் ஒரு அக்கறை வரவேண்டும் என்பதற்காக அப்படிச் சொன்னேன்…”

பெரியவாள் மெல்லப் புன்னகைத்தார்கள்.

“இவ்வளவு அக்கறையாக உன்னைப்போல் சொல்லக்கூடியவர்கள் எத்தனை பேர் இருப்பார்கள்…” என்று ஆசியுடன் பாராட்டினார்கள்.

மஹா பெரியவா அருள்வாக்கு : –

மனித அறிவின் எல்லையை மீறி அகண்டமாக (எல்லையற்றவர்களாக) ஆனவர்களே மஹரிஷிகள்.  உலகத்திற்கு அவர்கள் மூலமே வேதமந்திரங்கள்  வந்திருக்கின்றன.
நல்ல எண்ணங்கள் மக்களுக்கு உண்டாகிறது என்றால், அதை உண்டாக்குகின்ற சலனங்கள் (நுண்செயல்கள்) இருக்க வேண்டும்.  அவற்றிற்கான சப்தங்களும் இருக்க வேண்டும்.  இப்படிப்பட்ட சப்தங்களை நாம் உண்டாக்க முடியுமானால் உலகத்தில் உள்ள மக்களுக்கு நல்ல எண்ணங்கள் தோன்றிக்கொண்டே இருக்கும்.  அதன் மூலமாக சாதனைகளும், வெற்றிகளும், மனசாந்திகளும் பெருகிக்கொண்டே இருக்கும். இதைவிட உலகத்திற்கு பெரிய க்ஷேமம் என்ன இருக்கிறது ?  அப்படி எண்ணுவதற்கு அவர்களை தூண்டுகிற சக்தியை பெற்ற சப்தங்கள் தான் வேதமந்திரங்கள்.

இந்த வேத மந்திரங்களில் விசேஷம் என்னவென்றால்,  அர்த்தம் இல்லாமல், வெறும் சப்தரூபத்திலேயே அவை உலகத்திற்கு க்ஷேமத்தைச் செய்கின்றன.  இது மட்டுமில்லை,  அவற்றிற்கு உயர்ந்த அர்த்தமும் இருக்கிறது.   சகல வேதங்களும், பரம தாத்பர்யமாக, “ஒரே சத்யம் தான் இத்தனையாகவும் தோன்றியிருக்கிறது” என்று சொல்கின்றன.  இது தவிர, அவை சப்தங்களாக இருக்கும்போதே அந்தந்த சப்தத்திற்குறிய தேவதா ரூபங்களாகவும் இருந்து அந்தந்த தேவதையின் சாக்ஷாத்க்காரத்தையும் அநுக்ரஹத்தையும் நமக்கு ஏற்படுத்தி வைக்கின்றன.

அப்படிப்பட்ட வேதங்களை (மந்திரங்களை) உலகத்தில் நிலைத்திருக்கும்படியாகச்   செய்வதில் எல்லோரும் இதயபூர்வமாக முனைந்து செயலில் இறங்க வேண்டும்.  இது இப்போதுள்ள ஜன சமூகம் முழுவதற்கும்,  பிராம்மண ஜாதிக்கு மட்டுமல்ல,  சமஸ்த லோகத்திலும் உள்ள அதனை கோடி ஜீவராசிகளுக்கும் க்ஷேமம் உண்டாவதற்காக நீங்கள் செய்ய வேண்டிய கடமை.   தெய்வத்தால் விதிக்கப்பட்ட கடமை.  அதுவே தெய்வீகமான கடமையும் (Divine Duty) ஆகும்.

அப்படிப்பட்ட வேதத்தை அழிய விடக் கூடாது என்று சொல்லி, தொடர்ந்து வேத ரக்ஷணத்திற்கு  எதாவது ஏற்பாடு பண்ணுமாறு செய்ய வேண்டும் என்று தான் உங்களைக் கேட்க வந்திருக்கின்றேன்.  எனக்காக, உங்களுக்காக என்று வித்யாசம் எதற்கு?  நான், நீங்கள் எல்லாம் ஒன்றுதான்.  என் கார்யம் உங்கள் கார்யம். “வேதத்தை ரக்ஷித்து விட்டால்” அதுதான் எல்லோருக்கும் பரம ஸ்ரேயஸ்ஸை தருகிற ஒரே கார்யம். இதை செய்வதால் க்ஷேமம் உங்களுக்கு.  பெயர் எனக்கு.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s